நம் மனதில் நாம் அறியாத இனவெறுப்பு முகம் ஒன்றுண்டு!"


Image result for getout




முத்தாரம் நேர்காணல்

"நம் மனதில் நாம் அறியாத இனவெறுப்பு முகம் ஒன்றுண்டு!"

ஜோர்டன் பீலே, ஆங்கிலப்பட இயக்குநர்

கெட் அவுட் திரைப்படத்திற்கு, சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை அதன் இயக்குநர் ஜோர்டன் பீலே பெற்றுள்ளார். அகாடமி விருதின் தொண்ணூறு ஆண்டுகால வரலாற்றில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும் ஐந்தாவது கருப்பின இயக்குநர் ஜோர்டன் பீலே. தன் திரைப்படம் குறித்தும் பேசுகிறார்.
பெண்தோழியின் பெற்றோரை சந்திக்கும் காட்சி அவ்வளவு எதார்த்தமாக இருந்தது.
காகசியன் பெண்ணோடு எனக்கு நட்பிருந்தது. அவளின் பெற்றோரை சந்திக்கச் சென்றபோது நடந்த விஷயம் அது. ஏனெனில் நான் கருப்பின நபர் என அவள் தன் வீட்டில் சொல்லவில்லை என்பது கடும் திகிலூட்டியது. தங்கள் மனதிலுள்ள கருத்தை பெரியவர்கள் மறைக்க முயற்சிப்பது எனக்கு அருவெருப்பைத் தந்தது.
ஸ்கர் விருதுக்காக நான்கு பிரிவுகளில் தங்களின் கெட்அவுட் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இனவெறி குறித்த சாகசதிரைப்படமான கெட்அவுட் குறித்தும், அதற்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறித்து என்ன நினைக்கிறீர்கள்.
நான் கடந்துவந்த பாதையில் பல்வேறு முன்னோடி கருப்பின இயக்குநர்கள் உள்ளனர். கருப்பின இயக்குநர்களின் படங்கள் வெற்றிபெறாது என்ற மூடநம்பிக்கையை Straight Outta Compton என்ற படம் உடைத்தெறிந்தது. ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து சினிமா துறையில் சாதிக்க வாய்ப்பு பெற்றதை பெருமையாக கருதுகிறேன்.
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைத்து விருதைப் பெற்றாலும் கோல்டன் குளோப் விருதுகளில் ஏன் உங்கள் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. படத்தை காமெடி பிரிவில் சேர்த்தது பலருக்கும் அதிர்ச்சி. உங்களுக்கு அச்சூழல் எப்படியிருந்தது?
உலகளாவிய அமைப்பு என்னுடைய படத்தை அங்கீகரித்தது மகிழ்ச்சி. நான் உருவாக்கிய முதல் திரைப்படம் HFPA, மற்றும் ஆஸ்கரில் இடம்பெறுவதை தாண்டியது எனது கனவுகள். படத்தை குறிப்பிட்ட வகைப்படுத்தி நான் எடுக்கவில்லை. விருதுக்கான பரிந்துரை எனும்போது அதனை குறிப்பிட்ட லேபிள் ஒட்டி பெட்டியில் அடைப்பதுபோலத்தான் அதன் ஜானர்களை குறிப்பிடுவதும்.
கெட் அவுட் படம் அதன் உருவாக்கம் கடந்து அரசியலுக்காகவும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. இப்படி படத்தில் அரசியல் கருத்தோடு எடுக்க தூண்டப்பட்டது எப்படி என கூறுங்களேன்.
நான் என் படத்தை சில குறியீடுகள், துல்லியமான கருத்தை கூறுவதாக, உணர்ச்சிகரமானதாக உருவாக்க நினைத்தேன். திகில், சஸ்பென்ஸ் விஷயத்தில் ஸ்பீல்பெர்க், குப்ரிக் ஆகியோரைவிட ஆல்ஃபிரட் ஹிட்ச்சாக் கைதேர்ந்தவர். படத்தை அழகாக, ஈர்க்கும்படி அழகியலாக உருவாக்குவதில் ஜான் கார்பென்டர், ஆங்லீ ஆகியோரின் ஆளுமையும் முக்கியமானது.
படத்தின் ஒவ்வொரு ப்ரேமும் அழகு என்று நீங்கள் கூறும்போதுதான் எனக்கு உங்கள் படத்தில் பாத்திரங்கள் காட்டும் முக உணர்ச்சிகள் நினைவுக்கு வருகிறது. பொம்மலாட்டம் இதில் உங்களுக்கு எப்படி உதவியது?
கல்லூரி செல்லும்போது பொம்மலாட்டத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. சிற்பம், ஓவியம், நடிப்பு, நகைச்சுவை,தத்துவம், இலக்கியம், உளவியல் ஆகிய வகுப்புகள் எனக்கு பல்வேறு விஷயங்களை ஓரளவு அறிய உதவியது. பல்வேறு பணிகளின் ஒருங்கிணைப்பாளராக உள்ள  இயக்குநர் பணியில் பொம்மலாட்ட கலைஞரின் கவனத்தையும் அர்ப்பணிப்பையும் நான் எடுத்துக்கொண்டேன்.
கெட்அவுட் படம் லிபரல் எலைட்டுகளுக்கானது என்று முன்பே கூறியிருந்தீர்கள். தேர்தலுக்கு பின் படம் பேசியதை கவனித்தால் ட்ரம்பைவிட ஹிலாரியைப் பற்றி அதிகம் பேசுவது போல தெரிகிறதா?
ஹிலாரி காலத்தைவிட ட்ரம்ப் ஆட்சியில் இனவெறுப்பு கூடுதலாக உள்ளது. ஆனால் பலரும் தான் இனவெறுப்பாக நடந்துகொள்ளாத புனிதர் என்றே நினைக்கிறார்கள். ஆனால் நமக்குள் தீவிர இனவெறுப்பு முகம் மறைவாக உள்ளது என்பதே உண்மை.
நன்றி: JASON ZINOMAN, Eddie S. Glaude Jr. nytimes.com.time.com
தொகுப்பு: கா.சி.வின்சென்ட்