தனிமையில் தலைவன்!



Image result for elon musk

அமெலியாவுக்கு என்னாச்சு?
1937 ஆம் ஆண்டு விமானத்தில் உலகைச்சுற்றிவரை உற்சாகமாக சென்ற விமானி அமெலியா இயர்ஹர்ட் காணாமல் போனார். பல ஆண்டுகளாக தேடியும் கிடைக்காத அமெலியாவைப் பற்றி புதிய தகவல்கள் தெற்கு பசிபிக் தீவிலிருந்து கிடைத்துள்ளது.
1940 ஆம் ஆண்டு நிகுமாரோரோவிலிருந்து எலும்புகள் கிடைத்தன. அதனை ஆராய்ந்த டாக்டர் ஹூட்லெஸ், அது இயர்ஹட்டுடையது அல்ல; ஆண் ஒருவருடையது என்று என கண்டுபிடித்தார். தற்போது டென்னிசி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ரிச்சர்ட் ஜான்ட்ஸ் தலைமையிலான குழு, மண்டையோடு உள்ளிட்டவற்றை ஆராய்ந்து ஃபோர்டிஸ்க் என்ற மென்பொருளை பயன்படுத்தி ஆராய்ந்தனர். இதில் ஆய்வு முடிவுகள் நூறு சதவிகிதம் இயர்ஹட்டோடு பொருந்தியிருக்கிறது. மேற்கை எலும்பு, கால் முன்னெலும்பு ஆகியவையும் வேறுபாடின்றி பொருந்தியிருக்கிறது. "இது முழுமையான ஆய்வு அல்ல; இன்றைய ஆய்வுகள் கிடைத்த ஆதாரங்கள் அவை அமெலியாவினுடையது என்று உறுதிபடுத்துகின்றன" என்கிறார் ஆய்வாளர் ஜான்ட்ஸ்.

2


தனிமையில் தலைவன்!

1995 ஆம்ஆண்டு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இரண்டே நாட்களில் தன் படிப்பை கைவிட்டார். தன் ஒன்பது வயதிலேயே பிரிட்டானிகா என்சைக்ளோபீடியா முழுவதும் படித்து முடித்த ஐக்யூ ஆளுமை.  

ஒரு வாரத்திற்கு எட்டு டயட் கோக் குடிக்கும் நவீனன் எலன் மஸ்க். பத்து படுக்கையறைகள் கொண்ட வீட்டை வாடகைக்கு எடுத்து தன் பென்சில்வேனியா பல்கலைக்கழக நண்பர் அடியோ ரெசியுடன் தங்கியுள்ளார்.

காலையில் 7 மணிக்கு எழுபவர், மதியம் 1 மணிக்கு தூங்கப்போய்விடும் எலன் மஸ்க், ஒரு வாரத்திற்கு நூறு மணிநேரம் உழைக்கிறார்.

மூன்று திருமணங்களில் ஐந்து குழந்தைகள் பெற்ற எலன்மஸ்க், தன் எட்டு நிறுவனங்களின் மூலம் சம்பாதித்தது ரூ.1.37 லட்சம் கோடி.

பனிரெண்டு வயதில் பிளாஸ்டர் எனும் வீடியோகேமுக்கு கோடிங் எழுதி விற்று ரூ.32 ஆயிரம் சம்பாதித்த ஜீனியஸ் ராஜா.

தொகுப்பு: விக்டர் காமெஸி, டெமுஜின் காஸர்
நன்றி: முத்தாரம்






பிரபலமான இடுகைகள்