"பிரதமர் பற்றி கவலையாக இருக்கிறது!" - சஷிதரூர்


Image result for sasitharur newbook



முத்தாரம் Mini

சஷிதரூர் அண்மையில் why iam a hindu என்ற நூலை எழுதியுள்ளார். இதில் ஆளும் கட்சியின் இந்துத்துவா அரசியலைப் பற்றியும் கடுமையாக விமர்சித்துள்ளார். 

நூலுக்கு ஏன் இந்த தலைப்பு?

ஆளும் சக்திகளின் இந்து நம்பிக்கை நெருக்கடிகளைப் பற்றிக்குறிப்பிட வேறு தலைப்பு பொருத்தமாக இருக்காது. விவேகானந்தவர் வழியிலான சகிப்புத்தன்மை கொண்ட இந்துகள், இன்னொருவர் ஆங்கிலமுறை போக்கிரி இந்துகள் என இருவருக்குமான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்துத்துவா மற்றும் இந்துயிஸம் ஆகியவற்றை குறிப்பிடுகிறதா?

இந்துத்துவா என்பது அரசியல் கருத்தியல். இது மதத்தை குறிப்பதல்ல. மதம் எனும் சுவரில் தங்கள் கருத்தியல் எனும் ஆணியை அடித்து மக்களை அலைகழிக்கிறார்கள்.

வரலாற்றை திருத்தி எழுதும் காலமிது. இது படைப்பாளிகள், அறிஞர்களை எப்படி பாதிக்கிறது?

வரலாற்றை மாற்றி எழுதுவது இறந்தகாலத்தை மறுப்பதும் கூடத்தான். தங்கள் நேர்மை மூலம் காரணங்களை அறிந்து வரலாற்றை காப்பாற்றுவதே இந்திய அறிஞர்களின் அர்ப்பணிப்பான பணி.

அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற பலரும் கூக்குரலிடுகின்றார்களே?

பிரதமர் அரசியலமைப்புசட்டத்தை புனித நூல் என்பவர் தீன்தயாள் உபாத்யாயாவை ஹீரோவாக கருதி அவரின் கருத்தியலை புகழ்கிறார். இது கவலைப்படவேண்டிய விஷயம்.

-சஷிதரூர், எழுத்தாளர், நாடாளுமன்ற உறுப்பினர்.