குடியை மறக்க அம்மணி செய்த காரியம்!

Related image


ஆல்கஹாலுக்கு ஆப்பு

டெல்லியில் கணவரின் ஆல்கஹால் பாசத்தை மறக்கவைக்க அவரின் மனைவி செய்த எக்ஸ்பரிமென்ட் படுமோசமான ரிசல்ட்டை தந்துள்ளது. முடிவு? கணவர் பரலோகம் சென்றுவிட்டார்.


டெல்லியின் மந்திர்மார்க் பகுதியைச் சேர்ந்த மூர்த்திக்கு நிதி இலாகா மேனேஜர் பணி. ஆல்கஹாலில் அலாதி பிரியம் கொண்ட மூர்த்தி, முரட்டு மூர்க்கமாக குடித்தே குடும்பத்திற்கு பனிரெண்டு லட்சம் கடன் வாங்கிவைத்து சுமையானார். பிரச்னையில் தடுமாறிய மூர்த்தியின் மனைவி ரமா, தாந்த்ரீகரீதியில் கணவரை டீல் செய்தார். மர்ம மருந்தை தாந்த்ரீகர் உணவில் கலக்கச்சொல்ல, ரமாவும் ஓகே சொல்ல ஒரே டோஸில் கணவர் மூர்த்தியின் சோலி முடிந்துவிட்டது. மூர்த்தியின் தம்பி சிவா சர்மா ரமா மீது புகார் கொடுக்க அம்மணி அண்ட் கோ ஜெயிலில் ரெஸ்ட் எடுத்து வருகின்றனர்.




தாய்ப்பாலும் பிஸினஸ்தான்!

தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் தந்துதவும் பெண்களை பார்த்திருப்போம். தற்போது எக்சர்சைஸ் செய்பவர்களுக்கு சைரஸ் நாட்டைச் சேர்ந்த பெண்மணி தாய்ப்பால் கொடுத்து செம காசு பார்த்து வருகிறார்.

சைப்ரஸ் நாட்டைச் சேர்ந்த ரஃபேலா லாம்ப்ரூ, தன் மகன் ஏஞ்சலோ பிறந்த ஏழு மாதத்திற்கு பிறகும் மார்பில் பாலூறுவது குறையவில்லை. தாய்ப்பால் இல்லாத தாய்களுக்கு தன் பாலை பதப்படுத்தி கொடுத்துவந்தவரை ஜிம் பார்ட்டிகள் அணுகினர். பல்வேறு புரத உணவுகளை விட தாய்ப்பால் தசைகளை அழகாக்கும் என்பதால் ஜிம் பார்ட்டிகளும் ஒரு அவுன்ஸ் பாலை ஒரு யூரோவுக்கு(ரூ.80) வாங்குகின்றனர். தற்போதுவரை ஐநூறு லிட்டர்கள் தாய்ப்பாலை பாட்டில் போட்டு விற்றிருக்கிறார் ரஃபேலா. 


3

டீக்கடை கோடீசுவரர்!

பக்கோடாவோ, டீயோ எதை விற்றாலும் செய்யும் தொழிலை நேர்மையாக, அர்ப்பணிப்பாக செய்தால் லட்சுமி நம் கல்லாப்பெட்டியில் சம்மணமிட்டு உட்காருவாள் என்பதற்கு மகாராஷ்டிரா டீக்கடைக்காரர் எக்சாம்பிள்.

மகாராஷ்டிராவின் நவ்நாத் யேலே என்ற டீக்கடைக்காரர், தனது டீக்கடையில் ஸ்ட்ராங், மீடியம் என சாயா போட்டு போட்டியாளர்களை ஓரம்காட்டி சம்பாதிப்பது பனிரெண்டு லட்சம் ரூபாய். இது அவரின் ஆண்டு வருமானமல்ல; மாத வருமானம் என்பதுதான் பலருக்கும் ஷாக்! "பகோடா பிஸினஸ் மட்டுமல்ல; டீ விற்றாலும் வேலைவாய்ப்பு உருவாக்கலாம். இத்தொழிலின் வளர்ச்சியால் ஐயம் ஹேப்பி" என பூரிப்பாகிறார் நவ்நாத். பனிரெண்டு ஆட்களை வேலைக்கு அமர்த்தி மூன்று டீக்கடைகளை திறந்து பிஸினஸ் செய்துவருகிறார் நவ்நாத்

3
பெற்றோருக்கு ஜெயில்!

ஆர்வக்கோளாறில் பைக்கையும் காரையும் எடுத்து மைனர் சிறுவர்கள் ஓட்டுவது நகரங்களில் பெரும் தலைவலியாகி வருகிறது. இதற்கு அதிரடி தீர்வை கண்டறிந்திருக்கிறார்கள் ஹைதராபாத் போலீசார்.
என்ன தீர்வு அது?

வண்டி ஓட்டிய மைனர் சிறுவர்களின் பெற்றோர்களை பிடித்து ஜெயிலில் அடைப்பதுதான். தற்போது வண்டி ஓட்டிய பத்து மைனர் சிறுவர்களின் பெற்றோர்களை ஒருநாள் சிறையில் வைத்து எச்சரித்து அனுப்பியுள்ளது போலீஸ். கடந்த மாதத்தில் 35 பெற்றோர்களுக்கு இத்தண்டனை கிடைத்துள்ளது. மேலும் ஒரு சிறுவனுக்கு சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ஒருநாள் தங்கியிருக்கும் தண்டனையும் விதிக்கப்பட்டது. "லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டும் வழக்குகளை பதிந்தால் கோர்ட் உடனே அவர்களுக்கு சிறைதண்டனை அளித்துவிடும். இது பெற்றோர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புகிறோம்" என்கிறார் சாலைபாதுகாப்பு அதிகாரி வினோத்குமார் கனுமலா

பிரபலமான இடுகைகள்