சீனாவின் குவாரி ஹோட்டல்!







சீனாவின் குவாரி ஹோட்டல்!



சீனாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஹோட்டல் எங்கு அமைந்துள்ளது தெரியுமா? கைவிடப்பட்ட கல்குவாரியில். நிலத்திலிருந்து எண்பது மீட்டர் கீழே அமைந்துள்ள இந்த ஹோட்டல் விரைவில் கட்டி முடிக்கப்படவுள்ளது.
ஹோட்டலின் 16-18 மாடிகள் குவாரியில் உள்ள ஏரி நீரில் பாதியும், நிலத்தின் கீழே பாதியும் உள்ளது. மொத்தம் 336 அறைகள். ஷேசன் ஷிமாவோ குவாரி ஹோட்டல் வரும் மே மாதத்திற்கு பிறகு திறக்கப்பட வாய்ப்புள்ளது. இங்கிலாந்து நிறுவனமான அட்கின்ஸ் மற்றும் சீன நிறுவனங்களின் பங்கேற்பில் உருவாகிவரும் இந்த ஹோட்டலை "புவிஈர்ப்புவிசைக்கு எதிரான போரை நடத்தி கட்டினோம்" என்கிறார் திட்டப்பொறியாளர். 111 கோடி ரூபாயில் 2012 ஆம் ஆண்டு தொடங்கிய ஹோட்டல் வேலை பல்வேறு தடைகளால் தடுமாறி விரைவில் திறக்கப்படவிருக்கிறது.

2

முத்தாரம் லைப்ரரி
The Problim Children 
by Natalie LloydJúlia Sardà (Illustrator)
304 pages
Katherine Tegen Books

ஏழு குறும்பான சகோதர சகோதரிகள் தங்கள் செல்லப்பிராணி பன்றியுடன் விருப்பமேயின்றி லாஸ்ட் கோவ் எனுமிடத்திலுள்ள தாத்தாவின் பங்களா ஒன்றுக்கு இடம்பெயர்கிறார்கள். அங்கு குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள்தான் கதை. மந்திரம், தந்திரம், பொக்கிஷத்திற்கான க்ளூக்கள் என சுவையான கதையில் நடாலியா குழந்தைகளுக்கு அற்புத உலகை ஓவியர் ஜூலியாவுடன் நமக்கு காட்டுகிறார்.  

DC Super Hero Girls: Date with Disaster! 
128 pages
 DC Comics

டிசி காமிக்ஸைச் சேர்ந்த ரகளையான சூப்பர்கேர்ள்ஸின் சங்கமமே இப்புத்தகம். ஸ்டார் அறிவியல் ஆய்வகத்தின் திடீரென வெடிகுண்டு வெடிக்க கச்சை கட்டி தீரத்தோடு கிளம்புகிறார்கள் பேட்கேர்ள் உள்ளிட்ட சூப்பர் பெண்கள். கதையில் என்னென்ன திருப்பங்கள் என்பதை அறிய ஷியா ஃபான்டனா எழுதிய இந்த நூலை நீங்கள் படித்தே ஆகவேண்டும்.

நன்றி: முத்தாரம்