சூரியனை ஆராயப்போகிறது நாசா!- எப்படி சாத்தியம்?


Image result for sun


ஆபரேஷன் சன்!


வரும் ஜூலை 31 அன்று கென்னடி விண்வெளி மையத்தில் இதுவரை செய்யாத சாதனை நிகழ்த்தப்போகிறது நாசா. பல்வேறு கோள்களை ஆராய்ந்த நாசா, அடுத்த ஆராயப்போவது சூரியனைத்தான். பார்க்கர் என பெயரிடப்பட்டுள்ள ஆளில்லாத விண்கலம் சூரியனை நோக்கி செல்லவிருக்கிறது. ஏழு ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த திட்டம் வெற்றியடைந்தால் சூரியனில் நிகழும் வேதிவினைகளையும், பூமிக்கு கிடைக்கும் வெப்பம் பற்றிய புதிய செய்திகளை அறிய முடியும்.
2024 ஆம் ஆண்டு சூரியனை 6.3 மில்லியன் கி.மீ தூரத்தில் நெருங்கும் பார்க்கர் விண்கலம், வெப்பத்தையும் கதிர்வீச்சையும் தாங்க 11.5 செ.மீ தடிமனுள்ள கார்பன் கவசத்தைக்(தாங்கும் சக்தி 2500 டிகிரி செல்சியஸ்) கொண்டுள்ளதுஇயற்பியலாளர் யூஜென் பார்க்கர் பெயரிடப்பட்ட விண்கலத்தை ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்துள்ளது. சூரியனுக்கு செல்லும் முதல் விண்கலம் என்பதால், உலகெங்கும் உள்ள மக்கள் தங்கள் பெயரை எழுதி அனுப்பவும் நாசா கேட்டுக்கொண்டுள்ளது. பெயர்களை மைக்ரோசிப்பில் பொறித்து விண்கலத்தில் இணைத்து சூரியனுக்கு அனுப்புவார்கள். விண்வெளியிலும் வெற்றிக்கொடி நாட்டுவோம்.    


பிரபலமான இடுகைகள்