நறுக் செய்திகள்!



Image result for odisha patnaik





 ஒடிஷாவின் சானிடரி பாதுகாப்பு!

ஒடிஷா மாநில அரசு, பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த பதினேழு லட்சம் சானிடரி நாப்கின்களை வழங்க பிளான் செய்துள்ளது.

ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு சானிடரி நாப்கின்களை விலையின்றி வழங்கும் திட்டத்தை முதல்வர் நவீன் பட்நாயக் தொடங்கி வைத்தார். "குஷி எனும் பெண்களுக்கான சுகாதார மேம்பாட்டுத்திட்டத்தை தொடங்கி வைப்பது மகிழ்ச்சி. அரசு மற்றும் அரசு உதவித்தொகை பெறும் பள்ளிகளிலுள்ள பதினேழு லட்சம் மாணவிகள் இதன் மூலம் பயன்பெறுவார்கள்" என்று பேசினார் முதல்வர் நவீன் பட்நாயக். மாணவிகளுக்கு நாப்கின்கள் இலவசம் என்றாலும் மானியவிலையில் கிராமப்புற பெண்களுக்கும் நாப்கின்களை ஆஷா பணியாளர்கள் மூலம் ஒடிஷா அரசு வழங்கிவருகிறது.



3
ராணியின் ஹேண்ட்பேக்!

இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் அவரின் தோளில் தொங்கும் ஹேண்ட்பேக்கை கவனித்திருப்பீர்கள். ஏறத்தாழ ஒரே ஸ்டைலிலான பேக்கை அனைத்து ஃபங்ஷன்களுக்கும் ஏன் கொண்டுவருகிறார்?

ராணி பயன்படுத்தும் பேக்கை இங்கிலாந்தைச் சேர்ந்த லானர் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. சிம்பிளான இந்த பேக்கை எலிசபெத்தின் அம்மா சிறுவயதில் குட்டி எலிசபெத்துக்கு பரிசளிக்க, அதைப்போலவே உள்ள இந்த பேக்கை தன் எழுபத்து ஏழு வயதிலும் விடாமல் வைத்திருக்கிறார் ராணி. "ராணிக்கு பலவகை பேக்குகளை உருவாக்கித் தந்தாலும் அவர் இந்த பேக்கை மட்டுமே செலக்ட் செய்தார். இந்த பேக் இன்றி அவர் எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில்லை" என்கிறார் லானர் நிறுவனத்தின் இயக்குநரான ஜெரால்ட் போட்மர்.

4

ஜிலு ஜிலு ஏசி ஹெல்மெட்!

சாதாரண ஹெல்மெட்டை கர்ச்சீஃப் உதவியுடன் தலையில் அணிந்து ரூல்ஸை காப்பாற்றுவது சரி. ஆனால் வெயில் சூட்டில் ஹெல்மெட் அணிவது பேரவதி.ஹைதராபாத்  எஞ்சினியர்களின் ஏசி ஹெல்மெட் இருக்க டென்ஷன் எதற்கு?

ஹைதராபாத்தைச் சேர்ந்த கவுன்டின்யா, காந்த், ஆனந்த் ஆகிய மூன்று மெக்கானிக்கல் எஞ்சினியர்களும் இணைந்து ஐயாயிரம் விலையில் ஏசி ஹெல்மெட்டை கண்டுபிடித்துள்ளனர். 2016 பேட்ஜ்களான இம்மூவரும் இதற்கு முன்பு தொழிற்சாலைக்கான ஏசி ஹெல்மெட்டை கண்டுபிடித்தவர்கள், தற்போது அதே டெக்னாலஜியை பைக் ஹெல்மெட்டுக்கு மாற்றியுள்ளனர். இந்திய கடற்படை, டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த ஹெல்மெட்டுகளை வாங்க திட்டமிட்டுள்ளன. மேலும் தெலுங்கானா அரசு இம்மூவரின் முயற்சியை பாராட்டியுள்ளது.

6
பைக் டாக்டர்ஸ் ரெடி

ஆக்சிடென்ட் நடந்து ஆம்புலன்ஸ் வருவதற்குள் முதலுதவிசெய்தால் பலியாகும் உயிர்களை உடனே காப்பாற்றலாமே என்ற சிந்தனையில் பைக் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது

குழந்தை காயினை முழுங்கியது முதல் பக்கவாதம் வரையில் பக்காவாக ஃபர்ஸ்ட் எய்ட் தருகிறார்கள். 108 க்கு போன் செய்தால் ஆம்புலன்ஸ் லேட்டானாலும் பைக்கில் வேகமாக சம்பவ இடத்திற்கு வந்து முதலுதவி செய்கிறது இந்த எமர்ஜென்சி டாக்டர் படை. இவ்வசதியை மகாராஷ்டிரா அரசு(MEMS) அமுல்படுத்தியுள்ளது. முதலுதவிக்கு உதவியாக பேண்டேஜ், ஆன்டிசெப்டிக் மருந்துகள், ஆஸ்துமா, நெஞ்சுவலி,பக்கவாதம், எலும்பு முறிவு இவற்றுக்கான மருந்துகளை டாக்டர்கள் தம் கிட்டில் வைத்திருக்கின்றனர். பஞ்சாப், பெங்களூரு ஆகிய இடங்களில் பைக் ஆம்புலன்ஸ் சேவை செயல்பாட்டில் உள்ளது.

7

ராணுவத்தில் பெண்கள்!

முஸ்லீம் நாடுகளில் பெண்கள் மீதான கட்டுப்பாடுகளின் இறுக்கம் அதிகம். பெண்களுக்கான ட்ரைவிங் லைசென்ஸ் பிளானை அறிவித்த சவுதி அரேபியா, அதிரடியாக பெண்களை ஆர்மியில் சேர்க்கவும் தயார் என சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மன்னர் சல்மான் மற்றும் அவரது மகன் முகமது சல்மான் ஆகியோரின் ஆட்சியில் சவுதி அரேபியா, பல்வேறு சீர்திருத்தங்களை செய்துவருகிறதுரியாத், மெக்கா, அல்க்வாசிம், அல்மதினா ஆகிய நகரங்களைச் சேர்ந்த பெண்கள் ராணுவத்தில் இணையலாம் என அரசின் பொது பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. 25-30 வயதுக்குட்பட்ட மணமாகாத சவுதி குடிமகள்கள் இதற்கு அப்ளை செய்யலாம். 2030 க்குள் சவுதி அரேபியாவில் பல்வேறு சீர்த்திருத்தங்களை செய்ய மன்னரும் இளவரசரும் ஆர்வமாக உழைத்து  வருகின்றனர்.

நன்றி: குங்குமம்

பிரபலமான இடுகைகள்