இதயநோய்கள் அதிகரித்துவருவதன் காரணம் என்ன?


Related image




இதயம் துடிக்கிறதா?

இந்தியாவில் இதயநோய் தொடர்பாக 53 சதவிகித இறப்புகள் நிகழ்வதாக ஹெல்த் சயின்ஸ் இணையதளம் தகவல் தெரிவிக்கிறது. "இதயம் ரத்தவோட்டத்தை சரிவர இயங்கச்செய்தால் மட்டுமே உடல் இயங்கும். பலவீனமான இதயம் உயிரைக்கொல்வது உறுதி" என்கிறார் இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜிலுள்ள அடன்ப்ரூக் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் சஞ்சய் சின்கா.

தோல், கல்லீரல், இதயம் ஆகிய மூன்றின் தானாகவே குணமடையும் திறன் மிக குறைவு. இதயத்தின் திறன் 0.5%. இந்நிலையில் இதயமாற்று ஒரே தீர்வு. விபத்தில் இறந்தவர்களின் உடலிலுள்ள இதயம் மட்டுமே இதற்கு உதவும். இதயமாற்றுக்கு கட்டணம் 18-40 லட்சம் செலவு. மற்றொரு தீர்வாக, ஸ்டெம்செல்லை பாதிக்கப்பட்ட இதயத்தில் நேரடியாக செலுத்துவதை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஹார்ட் பேட்ச் என்பதை மூன்றாவது தீர்வாக சின்கா முன்வைக்கிறார். 2.5 .செ.மீ அளவில் லேபில் உருவாக்கப்படும் இதயத்தசையை ஸ்டெம் செல் மூலமாக உடலில் தேவைக்கேற்ப ரத்தநாள செல்களாக, இதயதசை செல்களாக மாற்றிப் பயன்படுத்த முடியும். ட்யூக் மற்றும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உதவியுடன் தசைசெல்களை சோதித்துவருகிறார் சின்கா.   


2

ரஷ்ய உளவாளிக்கு விஷம்!

இங்கிலாந்தில் சாலிஸ்பரியில் வசித்த முன்னாள் ரஷ்ய உளவாளியை கொலைசெய்ய ரஷ்யா முயற்சித்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "ரஷ்யா இச்செயல்பாட்டில் ஈடுபட்டது மிகவும் அதிர்ச்சியாகவும் அதன்மீதான மதிப்புக்குறைவையும் இருநாட்டு உறவில் ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரஷ்யாவில் சைபர் தாக்குதலையும் நாம் போர் என்றே சொல்லலாம்" என்கிறார் இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன்.

இதற்கு பதிலடியாக, "ரஷ்யாவுக்கு எதிரான ஊடகங்களின் கட்டுக்கதை இது. இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர், எப்படி ஆதாரமற்ற குற்றச்சாட்டை ரஷ்யாமீது முன்வைக்கிறார் என்பதே புரியவில்லை" என்கிறார் ரஷ்யா வெளியுறவுத்துறையைச் சேர்ந்த மரியா ஸாகரோவாஉக்ரைன், சிரியா நாட்டில் தலையிடுவதையே கடுமையாக ஆட்சேபித்து ஐ.நா மற்றும் ஐரோப்பிய யூனியன் மூலம் பல்வேறு தடைகளை விதிக்க இங்கிலாந்து பரிந்துரைத்தது. தற்போது செர்ஜில் ஸ்கிரிபால் மற்றும் அவரது மகளைக் கொல்ல விஷம் பயன்படுத்தியது உறவில் மேலும் சூட்டைக் கிளப்பியுள்ளது.2006 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் லிட்வின்கோ என்ற முன்னாள் உளவாளியையும் இம்முறையில் ரஷ்யா கொன்றது. அடுத்துவரும் ரஷ்யா உலக கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அரச குடும்பம் பங்கேற்கிறதா என்பதைப் பொறுத்தே அரசின் நிலைப்பாடு ரஷ்ய விஷயத்தில் அமையும்.   

3

பிட்ஸ்!

1923 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக பெரும் தீவிபத்து ஏற்பட்டதில் பதினைந்தே நிமிடங்களில் 38 ஆயிரம் பேர் பலியானார்கள்.

முந்தைய காலத்தில் வாயாடிப்பெண்ணைக் கட்டுப்படுத்த scold's bridles எனும் தலைக்கவசம் அணிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சிலுள்ள ரெஸ்டாரண்டில் 158 கி.கி மேலுள்ளவர்களுக்கு சாப்பாடு ப்ரீ. உடல்பருமன் கொண்ட மூன்றுபேர் ஹார்ட் அட்டாக் கிரில் எனும் இந்த ரெஸ்டாரெண்டில் அன்லிமிடெட்டாக சாப்பிட்டே இறந்துள்ளனர்.

மத்திய ஆப்பிரிக்காவின் சர்வாதிகாரியான ஜீன் பெடல் போகாஸா, நாட்டிலுள்ள பள்ளி மாணவர்களின் சீருடையை தன் நிறுவனத்தில் வாங்க வற்புறுத்தினார். அதிக விலை காரணமாக போராட்டம் வெடிக்க, நூறு மாணவர்களை இரக்கமின்றி தூக்கிலிட்டார்.

இங்கிலாந்தின் நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படும்போது 2013 ஆம் ஆண்டிலிருந்து இன்சிடெண்ட் ஸ்கிரீன்களை(ரப்பர் தடுப்புகளை) வைத்து சம்பவ இடத்தை மறைத்து பயணிகளின் பதட்டம் தணிக்கின்றனர்.

4
புத்தகம் புதுசு!


THE LEGEND OF JACK RIDDLE
264 pages
Stone Arch Books

பனிரெண்டு வயதான ஜாக், தன் அத்தை ஜீஜியை பின்தொடர்ந்து ரகசியங்களைக் கண்டறியும் வேடிக்கை விநோதங்கள் நிறைந்த கதை இது. பிங்கோ விளையாட்டில் ஜாக் ஒரு கட்டத்தில் பகடைக்காயாகவே ஆவது சுவாரசிய திருப்பம். பேராசிரியர் ஆம்புரோசியஸ் உதவியுடன் எப்படி சூனியக்காரியை கைமா செய்தார் ஜாக் என்பதே கிளைமேக்ஸ்.

Lumberjanes, Vol. 8: Stone Cold
112 pages
BOOM! Box

ஐந்து நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்து கோடைக்காலத்திற்காக ஜாலி ட்ரிப் போகிறார்கள். போகும் காட்டில் எதிர்பாராத எதிரிகளை சந்தித்து வேட்டையாடி வெல்கிறார்கள். அவ்வளவேதான் லம்பர்ஜேன் புக்கின் கதை. நியூயார்க் டைம்ஸ் இதழின் பெஸ்ட் செல்லர்  பட்டியிலுள்ள நூலை சந்தோஷமாக படிக்க முக்கிய காரணம், இதன் படங்களை அழகாக வரைந்துள்ள ஓவியர் கேரே பைட்ச்.

தொகுப்பு: வின்சென்ட் காபோ
நன்றி: முத்தாரம்



   



பிரபலமான இடுகைகள்