நேர்காணல்: குற்றவாளிகளின் மனநிலை எப்படியிருக்கும்?


Image result for crime



முத்தாரம் நேர்காணல்

"கைதிகளுடன் பேசி பழகுவது 

மிகையதார்த்த கனவு போலவே உள்ளது"

கேரி டெய்னெஸ். தடயவியல் உளவியலாளர்

தமிழில்: .அன்பரசு

இங்கிலாந்தில் தடவியல் துறையில் உளவியலாளராக பணியாற்றிவருபவர், கேரி டெய்னெஸ். தன் பணியில் சந்தித்த சைகோ கொலையாளிகள், மனநிலை பிறழ்ந்தவர்கள், கொள்ளையர்கள் பற்றி பேசுகிறார்.

உங்களது பணியைப் பற்றி கூறுங்கள்.

மனநிலை பாதிப்பு கொண்டவர்கள்  அதாவது சைக்கோ மனிதர்கள் பாலியல் குற்றமிழைப்பவர்கள் ஆகியோருடன் உரையாடி அவர்களின் மனதை பக்குவப்படுத்துவதுதான் என்னுடைய வேலை.

இதுபோன்ற மனிதர்களுடன் பணிபுரிய எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

சீரியல் கொலையாளி, கசாப்புக்கடைகாரர், மக்களை துண்டு துண்டாக வெட்டிக் கொன்ற சேதாரமில்லாத குற்ற மனிதர்களுடன் பணிபுரிந்துள்ளேன். குற்றவாளிகளுடன் பரஸ்பர புரிதலை ஏற்படுத்த ஒன்றாக சேர்ந்து சமைத்து சாப்பிட்டிருக்கிறேன். கைதி, எனக்கு வான்கோழியை எப்படி எலும்புகளை அகற்றி சமைப்பது என்று சொல்லிக்கொடுத்தார். இதே திறனை அவர் கொலைசெய்யும்போது பயன்படுத்தினார் என்று உடனே நான் உணர்ந்து அதிர்ந்துபோனேன். சிலசமயம் கைதிகளுடன் பேசி அவர்களின் மனதை உணர்வது மிகைஎதார்த்த கனவு போலவே இருக்கும்.

இதுபோன்ற தீவிரகுற்றவாளிகளை முதன்முதலில் சந்தித்தபோது எப்படியிருந்தது?

  நான் என் இருபத்தொரு வயதில் முதன்முதலாக கிடுக்கிப்பிடி பாதுகாப்பிலுள்ள சிறையில் கைதிகளுடன் பேச வாய்ப்பு கிடைத்தது. பெண்களை வன்புணர்வு செய்து உடல்களை சிதைத்து கொன்றவரிடம் முதலில் பயந்துகொண்டே தயக்கத்துடன்தான்  பேசினேன். சிறிது நாட்களுக்கு பிறகு எனக்கு கைதிகளை விட சிறையிலிருந்த அதிகாரிகளிடம் பழகுவது, பேசுவது மிக சிரமமாக இருந்தது. எனது செருப்பை செக்ஸியாக உள்ளது என்ற சிறை அதிகாரிகள் எனது புத்தகங்களையும் பறித்துகொண்டனர். தடவியலில் உளவியலாளர் என்பது எனக்கான உலகம் என்பதை புரிந்துகொண்டேன்.

வேலையைவிட்டுவிடலாம் என்று தோன்றியிருக்கிறதா?

நினைத்துப் பார்க்கவே மிக கடினமான பழக கஷ்டமான மர்ம மனங்களுடன் நான் உரையாடியுள்ளேன். இந்தவேலையிலிருந்து விலகும்போது பொதுவான மனநல சிக்கல்கள் கொண்ட மனிதர்களுடன் உரையாடுவேன். அவ்வளவே வித்தியாசம். நானும் பாலியல்ரீதியாக அவமானப்படுத்தப்பட்டு சட்டங்களால் கைவிடப்பட்டு சிரமப்பட்டுள்ளேன். பாதிக்கப்பட்டவர்களின் மனங்களை உணர இது எனக்கு வாய்ப்பாக அமைந்தது.

வணிக உலகில் மனநோயாளிகள் அதிகம் என்று எப்படி உறுதியாக கூறுகிறீர்கள்.

நூறு பேருக்கு ஒருவர் மனநோயாளி என்ற விகிதத்திலும், கார்ப்பரேட் நிறுவனங்களில் 20 சதவிகித நிர்வாக இயக்குநர்கள் மனநோயாளிகள் என்பதே ஆய்வு உண்மை. பல்வேறு அனுபவங்களின் அடிப்படையில் நான் வணிகத்தலைவர்களுக்கு வகுப்புகள் எடுக்கிறேன்.



பிரபலமான இடுகைகள்