குற்றம் பழகு!

Image result for goldcoin illustration


வரலாற்று சுவாரசியங்கள் 
குற்றம் பழகு!
ரா.வேங்கடசாமி

1885 ஆம் ஆண்டு பிரான்சில் பிறந்த ராபர்ட் ஆர்தர், படிப்பு வராததால் பிரெஞ்சு சர்க்கஸ் கம்பெனியில் எடுபிடியாக வேலைக்கு சேர்ந்தார். பெரிய குழியைச்சுற்றி சைக்கிள் ஓட்டுவதுதான் வேலை. கீழே சிங்கங்கள் காத்திருக்கும். கவனம் சிதறினால் சிங்கத்திற்கு விருந்து நிச்சயம்.

கிரிமினலான ராபர்ட் ஆர்தர், கிரைம் விஷயங்களில் கெட்டியாக முன்னேறியதால் எலி என செல்லப்பெயர் பெற்றார். எதிலும் லாவகமாக தப்பியோடுவதால் இந்தப்பெயர். பிரான்ஸ் போரடிக்க, அமெரிக்காவிற்கு கிளம்பினார் ராபர்ட். தன் கிளாமர் மேன்லி தோற்றத்தினால் பெண்களை கவர்ந்து விழுந்து விழுந்து காதலித்தார் ராபர்ட். அப்புறம் என்ன காதலில் பித்தான பெண்களை விபச்சாரத்திற்கு தள்ளிவிட்டு சுகவாசியாக வாழ்ந்தார் ராபர்ட். லாபம் கிடைத்தாலும் போலீஸ் லத்தியை சுழற்றி முட்டியை பெயர்த்து சிறையில் தள்ளியதால் பர்சனாலிட்டி பங்கமானது.

பின் தன் பெயரை காலின்ஸ் என மாற்றிக்கொண்டு பிரான்ஸ் திரும்பினார் ராபர்ட். அங்கே பணக்கார ஆன்டிகளை வலைபோட்டு பிடித்தவர், பிளாக்மெயில் செய்து பெற்ற  பணத்தால் உல்லாசப்பறவையாக வாழ்ந்தார். ஆனால் இவர் மீதான கிரைம் வழக்குகள் அமெரிக்காவில் நிலுவையில் இருக்க, விதி மீண்டும் ராபர்ட்டை அலைகழித்தது. அமெரிக்காவுக்கு போகும் கப்பலில் போலீஸ் உட்பட அத்தனை பேருக்கும் கறிவிருந்து படைத்து அயரவைத்தார் ராபர்ட். அமெரிக்காவில் நடைபெற்ற விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலையானார் ராபர்ட். அந்த குஷி குறையாமல் நியூஜெர்சி பணக்காரரை ஏமாற்றி 30 ஆயிரம் டாலர்களை திருட வசமாக மாட்டி இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்தது. பிறகு இவரைப் பற்றிய எந்த செய்தியுமே இல்லை.

1772 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த கார்ல் வில்ஹாம் பெக்கர், நாணயங்களை கள்ளத்தனமாக உருவாக்கி கெட்டிக்காரத்தனமாக விற்பதில் சமர்த்துகாட்டிய ஆளுமை. இவரது தந்தை மதுபான பிஸினஸ் செய்து வந்தார். குடும்பதொழிலும் ஒட்டாமல் போக முப்பது வயதில் நாணயம் அச்சிடும் தொழிற்சாலையில் பணியாளாக வேலைக்குச் சேர்ந்தார். நாணய வார்ப்பில் தேர்ந்தவுடன் ரோமன், க்ரீக் கால நாணயங்களின் வார்ப்படங்களை தயார்செய்து சாம்பிள்களை உருவாக்கி, சுயமாக தங்க, வெள்ளி நாணயங்களை தயாரித்தார் வில்ஹாம். பின் அதனை பழங்கால நாணயம் போலாக்கி மியான் நெட் என்ற விற்பனையாளரிடம் விற்றுவிட்டார். மியான் நெட்டும் சோதித்து பார்க்காமல் அதனை அரிய நாணய சேகரிப்பாளர்களிடம் தள்ளிவிட்டார். தயாரிப்பு செலவைக்காட்டிலும் விற்பனையில் காசு குறைவாக வந்தாலும் வில்ஹாமுக்கு தொடர்ச்சியாக ஆர்டர் கிடைத்தது. 1826 ஆம் ஆண்டு வில்ஹாமின் கண்பார்வை பழுதுபட தொழில் வீழ்ச்சியடைந்து அசோகத்தினாலே இறந்துபோனார்.
கள்ளப்பணம் அச்சடிப்பதில் உலகப்புகழ் பெற்றவர் அமெரிக்காவின் பிராக்வே.

சுயமாக கற்றுக்கொள்ளும் தன்மையில் எலக்ட்ரோ கெமிஸ்ட்ரியை துலக்கமாக கற்றவர், வங்கியில் இருந்த ஐந்து டாலர் நோட்டை தனது வார்ப்படத்தில் பதிவு செய்து கொண்டார். பின் யேல் நகரில் ஆயிரம் நோட்டுக்களை அச்சடித்துக்கொண்டு அதைவிற்று பணக்காரனானார். கரன்சிகளை வரையும் திறன் கொண்ட வில்லியம், நிலத்தரகரான டாயல் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. பதினைந்து ஆண்டுகள் கள்ளநோட்டு பிஸினஸில் கொடிகட்டிப்பறந்தவர்கள் போலீசில் மாட்டி டாயலுக்கு 12 ஆண்டுகள், பிராக்வேக்கு ஐந்து ஆண்டுகள் தண்டனை கிடைத்தது. தன் 83 வயதிலும் கள்ளப்பணம் அச்சடிக்க முயற்சி செய்து போலீசில் மாட்டிய பெருமை உலகிலேயே பிராக்வேக்கு மட்டுமே உண்டு