தாய்மை பற்றிய புரளிகள் உண்மையா?




Image result for pregnancy  myths




தாய்மை பற்றிய புரளிகள் அதிகரிப்பதன் காரணம் என்ன? - .அன்பரசு



Image result for pregnancy  myths



கல்வி, பதவி,திருமணம் கடந்த அங்கீகாரத்தை பெண்ணுக்கு வழங்குவது தாய்மை மட்டுமே. இதில் அடுத்த தலைமுறையை உருவாக்கும் பொறுப்புணர்வின் முழுமை தன்னிகரற்றவர்களாக பெண்களை மாற்றுகிறது. குழந்தைப்பேற்றை முன்வைத்தே சமூகம் பெண்களுக்கு அளிக்கும் சமூக அழுத்தம் அசாதாரணமானது. இதுகுறித்து இணையத்தில் எக்கச்சக்க புரளிகள். குழந்தைபெற ஏற்றது சிசேரியனா?, சுகப்பிரசவமா? தாய்ப்பால் அல்லது புட்டிப்பால், பிரசவத்திற்கு ஏற்ற இடம் வீடா, மருத்துவமனையாக என எக்கச்சக்க கேள்விகள் பதில்கள். உண்மையில் தாய்மை இன்றைய ஜெனரேஷன் எப்படி அணுகுகிறது.

ஹேப்பி ப்ரக்னன்ஸி!

அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த மார்க்கரேட் நிகோலஸ், நாற்பதில்தான் கருவுற்றார். அதிலிருந்து குழந்தைப்பேறு வரை டஜன் கணக்கிலான பிளான்களை தீட்டினார். ஃபேஸ்புக் குரூப்பில் டயட் கவுன்சிலிங், உணவு, வீட்டிலேயே குழந்தை பிரசவம் என நீண்ட கனவை பிரசவ லைஃப், ஒரே நாளில் கலைத்துப்போட்டது. சிறப்பு உதவியாளருடன் பிரசவத்தை வீட்டிலேயே முயற்சித்த நிகோலஸ், வலி தாங்கமுடியாமல் அலற, வேறுவழியின்றி அவரை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்ய ஆசைக்குழந்தையை அழகாக பெற்றெடுத்தார். 6 மாதங்கள் வரை குழந்தைக்கு பால்கொடுக்கும் பிளானில் இருந்த நிகோலஸை தைராய்டு பிரச்னை தடா போட, தாய்ப்பால் வங்கியையும்,புட்டிப்பாலையும் நாடவேண்டிய சூழல்.

"எனது குழந்தை பிறப்பதற்கு முன்பே பிளான்களோடு ரெடியானேன். ஆனால் எனது உடல்நிலை அனைத்தையும் ஒரே செகண்டில் மாற்றிவிட்டது" என மெல்லிய குரலில் பேசுகிறார் நிகோலஸ்.

இது நிகோலஸ் என்ற ஒரு பெண்ணின் பிரச்னை மட்டுமல்ல, உலகத்திலுள்ள இளம்தாய்கள் பலருக்கும் பொதுவான ஒன்றே. அரசு, தாய்ப்பால்தான் பெஸ்ட் என பிரசாரத்தை முடுக்கிவிட, பிறக்கும் குழந்தைகள் தாய்ப்பால் போதாமையால் ஊட்டச்சத்து குறைந்து வளர்ச்சி தேக்கமாகிறது. 70% தாய்மார்கள் மன அழுத்தங்களை சந்திப்பதாகவும், 43% பேர் பிரசவ வலிநிவாரணிகள் பயன்படுத்துவதாகவும், 22% பேர் எந்த பிளானும் இன்றி, சிசேரியனுக்கு ஒகே சொல்வதாகவும், தாய்ப்பால் கொடுக்க முடிவெடுத்த 20% பேரில் பாதியளவினரே அதனை செயல்படுத்தியுள்ளனர் என டைம் இதழின் ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வுக்கருத்துகளில் மருத்துவர்கள், அரசு மற்றும் இணையத்தின் பங்கு அதிகம். பால்கசிவு, தூக்கமின்மை, அலுவலக வேலை ஆகிய சுயநலங்களுக்காக குழந்தைக்கு ஆறு மாதத்திற்குள்ளாகவே புட்டிப்பால் பழக்கும் இளம்தாய்களும் அதிகமாகியுள்ளது இதில் தெரியவந்துள்ள ஷாக் செய்தி.

புரளியும் நிஜமும்!

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளைவிட புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு நோய்பாதிப்புகள் அதிகம் என ஆதாரமற்ற பீதிகளை கிளப்புவதில் இணையதளங்களுக்கே முதலிடம். முன்னணி குழந்தைப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் Babycenter.com, இல் இளம்தாய்கள் பங்குபெறுவதற்கான பகுதியில்தான் ஏராளமான டூப் மேட்டர்கள். இதேபோல செயல்பாடு கொண்டதுதான் Mama Natural என்ற யூட்யூப் தளமும் கூட.

