கார்டன்: யார் நீ?



Image result for wealthman illustration


வரலாற்று சுவாரசியங்கள்
கார்டன்: யார் நீ?
ரா.வேங்கடசாமி


ஸ்காட்லாந்தில் பிரபலமானது கார்டன் குடும்பம். 1871 ஆம் ஆண்டு கார்டன், மின்னிசோட்டாவிலுள்ள வங்கியில் 40 ஆயிரம் பவுண்டுகள் பணம் டெபாசிட் செய்தார் என்பதை அறிந்த ஊர்மக்களே வியந்து போனார்கள். அது சரி யார் இந்த கார்டன் பிரபு? அப்போது சுற்றித்திரிந்த வதந்திகள் இரண்டு. ஒன்று, இவர் பாதிரியார் ஒருவருக்கும், வேலைக்காரிக்கும் பிறந்தவர் என்றும், செல்வாக்கான கௌரவமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பது இரண்டாவது.
ஆனால் கடத்தல் தொழிலில் கார்டன் சூப்பர் டான் என்பது பின்னர்தான் உலகுக்கு தெரிய வந்தது. எடின்பர்க்கிலுள்ள மார்ஷல் அண்ட் சன் என்ற நகைக்கடையில் கார்டன் வாங்கினார் ஆனால் கையெழுத்தை செய்ரீன் பிரபு என்ற பெயரில் போட்டார். 1843 ஆம் ஆண்டு பிறந்த கார்டன் பிரபு, தன் இருபத்தேழு வயதில் செய்ரீன் பிரபுவின் அளவற்ற சொத்துக்களுக்கு வாரிசு ஆவார் எனவும் நம்பப்பட்டது.


மின்னிசோட்டாவில் ஸ்காட்லாந்திலிருந்து நிறைய குடித்தனக்காரர்களை இங்கே வரவழைத்து தான் வாங்கியுள்ள நிலத்தில் தங்க வைக்கப்போகிறேன் என திடீரென அறிவித்தார் கார்டன். இதற்கு உதவியவர் அதிகாரி ஜான் லூயிஸ். எர்ரி ரெயில்ரோடு பிரச்னையில் சம்பந்தப்பட்ட ஜே கவுல்டு என்பவரை மிரட்டிய கார்டன், அவரது 20 ஆயிரம் பங்குகளை ஒரு பங்கு 35 என வாங்கினார். பணம் தரவேண்டுமே? கொடுத்த பணத்தில் பதினைந்தாயிரம் பவுன்கள் மட்டுமே இல்லை. உடனே போலீசில் கவுல்டு பிரபு புகார் கொடுத்தார். கார்டன் தன் ஸ்காட்லாந்து குடும்பத்தினரின் முகவரிகளை வழக்குரைஞர் மூலம் கோர்ட்டில் சமர்ப்பித்துவிட்டு எஸ்கேப்பானார். கவுல்டுக்கு சந்தேகம் ஏற்பட, உடனே கார்டன் பற்றி துலக்கமாக அனைத்து ஏரியாவிலும் விசாரித்தார். அப்படி ஒரு பிரபு இல்லவே இல்லை என தகவல் வரும்போது கார்டன் மான்ட்ரீல் நகருக்கு ஷேர் ஆட்டோ டூ ரயில் பிடித்து சென்றுவிட்டார்.

கார்டனுக்கு ஜாமீன் கையொப்பமிட்டவர்கள் 37 ஆயிரம் பவுன் கடனுக்கு அதிபதியானார்கள். ஜாலியாக எஸ்கேப்பான கார்டன் வின்னிபெக் நகரில் ஹாயாக ஈஸிசேரில் படுத்தபடி வைன் குடித்துக்கொண்டிருந்தார். 1893 ஆம் ஆண்டு கார்டனை அமெரிக்காவுக்கு போலீஸ் கைது செய்து அழைத்து செல்ல முயன்றாலும் சட்டச்சிக்கலால் அந்த டாஸ்க்கும் தடைபட்டது. அமெரிக்க அதிபர் யுலிசஸ் எஸ் கிராண்ட் மற்றும் கனடா பிரதமர் சர்ஜான் மெக்டொனால்டு தலையீட்டால் கார்டன் கைதாகும் சூழல் உருவானது. மார்ஷல் அண்ட் சன்ஸ் ஓனர் தன் தாமஸ் ஸ்மித் என்ற தன் கிளர்க்கை அனுப்பி கார்டனை அடையாளம் காட்டச்சொன்னார். அவரின் உதவியால் கார்டனுக்கு தண்டனை உறுதியானது. 1874 ஆம் ஆண்டு விலைமாதின் வீட்டில் இருந்தபோது தன்னைத்தானே தலையில் சுட்டுக்கொண்டு இறந்துபோனார் கார்டன். அவரின் மரணத்தோடு கார்டன் குடும்பம், அவர் யார் என்ற ரகசியங்கள் அனைத்தும் விடைகாணாமலேயே மறைந்து போயின.

                            

பிரபலமான இடுகைகள்