"என் மகனைக் கொன்றவர்கள் மனிதர்களே அல்ல"- இம்தாதுல்லா ரஷீதி




Image result for kolkata ram navami violence



முத்தாரம் நேர்காணல்


இம்தாதுல்லா ரஷீதி, நூரானி மசூதி இமாம்(அசன்சோல்)
தமிழில்: .அன்பரசு




Image result for kolkata ram navami violence



மேற்கு வங்கத்தில் அசன்சோல் நகரில் நடைபெற்ற ராமநவமி விழாவின்போது சிப்துல்லா என்ற பத்தாம்வகுப்பு மாணவன் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்க துடித்த தன் உறவினர்களை இறந்த சிப்துல்லாவின் தந்தையும் மசூதி இமாமுமான இம்தாதுல்லா ரஷீதி தடுத்துள்ளது நாடெங்கிலும் மக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.

உங்கள் மகனின் படுகொலைக்கு பின்னே யார் உள்ளனர்?
போலீசில் புகார் கொடுத்துள்ளோம். என் மகனைக் கொன்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மனிதர்களே அல்ல.

நிலைமையை எப்படி சமாளித்தீர்கள்?


எனது மகன் படுகொலை செய்யப்பட்டதும் எங்கள் சமூகத்தில் கடுமையான எதிர்வினை உருவானது. நமாஸ் செய்தபின் அனைவரையும் ஓரிடத்தில் அழைத்து பேசினேன். யாரேனும் பழிக்குபழி என இறங்கினால் நான் அசன்சோல் நகரை விட்டு சென்றுவிடுவேன் என எச்சரித்ததோடு இஸ்லாம் ஈவிரக்கமற்ற கொலைகளையும் தாக்குதல்களை ஏற்றுக்கொள்வதில்லை என அறிவுறுத்தினேன். கோபத்துடன் இருந்தவர்களில் பெரும்பாலோர் எனது மாணவர்கள். முதலில் அழுதவர்கள் பின் எனது அறிவுரையைக் கேட்டு அமைதியாக வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

உங்கள் மகன் சிப்துல்லா உடல் எப்படி மீட்கப்பட்டது?

நான் சிப்துல்லாவின் சிதைந்துபோன உடலை பார்க்கவில்லை. அது என்னை கடுமையாக மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியது. எனது சகோதர, சகோதரிகள் அனைவரும் இதற்கு பழிக்குபழி வாங்க துடித்தனர். என் நான்காவது மகனான சிப்துல்லா, பத்தாவது தேர்வை எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்த நேரத்தில் நேர்ந்த கொடூரம் இது. அமைதிக்காக இறைவன் வேண்டினால் என் பிள்ளைகளை பலியிடவும் தயாராக இருக்கிறேன். ஆனால் அதற்காக அப்பாவிகள் இறப்பதில் எனக்கு சம்மதமில்லை. என் மகனைக் கொன்றவர்களை நாங்கள் தண்டிக்க மாட்டோம். இறைவன் பார்த்துக்கொள்வான்.

மகனின் கொலைக்கு காரணமானவர்கள் உள்ளூர்காரர்களா?

இல்லை. நான் அப்படி நம்பவில்லை. இங்கு முப்பது ஆண்டுகளாக வசித்து வருகிறேன். இப்பகுதியிலுள்ள மனிதர்கள் நான் நன்கு அறிவேன். எனது தாத்தா சுதந்திர போராட்டவீரர்கள். பூர்வீகம் பீகாராக இருந்தாலும் இங்கே வசிக்க தொடங்கி பல்வேறு சமுதாயத்தினரும் உறவினர்கள் போல பழகி வருகிறோம். அன்பையும் தேசபக்தியையும் மதம் கடந்து எனது மாணவர்களுக்கு போதித்து வருகிறேன்.

-Rabi Banerjee,the Week