ஆறாத புண்களை ஆற்றும் சர்க்கரை!

Image result for sugar

காயம் ஆற்றும் சர்க்கரை!

ஜிம்பாவேயைச் சேர்ந்த சிறுவன் மோசஸ் தனக்கு காயம் ஏற்பட்டால் உடனே உப்பை எடுத்து தடவுவது வழக்கம். ஆனால் அதைவிட சர்க்கரையை பூசும்போது காயம் குணமானது கண்டு ஆச்சரியமானான். 1997 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் தேசிய சுகாதார அமைப்பில்(NHS) பணியாற்றியபோது தன் ஐடியாவை கைவிடவில்லை. "சர்க்கரையை புண்ணில் தடவி பேண்டேஜ் மூலம் கட்டினால் பாக்டீரியா பிரச்னையின்றி புண் ஆறும்" என்கிறார் மோசஸ். ஆன்டிபயாடிக்கை பெற முடியாத மக்களுக்கு உதவும்.

ஆன்டிபயாடிக்கிற்கு மாற்றாக சர்க்கரை பயன்படுத்த சோதனைகளை செய்துவருகிறார் மோசஸ். தன் வீட்டருகே உள்ள காலை அகற்றவேண்டிய நிலையிலுள்ள பெண் நீரிழிவு நோயாளிக்கு மோசஸின் சர்க்கரை மருத்துவம் பயனளித்துள்ளது. அமெரிக்காவின் அட்லாண்டிக் பகுதியைச் சேர்ந்த மௌரீன் மெக்மைக்கேல் விலங்குகளுக்கு சர்க்கரை மூலம் சிகிச்சையளித்ததில் கடுமையாக காயம்பட்ட பெண்நாயை காப்பாற்றியுள்ளது இச்சிகிச்சை மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.  

பிரபலமான இடுகைகள்