நூல் விமர்சனம்! ஒரு பார்வையில் சென்னை நகரம்!
ஒரு பார்வையில் சென்னை நகரம்!
அசோகமித்திரன்
கவிதா பதிப்பகம்
ரூ.70
சென்னையிலுள்ள நகரங்கள் பற்றி அறி்ந்த இடம் அறியாத விஷயம், ஒருநாள் ஓரிடம் , ஸ்பாட் என்று வார இதழ்களில் பலரும் வரலாற்று நோக்குடன் எழுதி வருகின்றனர். அசோகமித்திரனும் அப்படித்தான் எழுதுகிறார். ஆனால் அனைத்தும் அனுபவ பகிர்வுகள்.
1948 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தது தொடங்கி எழும்பூர், அண்ணாசாலை, குரோம்பேட்டை, வேளச்சேரி, நுங்கம்பாக்கம், ஆழ்வார்பேட்டை , அம்பத்தூர், மயிலாப்பூர், திருவான்மியூர் என தான் சைக்கிளில் அலைந்து திரிந்த அத்தனை இடங்களையும் எளிமையும் இனிய பகடியுமாக வாசகர்களிடம் பகிர்வது அசோகமித்திரனின் தனிச்சிறப்பு.
மேற்கு மாம்பலத்தின் யானைக்கால் சிறப்பு, ரயில்வே கேட், ஆழ்வார்பேட்டையின் தனிச்சிறப்பு, மயிலாப்பூரில் உள்ள இடங்கள் பற்றிய குறிப்பு, குரோம்பேட்டையின் பெயர்க்காரணம், அம்பத்தூர் ஓ.டியின் என்பதன் அர்த்தம் என எளிமையாக புதிர்களை விடுவித்து எழுதுவது வாசிப்பை எளிதாக்குகிறது. ஒரே மூச்சில் நூற்று அறுபது பக்கங்களையும் நீங்கள் வாசிக்க முடியும். குறிப்பிட்ட காலகட்டத்தில் சென்னை எப்படியிருந்தது என நமக்கு காட்டும் மனோகர் தேவதாஸின் கோட்டோவியங்கள் அற்புதம். சுதந்திரத்திற்கு முன்பும், அதன்பிறகும் சென்னை எப்படி மாறியுள்ளது என அறிய நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது என்பதில் சந்தேகமில்லை.
நன்றி: பேராச்சி கண்ணன்
-கோமாளிமேடை டீம்