மரியில்லே ஃபிரான்கோ கொல்லப்பட்டது ஏன்?
மனித உரிமைப்போராளி
படுகொலை!
பிரேசிலைச் சேர்ந்த
அரசியல் தலைவரான மரியில்லே ஃபிரான்கோ மற்றும் அவரது கார் ஓட்டுநரான ஆண்டர்சன் பெட்ரோ
ஆகிய இருவரும் கறுப்பின பெண்களுக்கான விழாவில் பங்கேற்றபோது சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மனித உரிமைக்காக
போராடிய ஃபிரான்கோ கொல்லப்பட்டது பிரேசில் மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது. 38 வயதான
ஃபிரான்கோ மரே ஃபவேலா என்ற குடிசைப்பகுதியில் பிறந்து வளர்ந்தவர். ரியோ ஜெனிரோவின் 51 உறுப்பினர்கள் கொண்ட கவுன்சிலில்
இடம்பெற்ற ஒரே கருப்பின பெண்ணான ஃபிரான்கோ, ஆப்பிரிக்க பிரேசிலியர்கள், ஏழைகள், மாற்று பாலினத்தவர்கள் ஆகியோரின் உரிமைகளுக்காக
குரல் கொடுத்தவர்.
அதிபர் மைக்கேல்
டெமர், ராணுவம், காவல்துறை ஆகியோரை கடுமையாக விமர்சித்து வந்தார்
ஃபிரான்கோ. இவரின் இறப்பிற்கு பிரேசில் நாடு கடந்து நியூயார்க்,
பாரிஸ், பெர்லின் உள்ளிட 54 நாடுகளைச் சேர்ந்த மக்கள் இரங்கல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.