பழங்குடிகளை அச்சுறுத்தும் அதிபர்!
பறிபோகும் பழங்குடிகளின் நிலம்!
அமேசான் பழங்குடி பெண்கள் தங்கள் பகுதியில் ஈகுவடார் அரசு செய்யும்
ஆயில் உறிஞ்சும் பணியை நிறுத்த அதிபர் லெனின் மொரினோவை கேட்டுக்கொண்டுள்ளனர். தொழில்துறையை நிறுத்த
கேட்டுக்கொண்டதற்காக பாலியல் தொந்தரவு மற்றும் கொலைமிரட்டல்களை பெண்கள்
சந்தித்துள்ளனர்.
"அதிபரிடம் நாங்கள் எங்கள் கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். இரண்டு வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் நாங்கள் மீண்டும்
போராட்டத்தைத் தொடங்குவோம்" என்கிறார் ஈகுவடார்
பழங்குடி பெண்கள் ஃபெடரேஷனின் துணைத்தலைவரான ஸோய்லா காஸ்டிலோ. "எண்ணெய் மற்றும் சுரங்கம் இல்லாமல் உலகம் எப்படி இயங்கமுடியும்?"
என்று பதில் சொல்லியிருக்கிறார் அதிபர் மொரினோ. கடந்தாண்டு எண்ணெய் மற்றும் சுரங்கத்திற்கான ஏலத்தில் மொரினோ ஈடுபட்டதை
எதிர்த்து மக்கள் அமேசானிலிருந்து கொய்டோ வரை பேரணி நடத்தினர்.
அண்மையில் யாசுனி தேசியப்பூங்காவில் நடைபெறும் ஆயில்
அகழ்ந்தெடுக்கும் பணிக்கு எதிராக ஈகுவடார் மக்கள் வாக்களித்தனர்.
தற்போது அரசு, போராட்டத்தை முன்னணியிலிருந்து நடத்தும் பெண்களுக்கு கொலைமிரட்டல்களை
விடுக்க தொடங்கியுள்ளது. தன்னார்வ அமைப்புகளோடு இணைந்து
மக்கள் தொடர்ந்து போராடி வருவது இயற்கை காக்கப்படுவதற்கான ஒரே நம்பிக்கை.