இத்தாலியின் முதல் கருப்பின உறுப்பினர்!
இத்தாலியின் முதல் கருப்பின உறுப்பினர்!
இத்தாலியின் முதல் கருப்பின உறுப்பினராக வலதுசாரி
கட்சியின் சார்பாக டோனி ஐயோபி நியமிக்கப்பட்டிருக்கிறார். நைஜீரியாவை பூர்விகமாக கொண்ட டோனி, அனுமதி பெற்ற அகதிகளுக்கு
எந்த பிரச்னையுமில்லை என்று கூறினார். வலதுசாரிக்கட்சியான லீக்
கட்சியின் ஸ்லோகன் ஊடுருவலைத் தடுப்போம் என்பதுதான். இத்தாலியின்
பெர்காமோவிலுள்ள ஸ்பிரானோவில் வென்ற கருப்பின வணிகர் டோனி, பெருமிதத்தில்
மிதக்கிறார்.
1970 ஆம்ஆண்டு இத்தாலி வந்த டோனி, பெருகியாவில் படிப்பை முடித்து ஸ்பிரானோவில் செட்டிலானார். அங்கு தன் மனைவியை அடையாளம் கண்டதோடு, லீக் கட்சியில
அங்கமாகி 1995 ஆம் ஆண்டு கட்சியில் கவுன்சிலர் ஆனார்.
லீக் கட்சி மக்களின் வாக்குகளைப் பெற்றாலும் 40% ஆதரவு இன்னும் தேவையிருக்கிறது.
அகதி மற்றும் பாதுகாப்பு
கமிட்டி ஆகியவற்றின் தலைவராக கட்சித்தலைவர் மாட்டியோ சால்வினியால் 2015 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். கடந்த நான்கு ஆண்டுகளில்
6 லட்சம் அங்கீகாரமற்ற அகதிகள் இத்தாலியின் தென்புறங்களில் வசிக்கின்றனர்.
மேலும் நைஜீரியர்களிடமிருந்து அரசுக்கு அகதி கோரிக்கை வருகிறது.
"இடம்பெயர்வது மனிதர்களின் டிஎன்ஏவில் படிந்துவிட்ட குணம் ஆனால்
அது சட்டப்படி நடக்கவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்" என்கிறார் டோனி.
தொகுப்பு: கா.சி.வின்சென்ட்
நன்றி: முத்தாரம்