ரத்தம் சத்தம் யுத்தம்!


Image result for yeman





நிற்காத அழுகை சத்தம்!

2015 ஆம் ஆண்டு சவுதி அரேபியா ஏமன் நாட்டின் மீது தொடர்ந்துள்ள போருக்கு வயது நான்கு.

 "மனிதர்கள் ஏற்படுத்தி மிகமோசமான போர் சேதம் இது" என ஐ.நா. சபை கூறியுள்ளது. அரேபிய நாடுகளில் மிகவும் ஏழைநாடான ஏமன் தற்போது போர் சூழலில் ஊட்டச்சத்துக்குறைவு பிரச்னையோடு காலரா போன்ற நோய்களையும் குழந்தைகள் சந்திக்கவேண்டியிருக்கும் என ஐ.நா எச்சரித்துள்ளது. இப்போரில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர்.

ஏமன் நாட்டு அதிபர் அபுதாபிஹ் மன்சூர் மற்றும் உள்நாட்டு புரட்சியாளர்களுக்கும் இடையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஐ.நா சபை முயற்சித்தபோதும் அவை வெற்றிபெறவில்லை. அண்மையில் ஏமன் புரட்சியாளர்கள் சவுதியின் தலைநகரான ரியாத் மீது ஏழு ஏவுகணைகளை செலுத்தி மூன்றாவது ஆண்டு போர் நிறைவை கொண்டாடி பீதி ஊட்டியிருக்கிறார்கள்.   


2

வின்னர்!

சீஸ் சாம்பியன்ஷிப் 2018 போட்டியில் Camembert பிரிவில் கனடா வென்றது பிரான்ஸ் நாட்டிற்கு பேரதிர்ச்சி. இதுபோலவே நிறைய வெற்றிகள் உணவு, மதுபானங்களுக்கு கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்னில் ரெஸ்டாரெண்ட் நடத்திவரும் சமையல் கலைஞர் ஜானி டி ஃபிரான்செஸ்கோ. இவர் உருவாக்கிய நியோபொலிட்டன் பீட்ஸாவுக்கு 2014 ஆம் ஆண்டின் உலக பீட்ஸா சாம்பியன்ஷிப் போட்டியில் 'சிறந்த மார்கரிட்டா' என கிரீடம் சூட்டப்பட்டது.

2015 ஆம் ஆண்டு விஸ்கி பைபிளில் ஜப்பானில் தயாரிக்கப்பட்ட சிங்கிள் மால்ட் விஸ்கிக்கு நூற்றுக்கு 97.5 மார்க் கிடைத்தது. இப்பட்டியலில் உலகப்புகழ்பெற்ற ஸ்காட்லாந்து விஸ்கி கம்பெனிகள் கீழே தள்ளப்பட்டன.

2010 ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஸ்பிரிட் சாம்பியன்ஷிப் போட்டியில், இங்கிலாந்தின் ஹெர்ஃபோர்ட்ஷையர் பண்ணையில் உருளைக்கிழங்கில் உருவான வோட்கா டைட்டில் வென்றது. இதில் புகழ்பெற்ற ரஷ்யா மற்றும் போலந்து வோட்கா கம்பெனிகள் தோற்றுப்போயின.  

 3
பிட்ஸ்!

லிஃப்ட் கண்டுபிடிக்காதபோது கட்டிடங்களிலுள்ள கீழ்தளங்கள் வசதியானவர்களுக்கும், மேல்தளங்கள் வேலைக்காரர்களுக்குமாக ஒதுக்கப்பட்டன.

1950 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் மணம் செய்யாமல் தனியாக வசித்தவர்களின் அளவு 22 சதவிகிதம். இன்று இவ்வகையினரின் அளவு 50 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவின் அல்காட்ரஸ் சிறையில்(1934-1963) கைதிகளுக்கு வழங்கப்பட்ட உணவுகள் அன்றைய காலத்தில் பிற சிறைகளை விட உயர்தரமாக இருந்தது. காரணம், நிர்வாகத்திற்கும் கைதிகளுக்கும் பிரச்னை ஏற்படுவதே உணவுகளால்தான் என வார்டன் நம்பியதுதான். தற்போது இச்சிறை அருங்காட்சியகமாகிவிட்டது.

இங்கிலாந்தின் 5 பவுண்டு நோட்டில் வின்ஸ்டன் சர்ச்சில் புகைப்படம் சிடுசிடுப்பாக தோன்றக்காரணம், புகைப்படக்காரர் சர்ச்சிலின் வாயிலிருந்து சுருட்டை பிடுங்கியதுதான்.

கால்பந்து வீரர் ரொனால்டினோ தன் பதிமூன்று வயதில் உலகப்புகழ்பெற்றார். விளையாடிய போட்டியில் 23 கோல் வித்தியாசத்தில் எதிரணியை பந்தாடிய ஆட்டத்தில் அத்தனை கோல்களையும் இவரே அடித்து சாதித்தார்.

 4

என்ன செய்தது ரஷ்யா?
ஐரோப்பிய நாடுகளில் பத்தொன்பது தேர்தல்களில் குறுக்கீடு செய்தது.

 பிரான்சிலுள்ள National Front, ஜெர்மனியின் AfD, இத்தாலியின் Five Star ஆகிய வலதுசாரி கட்சிகளை ரஷ்யா திட்டமிட்டு ஏராளமான பொருட்செலவில் தன் அரசியல் நலனுக்காக உருவாக்கியது.

2016 ஆம் ஆண்டு மேக்ரானின் கட்சி கணினிகளை ரஷ்யா கொள்ளையிட்டு தகவல்களை திருடியது நிரூபணமாகியுள்ளது. மேலும் நார்வே, ஜெர்மனி ஆகிய நாடுகளிலுள்ள பல்வேறு கட்சிகளின் தகவல்களையும் ரஷ்ய உளவுத்துறை கொள்ளையிட்டது.
ஸ்பெயினின் ஆளுகைக்கு உட்பட்ட கடலோனியாவின் சுதந்திர கோரிக்கையை தூண்டி விட்டது. 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஜனநாயக கட்சி மீது இணையத்தாக்குதல் நடத்தியது தொடர்பாக தற்போது விசாரணை நடந்து வருகிறது.

ரஷ்யாவின் அத்துமீறிய தாக்குதல்களுக்கு எதிராக திரண்டுள்ள 24 நாடுகள், தம் நாடுகளிலுள்ள ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளன. பாதுகாப்பு விஷயத்தில் ஐரோப்பிய யூனியனைவிட அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளே வலிமை வாய்ந்தது என்பது உண்மை. இனி தொடரும் ரஷ்யாவின் நடவடிக்கைகளே சண்டையா, சமாதானா என உலகிற்கு சிக்னல் காட்டும்.