குழந்தைகளுக்கான நூல்கள்!
புத்தகம் புதுசு!
The Parker
Inheritance
by Varian Johnson
352 pages
Arthur A. Levine
Books
அமெரிக்காவின்
சவுத் கரோலினாவிலுள்ள வீட்டில் உள்ள நூலில் கடிதம் ஒன்று காத்திருக்கிறது. யாருக்காக?
கேன்டிஸ் மில்லருக்காக. பல ஆண்டுகளுக்கு முன்பு
நிகழ்ந்த அநீதியை கண்டுபிடிக்கும் புதிரை அவிழ்க்கும் வாய்ப்பு கேன்டிஸ் மில்லரின்
பாட்டிக்கு முன்பு கிடைத்தாலும் அதில் அவர் தோல்வியுறுகிறார். கேன்டிஸ் மில்லர் தன் தோழன் பிரான்டன் ஜோன்ஸ் மூலம் அப்புதிரை எப்படி கண்டறிகிறாள்
என்பதே கதை.
The Sky at Our Feet
by Nadia Hashimi
304 pages
HarperCollins
ஆப்கானிஸ்தானைச்
சேர்ந்த சிறுவன் ஜேசன், தந்தை படுகொலையானபின் அமெரிக்காவில் சட்டத்திற்கு
புறம்பாக வாழத்தொடங்கிய தாயின் மூலம் பிறந்தவன். இந்த விஷயங்கள் தெரிந்தபின் இருவரும்
பிரிந்துவிடுகின்றனர். நியூயார்க்கிலுள்ள தன் அத்தையுடன் வாழும்
ஆசையில் பயணிக்கிறான் ஜேசன். அப்போது சாலையில் நேரும் விபத்தில்
ஜேசன் சிக்க, மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். அங்கு நட்பாகும் மேக்ஸ் என்ற சிறுமி மூலம் மருத்துவமனையிலிருந்து தப்புபவன்
தன் அத்தையை சந்தித்தானா? மேக்ஸ் யார் என்ற கேள்விக்கு பதில்
சொல்லுகிறது கதை.