'சீனா விரிக்கும் கடன்வலை' நேபாளம் தப்பிக்குமா?
முத்தாரம் நேர்காணல்
"சீனாவின் கடன்வலையில் நேபாளம்
சிக்கிவிடக்கூடாது என்பதே எனது
கவலை"
கனக்மணி தீக்ஷித்,
பத்திரிகையாளர்
தமிழில்: ச.அன்பரசு
நேபாளத்தில்
பத்திரிகை சுதந்திரத்திற்காக செயல்பட்டு வரும் கனக்மணி தீக்ஷித், நேபாள அரசால் 2016 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
அங்குள்ள அரசியல் நிலைமைகள் பற்றி பேசுகிறார் கனக்மணி தீக்ஷித்.
மூன்று கட்டங்களாக நடைபெறும் தேர்தல் மூலம் புதிய
பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில் அரசு மீது நம்பிக்கை உள்ளதா?
நேபாளத்தில் நிகழ்ந்த பத்தாண்டு கால வன்முறையையும், இனக்குழுக்களிடையே சமரசம் ஏற்படுத்தவும் உதவியது அரசியலமைப்பு சட்டம்தான்.
அதில் குறைகள் குழப்பங்கள் இருந்தாலும் அவசியமான ஆவணம் அது. பத்தொன்பது ஆண்டுகளாக நடைபெறாத உள்ளாட்சி தேர்தல் தற்போதும் நடைபெறாவிட்டால்
மக்களின் குரல் அரசுக்கு இனிமேலும் கேட்காது. பல்வேறு பிரச்னைகள்
மக்களை கொந்தளிப்பில் ஆழ்த்தினாலும் அரசியலமைப்புச்சட்டம் மட்டுமே நாட்டை காப்பாற்றும்.
முன்னாள் பிரதமர், இந்தியாவின் தடையை எதிர்த்து
சீனாவை ஆதரித்தது மக்களால் வரவேற்கப்பட்டது. கடந்த பத்தாண்டுகளில்
எந்த கட்சியும் ஓராண்டு நிலையாக ஆட்சி செய்ததில்லை. கூட்டணி ஆட்சியாக
மட்டுமே ஐந்தாண்டு நிறைவு செய்வது சாத்தியம்.
நேபாளத்தில் ஆதிக்கம் செலுத்தும் பழங்குடி இனம்
இல்லாதது பின்னடைவான விஷயமா?
சிறிய இனக்குழுக்களைக் கொண்ட நாடு நேபாளம் என்பது
உண்மை.
அது பலம்தான் பலவீனமல்ல. மக்கள்தொகையில் பதினாறு
சதவிகிதம் இருப்பது ஹில் சத்ரியா என்ற இனக்குழு. ஹில் பிராமின்ஸ்
மக்களின் அளவு பனிரெண்டு சதவிகிதம். பிற மக்கள் அனைவரும் சிறுபான்மையினர்தான்.
ஆனால் ஆதிக்கம் என்பது இங்கு சரிபட்டுவரவில்லை. இலங்கையில் எழுபது சதவிகிதம் சிங்களர் இருப்பது போல நேபாளத்தில் எந்த இனமும்
பெரும்பான்மை பெறவில்லை.
நேபாளத்திலுள்ள மக்கள் தீவிரமாக இந்து மதத்தை பின்பற்றி
வருபவர்கள். இந்தியாவில் வளர்ந்துவரும் பாஜக
போல இங்கும் வலதுசாரி இந்து கட்சி தோன்ற வாய்ப்புள்ளதா?
அப்படி ஒரு நிலை உருவாகாது என நம்புகிறேன். கடந்த தேர்தலில் இந்துத்துவவாதிகளுக்கு மக்கள் எந்த வாய்ப்பையும் தரவில்லை.
இங்குள்ள பல்வேறு கலாசாரங்கள் இந்துத்துவத்தை உருவாக்கவிடாது.
ஆனால் இந்தியாவின் பாஜக-ஆர்எஸ்எஸ் அரசு அப்படி
ஒரு அரசை நேபாளத்தில் உருவாக்கவும் வாய்ப்புள்ளது. அப்படி அமைந்தால்
நேபாள சமூகத்திற்கு பெரும் பேரழிவு நிகழும்.
இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில்
நேபாளம் ஒரு முக்கியமான நாடு. இப்போது சீனா இதில் உள்ளே நுழைய
இந்தியாவின் நடவடிக்கைகளும் தற்போது மாறிவருகிறதே?
நேபாளத்தில் இந்தியா முதலில் தலையிட்டுவந்த இடத்தை
இன்று சீனா எடுத்துக்கொண்டுள்ளது. சூ என்லாய், மாவோ ஆகியோரின் காலகட்ட உறவுகளையும் பார்க்கவேண்டும். சீனா தற்போது திபெத்தை தனது சொத்தாக்கிவிட்ட சூழலில் தாராளமய உலகமய சூழல்,
கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணைகள் உருவாகிவிட்ட நிலையில் இமாலயம்
இந்தியாவுக்கு பெரிய பாதுகாப்பாக இருக்கப்போவதில்லை. 2002 ஆம்
ஆண்டு பூடானின் ஹாசா, ஷிகாஸ்டே பகுதிக்கு ரயில் வந்துவிட்டது.
2020 ஆம் ஆண்டில் நேபாளத்தில் வடக்கு காத்மாண்டுவில் ரயில் வந்துவிட்டால்
அரசியல் பொருளாதாரம் என பயன்கள் நிறைய கிடைக்கும். ஆனால்
லங்கா, ஆப்பிரிக்காவை சீனா கடன் வலையில வீழ்த்தியதுபோல
நேபாளமும் இதில் சிக்காமல் கவனமாக இருப்பது அவசியம்.
நன்றி: R.K.
RADHAKRISHNAN, frontline.in/
வெளியீடு: முத்தாரம்