"1900 ஆம் ஆண்டில் பிரசாரங்களின் குற்றவுணர்ச்சி பிரச்னைகள் கிடையாது; ஏனெனில் அன்று பெண்களின் வாழ்நாள் சராசரி 48 வயதுதான்." என்கிறார் யேல் யுனிவர்சிட்டியின் மகப்பேறு மருத்துவர் மேரிஜேன் மின்கின். மற்றொரு புதுமையாக 2015 ஆம் ஆண்டு அமெரிக்க வீடுகளில் பிரசவமாகும் குழந்தைகளின் எண்ணிக்கை 38 ஆயிரம். டென்னிசியைச் சேர்ந்த குழந்தை உதவியாளரான இனாமே கஸ்கின் எழுதிய Spiritual Midwifery(1975) என்ற நூல் இந்த புதிய ட்ரெண்டிங்குக்கு மூல காரணம். அமெரிக்காவில் 1.5% சிசேரியன்கள் நடைபெற்றாலும், கடந்த மூன்றாண்டுகளில் 26% அளவு குறைந்திருக்கிறது.

நன்னம்பிக்கை முயற்சி!

குடல் தொற்று, அலர்ஜி,ஆஸ்துமா ஆகிய நோய்களை நீக்கும் வலிமையை குழந்தைகளுக்கு தருவது தாய்ப்பால் தவிர புட்டிப்பால் அல்ல."தாய்ப்பால் நோய்களைப் தடுப்பதோடு, மூளையின் இயக்கத்திற்கும் ஆதாரம்.மேலும் குறைப்பிரசவ குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அதுவே அவசிய ஆதாரம்" என்கிறார் அமெரிக்க குழந்தைகள் மருத்துவரான லோரி ஃபெல்ட்மன். 1991 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் மற்றும் யுனிசெஃப்பினால் உருவாகி செயல்படும் திட்டமே, BHFI(The Baby-friendly Hospital Initiative) . இவ்விரு அமைப்புகளின் அங்கீகாரம் பெற்ற 420 மருத்துவமனைகளில்தான் 3.9 மில்லியன் குழந்தைகள் பிறந்துள்ளன என்பது இத்திட்டத்தின் வெற்றிக்கு சாட்சி.

இந்த குழந்தை நட்புறவு மருத்துவமனைகளின் நோக்கமே, ஆறு மாதங்களுக்கு தாய்ப்பாலை குழந்தைகளுக்கு வழங்குவதை கட்டாயமாக்குவதுதான். ஆனால் அமெரிக்க தொழிலாளர்களில் 87% பேருக்கு குழந்தைப்பேறு லீவுக்கான சம்பளம் கிடையாது என்கிற நிலைமையில் தாய்ப்பால் கட்டாயம் என விதிகளை கடுமையாக்கினால் எப்படி என சர்ச்சைகளும் எழாமலில்லை. "தாய்மை பற்றி உலகம் பல விஷயங்களை உங்களிடம் கொட்டினாலும், குழந்தை பிறப்பு, வளர்ப்பு விஷயங்கள் நம் திட்டங்களை மீறியவை" என எதார்த்தமாக பேசுகிறார் கலிஃபோர்னியாவைச் சேர்ந்த இளம் தாயான சியானா நார்வெல். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் தளங்களில் ஹேஷ்டேக்கில் தாய்ப்பால்வாரம் முயற்சிகளில் பெண்கள் பங்கேற்பை வரவேற்கலாம்.


குழந்தைநேய மருத்துவமனை!

1991 ஆம் ஆண்டு WHO,UNICEF ஆகிய இரு அமைப்புகள் கரம்கோர்த்து தொடங்கியதே குழந்தைநேய மருத்துவமனைகள்(BHFI- The Baby-friendly Hospital Initiative ). 150 நாடுகளில் செயல்படும் இத்திட்டம், குழந்தைகளுக்கு 6 மாதங்களுக்கு தாய்ப்பால் தருவதை ஊக்கப்படுத்துகிறது.ICYF எனும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து திட்டத்தில் குழந்தைநேய மருத்துவமனை முயற்சியும் ஒன்று. இதில் பங்கேற்பாளர்களுக்கு 20 மணி நேர பயிற்சியளித்து, ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளுக்கு கிடைக்க விழிப்புணர்வு பிரசாரம் செய்ய ஊக்கம் தரப்படுகிறது.



குழந்தை இறப்புகள்!

இறப்பு எண்ணிக்கை  - 5.6 மில்லியன்(2016), 12.6 மில்லியன்(1990)
தினசரி இறப்பு விகிதம் - 15,000(2016), 35,000(1990)
இறப்பு வீழ்ச்சி விகிதம் - 41(1000 குழந்தைகளுக்கு,2016)
5 வயது குழந்தைகள் இறப்பு முதலிடம் - சஹாரா ஆப்பிரிக்கா பகுதி நாடுகள்.(ஆயிரத்துக்கு 79 இறப்புகள்,2016)
5-14 வயது குழந்தைகள் இறப்பு விகித வாய்ப்பு(இந்தியா) - 6%(2016) இறப்பு 160(2016)
(Unicef Child_Mortality_Report_2017படி)