ரஷ்யாவுக்கு தடை!
caricature:fred harper |
ரஷ்யாவுக்கு தடை!
ரஷ்யா அமெரிக்காவின்
கணினிகளில் செய்த தகவல் கொள்ளை விவகாரம் சூடுபிடித்துள்ளது. அமெரிக்க
கருவூலத்துறை ரஷ்யா மீது டஜன் கணக்கில் தடைகளை விதிக்க தயாராகிவிட்டது. இத்தடைகளால் அமெரிக்கர்கள் யாரும் தடை செய்துள்ள அமைப்புடன் வியாபாரம்,
பணப்பரிமாற்றம் செய்ய முடியாது. "அமெரிக்க
அதிபர் தேர்தல் உள்ளிட்ட விவகாரங்களில் ரஷ்யா நடத்திய சைபர் தாக்குதல்களின் விளைவு
இது" என்கிறார் கருவூலத்துறையின் செயலாளாரான ஸ்டீவ் நூச்சின்.
அமெரிக்காவின்
மத்திய வங்கி,
போக்குவரத்து துறை, மின்சாரநிலையங்கள் ஆகியவற்றை
முடக்கிய ரஷ்ய உளவுத்துறை சார்ந்த ஆறு நபர்களை உள்ளடக்கியது. ரான்சம்வேர் தாக்குதல் உள்ளிட்டவற்றில் பணம்பறிக்கும் வேலை நடைபெற்றது என்றாலும்
தண்டிக்கும் நோக்கமே அதில் பிரதானம். ரஷ்யாவின் இணைய ஆராய்ச்சி
நிறுவனங்களைச் சேர்ந்த பத்தொன்பது நபர்கள் மற்றும் ஐந்து அமைப்புகள் மீது தடை விதிக்கப்படவிருக்கிறது.
சிரியா தாக்குதல், முன்னாள் உளவாளியின் மேல் விஷத்தாக்குதல்
என திட்டம்போட்டு குற்றம் செய்யும் ரஷ்யாவுக்கு நெருக்கடி தொடங்கிவிட்டது.
2
புரோட்டான் பேட்டரி!
நவீன எலக்ட்ரானிக்ஸ்
பொருட்களில் பெரிதும் பயன்படுத்தப்படுவது லித்தியம் பேட்டரிகள்தான். ஆனால்
லித்தியத்திற்கு மாற்றாக ஆஸ்திரேலியாவிலுள்ள ஆர்எம்ஐடி பல்கலையில் புதிய பேட்டரியை
தயாரித்துள்ளனர். கார்பன் மற்றும் நீர் மட்டுமே இப்பேட்டரிக்கு
ஆதாரம்.
அரிதான விலை அதிகம்
கொண்ட லித்தியம் சில நாடுகளிலும் மட்டும் கிடைக்கக் கூடியது. கார்பனை
ஆதாரமாக கொண்ட புரோட்டான் பேட்டரி, சூழலுக்கு ஏதுவானது.
"நீரிலுள்ள புரோட்டான்களை பெற்று பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளும்
வசதி இதிலுள்ளது" என்கிறார் ஆராய்ச்சியாளர் ஜான் ஆண்ட்ரூஸ்.
5.5 ச.செமீ இடத்தில் அதிகளவு மின்சக்தியை சேமிக்கலாம்.
சந்தைக்கு வரும்போது டெஸ்லாவின் பவர்வால் பேட்டரிக்கு இது சவாலாக இருக்கலாம்.
3
காட்டுத்தீ பயங்கரம்!
2016 ஆம்
ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் 4000 ஏக்கர் வனப்பகுதியை காட்டுத்தீ
பொசுக்கியது. 2016(டிசம்பர் வரை) ஆம் ஆண்டுவரை
இந்தியக்காடுகளில் ஏற்படும் காட்டுத்தீயின் அளவு 55 சதவிகிதமாக
அதிகரித்துள்ளது என்று நாடாளுமன்றத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உறுப்பினர்களின்
அறிக்கை தகவல் தெரிவிக்கிறது.
இந்தியாவில் ஜார்க்கண்ட், கர்நாடகா,
மத்தியப்பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், ஒடிஷா ஆகிய மாநிலங்கள் காட்டுத்தீயில் அடிக்கடி
பாதிக்கப்படும் மாநிலங்கள்.
கற்கள் உராய்வு, காய்ந்த
மரங்கள் மின்னல் மூலமாக தீப்பற்றுவது இயற்கையான காரணங்கள் தவிர, காட்டில் வழித்தடம் அமைப்பது, விவசாயம் செய்வது மூலமும்
காட்டுத்தீ ஏற்படுகிறது.
வனப்பகுதி நெருப்பினால்
அல்லது தொழில் முயற்சிக்காக எடுத்துகொள்ளப்பட்டால் அதற்கு நஷ்ட ஈடாக மாநிலங்களில் செலவழிக்காமல்
உள்ள திட்டப்பணத்தை பயன்படுத்த Compensatory Afforestation Fund Bill (CAF) 2015 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டுள்ளது. காடுவளர்ப்பு திட்டத்தின்
கீழ் ரூ.2,500 கோடி ஒதுக்கியும் இதில் பெரிய வளர்ச்சியோ,
மாற்றமோ உருவாகவில்லை.
4
அமெரிக்காவின்
வரி உயர்வு!
அமெரிக்க அதிபர்
ட்ரம்பின் இறக்குமதி வரி உயர்வுதான் ஐரோப்பா மட்டுமல்ல உலகம் முழுவதும் பெரும் விவாதத்தை
கிளம்பிக் கொண்டிருக்கிறது.
அலுமினியம்(25%) மற்றும் இரும்பு(10%) இறக்குமதிக்கு 30 சதவிகித வரி விதித்துள்ளார் ட்ரம்ப்.
அமெரிக்க சந்தையில் குவியும் சீனப்பொருட்களை எதிர்க்கும் முயற்சி என்கிறார்கள்
வல்லுநர்கள்.
1913 ஆம்
ஆண்டிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி வரி மூலம் பெருமளவு வருமானம் கிடைத்துவருகிறது.
பொருட்களின் எண்ணிக்கைக்கு வரி அல்லது அதன் மதிப்புக்கு வரி என இருவிதமாக
வரி விதிக்கப்படுகிறது. சோலார் பேனலுக்கு 30 சதவிகித இறக்குமதி வரி இன்றும் நடப்பிலுள்ளது. அதிபரின்
இந்த முடிவால் பட்ஜெட் பற்றாக்குறை அளவு 500 பில்லியன் டாலர்கள்.
ஐரோப்பிய யூனியன் அமெரிக்காவின் லீவிஸ், ஹார்லி
டேவிசன், பார்பன் விஸ்கி ஆகியவற்றுக்கு வரிவிதிக்க முடிவெடுக்க
உடனே ட்விட்டரில் அதிபர் யூனியன் நாடுகளின் கார்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்திவிட்டார்.
இந்த பிஸினஸ் போரில் பலியாகப்போவது எப்போதும் போல மக்கள்தான்.
தொகுப்பு: ச.அன்பரசு
நன்றி: முத்தாரம்