"காலனியாதிக்கம் தாய்மொழியை அழிப்பது ஏன்?"- கூகிவா தியாங்கோ
முத்தாரம் நேர்காணல்
"தாய்மொழியில் எழுதுவது அவமானமல்ல''
கூகிவா தியாங்கோ, கென்யநாட்டு எழுத்தாளர்
தமிழில்:
ச.அன்பரசு
நாவல்களை உங்களது தாய்மொழியில் எழுத தொடங்கியது ஏன்? அந்த எண்ணம் தோன்றியது எப்படி?
நான்
முதலில் எனது நான்கு நாவல்களையும்(The River Between, Weep not Child, A Grain of Wheat,
Pedals of Blood) ஆங்கிலத்தில்தான் எழுதினேன்.
1977-78 ஆம்
ஆண்டுகளில் மிகவும் கெடுபிடிகள் நிறைந்த சிறையில் அடைக்கப்பட்ட போது
Ngaahika Ndeenda எனும்
நாடகத்தை தாய்மொழியான G1 kuyu வில் எழுதினேன்.
காலனியாட்சி மற்றும் தாய்மொழி பற்றி சிந்தனை உருவானபின்தான் ஆங்கிலத்திலிருந்து எனது தாய்மொழிக்கு மாறினேன்.
முதல் நாவலை கழிவறைத் தாளில்தான் எழுதினேன்.
Caitaani mu tharabaini என்ற பெயரில் எழுதப்பட்டு பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. ஆப்பிரிக்க மொழியில் எழுதுவது அவமானமோ, வெட்கமோ தரும் ஒன்றல்ல.
ஆர்.கே. நாராயணன், முல்க்ராஜ் ஆனந்த், சல்மான் ருஷ்டி ஆகியோரின் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன்.
உங்களது படைப்புகளில் காலனியாதிக்கத்திற்கு பிறகான நிலைமைகளைப் பற்றி பேசுவதை விளக்க முடியுமா?
ஆப்பிரிக்க நாடுகளுக்கு மேற்கு நாடுகள் உதவியுள்ளதாக நினைக்கிறீர்களா?
மேற்குலகு ஆப்பிரிக்காவின் இயற்கை வளத்தை தொண்ணூறு சதவிகிதம் பயன்படுத்திவிட்டது. ஆனால் கயமைத்தனமாக ஆப்பிரிக்க நாடுகளுக்கு மானியம் அளித்து உதவுவதாக கூறிக்கொள்வது அவர்களின் வழக்கம்.
இப்படி பேசுவதன் மூலம் தாம் ஏற்படுத்திய சீரழிவை இயல்பானதாக உலகின் பார்வைக்கு மேற்கு நாடுகள் மாற்றுகின்றன.
அண்மையில் இந்தியாவிற்கு நீங்கள் வந்தபோது என்ன உணர்ந்தீர்கள்?
விரைவில் வெளிவரவிருக்கும் Wrestling with the Devil என்ற நூலில் உங்கள் வாழ்க்கையைப் பற்றி வாசகர்கள் அறிந்துகொள்ள என்ன விஷயம் இருக்கிறது?
நன்றி:Pradhuman
sodha,Kyla Marshell TOI, theguardian.com