VR ப்ரௌசர்!



Image result for mozilla vr browser





மொசில்லாவின் VR ப்ரௌசர்!

மொசில்லா நிறுவனம், தற்போது விர்ச்சுவல் ரியாலிட்டிக்கான புதிய ப்ரௌசரை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது HTC Vive Focus ஹெட்செட்டிற்கான கட்டற்ற மென்பொருள் வழியில் தகவல்களை பாதுகாக்கும் விஷயங்களுடன் இந்த ப்ரௌசர் உருவாக்கப்பட்டுவருகிறது. தற்போது ரிலீசாகியுள்ள டெமோவில் மொசில்லாவின் ரியாலிட்டி ப்ரௌசர் பக்கங்களை பார்ப்பது, ஒலி ஆகியவற்றில் பாஸ் மார்க் வாங்கியுள்ளது.

கூகுளின் டேட்ரீம், விண்டோஸின் எட்ஜ் ஆகியவை விஆர் ஹெட்செட்டிற்கான அடிப்படை ப்ரௌசர்கள். மொசில்லாவின் ரியாலிட்டி ப்ரௌசர், குறிப்பிட்ட விஆர் ஹெட்செட்டிற்கானதாக தயாரிக்கப்பட்டுள்ளது என அறிவிப்பு வராதநிலையில் இதன் திறன் குறித்தும் பேச முடியாது. விஆர் ஹெட்செட்டில் பொதுவாக 2டி வடிவில் இணையப்பக்கங்கள் வருவது ரசிக்கத்தக்கதல்ல. 360 டிகிரி பார்வையில் பக்கங்கள் விரிவதுதான் விஆர் ஹெட்செட்டின் சிறப்பு. மொசில்லா இதில் சாதிக்குமா என்பது சந்தைக்கு வந்தபின்புதான் தெரியும்.