விமானத்தில் தண்டனை!
பிட்ஸ்!
உலகில் தங்களுடைய
குழந்தைகளில் ஏதேனும் ஒருவருக்கு சாதகமாக 70 சதவிகித தந்தைகளும்,
74% அம்மாக்களும் செயல்படுகின்றனர் என்கிறது ஆய்வு ஒன்று.
நியூசிலாந்து அரசு, தனது புதிய
கொடியை வடிவமைக்க செலவிட்ட தொகை 1.7 கோடி ரூபாய். ஆனால் மக்கள் பழையகொடியே போதும் என வாக்களித்தனர்.
அமெரிக்காவிலுள்ள
மூன்றில் ஒரு பகுதி மோட்டல்கள் இந்தியர்களுக்கு சொந்தமானவை. எப்படி
கண்டுபிடிப்பது? படேல் என்ற பெயரை வைத்துத்தான்.
பதினேழாம் நூற்றாண்டில்
சமூகத்தை நவீனப்படுதத ரஷ்ய பேரரசர் தி கிரேட் பீட்டர் முடிவு செய்தார். உடனே ஷேவ்
செய்யாதவர்களுக்கு வரி விதித்தார். வரிகட்டியவர்களுக்கு சான்றாக
பித்தளை அல்லது செம்பு டோக்கன் கொடுக்கப்பட்டது.
Tylenol என்ற மாத்திரையால் தற்கொலைகள் மிதமிஞ்சிப்போக, இங்கிலாந்து
அரசு, அதனை மாத்திரைப்பட்டைகளில் மட்டும் அடைத்து விற்றது.
இதனால் தற்கொலை அளவு 43 சதவிகிதம் குறைந்தது.
2
விமானத்தில் தண்டனை!
இந்தியாவில் ஆண்டுக்கு 11.7 கோடிப்பேர்
உள்நாட்டு விமானங்களில் பயணிக்கின்றனர்.கடந்த ஜனவரி வரை இந்தியாவில்
பயணிகளின் போக்குவரத்து அளவு 18%. இது ஜப்பான், அமெரிக்கா, சீனா, பிரேசில் ஆகியநாடுகளின்
உள்நாட்டு விமானப்போக்குவரத்து வளர்ச்சியை விட அதிகம்.
மோசமான சைகைகள், குடிபோதை,
வசவுகளை உதிர்த்தால் மூன்று மாதம் விமானங்களில் பயணிக்க முடியாது.
பாலியல் தொல்லைகளிலும், அடி,
உதை எனவும் இறங்கினால் ஆறுமாதம் பயணத்தடை. விமானத்திலுள்ள
பொருட்களை உடைப்பது, கொலைமுயற்சி, விதிகளை
மீறி பைலட் கேபினில் நுழைவது ஆகியவற்றுக்கு குறைந்தது இரு ஆண்டுகள் ஏர்போர்ட் பக்கமே
வரமுடியாது.
2016 ஆம்
ஆண்டில் உலகமெங்கும் விமானத்தில் மோசமாக நடந்துகொண்ட பயணிகளின் எண்ணிக்கை
1,424. 58,000(2007-2016)
தொகுப்பு: விராட் வடான்கர், சர்மான் சேகல்
நன்றி: முத்தாரம்