வந்துவிட்டது ஆண்ட்ராய்ட் P!
பாக்டீரியா க்ரீம்!
கோடைக்காலங்களில்
பயன்படுத்தும் சன்ஸ்க்ரீன் க்ரீம்களில் oxybenzone,octinoxate ஆகிய வேதிப்பொருட்கள்
பயன்படுத்தப்படுகின்றன. தோலில் சூரிய வெப்பத்தினால் ஏற்படும்
காயங்கள், தோல் புற்றுநோய் ஆகியவற்றிலிருந்து காக்கும் இந்த க்ரீம்களிலுள்ள
வேதிப்பொருட்கள் சுற்றுச்சூழலுக்கும் தோல் அலர்ஜிக்கும் காரணமாக அமைக்கின்றன.
கடல்புறங்களில்
14 ஆயிரம் டன்கள் சன்ஸ்க்ரீன் பொருட்கள் கடலில் கலக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ப்ளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், சிவப்பு பாசியிலிருந்து ஷினோரின் என்ற அமினோ அமிலத்தை மாற்றுப் பொருட்களாக
க்ரீம்களின் பயன்படுத்த ஆய்வுகள் செய்துவருகின்றனர். ஆனால் இதனை
நீண்டநாட்கள் வளர்த்து பெறும் வேதிப்பொருளை பக்குவப்படுத்த அதிகநாட்கள் தேவை.
இதற்கு மாற்றாக Synechocystis எனும் சயனோபாக்டீரியத்தை
வளர்த்து 2.37 ml ஷினோரினை பெறுகிறார்கள். விரைவில் இம்முறை சந்தைப்படுத்தப்பட இருக்கிறது.
2
நிலவில் பேசலாம்!
நிலவில் கால்வைத்த
பழம்பெருமையை செவ்வாயில் ஆராய்ச்சி நடத்தும் இப்போதும் பேசிக்கொண்டிருந்தால் நன்றாகவா
இருக்கும்?
விரைவில் நிலவில் நின்று போன் பேசலாம்.
இங்கிலாந்தைச்
சேர்ந்த வோடஃபோன் நிறுவனத்தின் முயற்சியில் அடுத்த ஆண்டு வோடஃபோன் மற்றும் ஆடி, நோக்கியா
ஆகிய மூன்று நிறுவனங்களின் ஆதரவில் அங்கு 4ஜி நெட்வொர்க் அமைக்கப்படவிருக்கிறது.
விண்வெளியில் தொழில்நுட்ப பொருட்களை உருவாக்குவதற்கான வேலைகளுக்கு நோக்கியா
பொறுப்பேற்றுள்ளது. இந்த பொருட்களின் எடை ஒரு பாக்கெட் சர்க்கரையை
விடவும் குறைவு. ஸ்பேஸ்எக்ஸ்
ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு செலுத்தப்படும் திட்டத்தை
பிடிசயின்டிஸ்ட்ஸ் எனும் பெர்லின் நிறுவனம் பொறுப்பேற்று செய்யவிருக்கிறது.
"இத்திட்டம் மொபைல் நெட்வொர்க் பற்றிய அடிப்படையை இன்னும் புதுமைத்திறன்
கொண்டதாக மாற்றும்" என்கிறார் வோடஃபோன் ஜெர்மனி இயக்குநர்
ஹான்னெஸ் அமெட்ஸ்ரெய்ட்டர்.
ஆண்ட்ராய்ட் P!
கூகுளின் ஆண்ட்ராய்ட்
பி டெவலப்பர் பதிப்பு வெளியாகியுள்ளது. இதில் பல விஷயங்கள் இறுதிப்பதிப்பில்
இருக்கலாம்; இல்லாமலும் போகலாம். இந்த ஓஎஸ்
முழுக்க நிப்பான் பெயிண்டை அள்ளி இறைத்ததுபோல பட்டன்கள், ஐகான்கள்
அனைத்தும் கலர்ஃபுல்லாக அழகு கொஞ்சுகிறது.
கடிகாரம், நோட்டிஃபிகேஷன்கள்
இடது மூலைக்கு சென்றுவிட்டன. நோட்டிஃபிகேஷன்கள் அருகிலுள்ள சிறு
புள்ளி க்ளிக் செய்தால் நோட்டிஃபிகேஷன் லிஸ்ட் வரும். க்விக்
செட்டிங்க்ஸ் மெனு, ஆன் செய்தால் கலராகவும், ஆப் செய்தால் கிரே கலராகவும் மாறும் சிம்பிள். செட்டிங்க்ஸ்
மெனுவும் வானவில்லாக ஜொலிக்கிறது. ஒலியைக் குறைப்பதற்காக வலதுபுறம்
வரும் மெனுவில் அழைப்பிற்கான ஐகான் கொஞ்சம் குழப்பம் தருகிறது. போனில் நிறைய இடங்களில் PRODUCT SANS ஃபான்ட்களை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
வரட்டும் அப்டேட்டி பார்த்துப்போம்!
தொகுப்பு: கா.சி.வின்சென்ட், விக்டர் காமெஸி
நன்றி: முத்தாரம்