நேர்காணல்: கொலம்பியாவின் அழிவுக்கு யார் காரணம்?


Image result for columbia drug cartel




முத்தாரம் நேர்காணல்

"கொலம்பியாவை அழிவுக்கு கொண்டு சென்றவர்கள் மாஃபியா தலைவர்கள்தான்"
மரியா மெக்ஃபர்லாண்ட் சான்செஸ் மொரினோ, முன்னாள் அமெரிக்க திட்டத்தலைவர்
தமிழில்: .அன்பரசு

Image result for columbia drug cartel



கொலம்பியாவில் வன்முறை என்றதும் மறைந்த மாஃபியா தலைவர் பாப்லோ எஸ்கோபார், கொலம்பியா ஆயுதப்படை(Farg) கொரில்லாக்கள் உங்களுக்கு நினைவுக்கு வரலாம். ஆனால் நாட்டில் போதைப்பொருட்களை கடத்துவது அங்குள்ள பாராமிலிட்டரிப் படை என்பது பலரும் அறியாத ஒன்று. தொண்ணூறுகளுக்கு பிறகு அங்கு நடந்த கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சித்திரவதை அனைத்திலும் பாராமிலிட்டரியின் மறைமுக பங்கு உண்டு. இதுபற்றி “There are No Dead Here,”  என்ற நூலை எழுதியுள்ளார் மரியா.
இந்த நூலை எழுதவேண்டும் என்று எப்படி தோன்றியது?
பாராமிலிட்டரி உள்ளிட்ட ஆயுதப்படைகளை எதிர்த்து பல்வேறு தனிமனிதர்கள் போராடியுள்ளனர். அவர்களைப் பற்றிய கதைகளை போதைப்பொருட்களை ஒழிக்கும் போராட்டத்தில் அறிந்தாலும் அப்போது எழுத முடியவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பலம், தன்னம்பிக்கையும் அவர்களே நம்ப முடியாத ஒன்று.
பாராமிலிட்டரி படைகள் என்பவர்கள் யார்?
பணக்காரர்களையும் அவர்களது வியாபாரம், சொத்துக்களைப் பாதுகாக்கும் தனியார் ராணுவப்படைகளுக்கு பாராமிலிட்டரி என்று பெயர். குறிப்பிட்ட நிலம் தேவையென்றால் உரிமையாளரை கொன்றுவிட்டு நிலத்தை கைப்பற்றிக்கொள்வார்கள். இப்படைகள் முதலில் பாப்லோ எஸ்கோபாரிடம் பணிபுரிந்தனர். எஸ்கோபாரின் இறப்புக்கு பின்னர் நாட்டில் மிகப்பெரிய போதைப்பொருள் மாஃபியாவாக உருவெடுத்தனர். பலரும் மெட்லீன் கார்டெல்லின் முன்னாள் ஊழியர்கள்தான்.
கொலம்பிய நாடாளுமன்றம் பாராமிலிட்டரியோடு தொடர்புகொண்டிருக்கிறதாக கூறியுள்ளீர்களே?
கொலை, கொள்ளை, தேர்தல் முறைகேடு ஆகியவற்றை செய்வதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 30 சதவிகிதம் பாராமிலிட்டரியோடு தொடர்புகொண்டிருக்கிறார்கள் என்பது விசாரணையில் தெரியவந்து தண்டனை பெற்றிருக்கிறார்கள் என்பது கலப்படமற்ற உண்மை.
பாராமிலிட்டரி பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவதாக கூறினாலும் மக்கள் இதனை கவனிக்கிறார்களா?
கொலம்பிய மக்கள் பாராமிலிட்டரியின் வன்முறைகளைக் கண்டு கடும் விரக்தியில் மூழ்கிவிட்டார்கள். கொரில்லா அல்லது பாராமிலிட்டரி படையின் செயல்களை ஏற்றுக்கொண்டால் மட்டுமே கொலம்பியாவில் வாழமுடியும். ஆர்மியும் பாராமிலிட்டரியோடு இணைந்துள்ளது என்பதை மக்களும் அறிந்திருப்பதுதான் வேதனை.
பாராமிலிட்டரி படைக்கு பின்னும் அதேபோன்ற படைகள் கொலம்பியாவில் உள்ள நிலையில் உங்கள் நூலின் இறுதிப்பகுதி நம்பிக்கையான வரிகளோடு நிறைகிறதே?
கொலம்பிய அரசும் பாராமிலிட்டரி படையும் அமைதிக்கு முயன்றாலும் முழுமையாக அது பயனளிக்கவில்லை. விளைவு இன்றும் மக்கள் சுடப்பட்டு வீழ்கிறார்கள். மக்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், வழக்குரைஞர்கள் விளைவாக மாற்றம் தோன்றும்.
 முன்னாள் அதிபர் உரைபேக்கு அறிமுகமானவர்களை சந்தித்து பேசியது எப்படி?
பேசிய சிலர் தங்களின் பெயரை வெளியிட மறுத்துவிட்டார்கள். முன்னாள் அதிபர் உரைபேக்கு நெருக்கமானவர்களோடு நான்கு மணிநேரங்களுக்கு அதிகமாக செலவு செய்து நேர்காணல்களை செய்தேன். உரைபே ஆன்டியோகுயாவில் கவர்னராக இருந்தபோது அவருக்கு நிர்வாகத்தில் நெருக்கமாக இருந்தவர்களிடம் பேசினேன். உரைபேயிடம் நேர்காணலுக்கு முயற்சித்தும் அனுமதி கிடைக்கவில்லை.
2004 ஆம் ஆண்டு உரைபேயை மனித உரிமை இயக்கத்தின் சார்பாக சந்தித்தேன். பாராமிலிட்டரியை கலைப்பது குறித்த அவரின் மசோதாவை ஜோஸ் விவான்கோ கேள்வி கேட்டதும், "நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த முயற்சிக்கும் என்னிடம் இப்படி ஒரு கேள்வியா?" என ஆக்ரோஷமாக 30 நிமிடம் எங்களை எச்சரிக்கும்படி பேசிய உரைபே பின்னரே அமைதியாகி எங்களுடன் பல்வேறு பிரச்னைகள் பற்றி பதிலளித்தார்.  
நன்றி: hrw.org
தொகுப்பு: கா.சி.வின்சென்ட்
நன்றி: முத்தாரம்