டாட்டூ கிரிமினல்கள்!

Image result for tattoos



பிட்ஸ்!


மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகள் Always, Never, Completely.

லண்டன் நகரம் 1211 ஆம் ஆண்டிலிருந்து இங்கிலாந்து ராணிக்கு சொந்தமான நிலத்தை பயன்படுத்துவதற்காக வாடகையை அவருக்கு செலுத்தி வருகிறது.

காலனிய ஆதிக்க காலகட்டத்தில் பணியாளர்களுக்கு உணவாக வழங்கப்பட்டதில் முக்கிய ஐட்டம், இறால்.
சிங்கத்தின் பிடரிமயிர் அதன் ஹார்மோன்களின் அதிகரிப்பிற்கேற்ப அடர்த்தியாக வளரும். பெண் சிங்கங்களை ஈர்ப்பதும் இதுவே.

அமெரிக்காவின் எஃப்பிஐ குற்றவாளிகளை அவர்களின் உடலிலுள்ள டாட்டூக்களை வைத்து கண்டறியும் முறையை உருவாக்கியுள்ளது.

நியூயார்க்கிலுள்ள Vinnie Pizzaria என்ற கடையில் பீட்ஸா ஆர்டர் செய்தால், அதனைக் கொண்டுவரும் பெட்டியையும் ரொட்டியினால் செய்து அனுப்புகிறார்கள்.


சிட்னியைச் சேர்ந்தவர் விமானநிலையத்தில் ஒலிமாசு பிரச்னைக்காக ஓராண்டுக்கு 19 ஆயிரத்து 600 புகார்களை தந்துள்ளார். தோராயமாக 20 நிமிடங்களுக்கு ஒன்று என்ற கணக்கில் புகார்களை அனுப்பியுள்ளார்