இன்ஸ்டாகிராமிலும் விராட் அதிரடி!




Image result for virat caricature





Image result for deepika padukone caricature




பிட்ஸ்!

ஆகாயத்தில் தீ!

சீனாவின் குவாங்சூ டூ ஷாங்காய் செல்லும் விமானத்தில் பேக்கேஜ் அடுக்கில் திடீர் புகை. செக் செய்தால் பயணியின் போன் பவர்பேங்கில் தீ. ஆகாயத்திலேயே சாவதா என பீதியான பயணிகள் தண்ணீர், ஜூஸ் என கலந்து கட்டி தீ அணைக்கும் அடிக்கும் வீடியோ இணையத்தில் கிறுகிறு ஹிட்.

பாராசூட் வினை!

ஸ்வீடனில் 246அடி பில்டிங்கின் 24 ஆவது மாடியிலிருந்து இளைஞர் அட்வென்ச்சருக்காக ஜம்ப் செய்தார். ஆனால் பாதிவழியில்தான் பாராசூர் விரியாமல் பெயிலானது தெரிந்தது. அப்புறமென்ன? தலையணை பறந்த வடிவேலு கணக்காக தாறுமாறாக பறந்து சிற்சில காயங்களோடு உயிர்பிழைத்திருக்கிறார் இளைஞர் என்பதுதான் மருத்துவ மிராக்கிள்.

அவகாடோ லவ்!

2016 ஆம் ஆண்டு பென் ஸ்டீவன் தன் காதலி டெய்லர் செல்பிக்கு அவகாடோ பழத்தில் வைர ரிங் கொடுத்து காதலை ஓகே செய்தார். 2 ஆண்டுகளுக்கு பிறகு இவ்வாண்டு லவ்வர்ஸ் டேக்கு பிறகு அத்தம்பதியின் புரோபோசல் ஐடியா, இன்ஸ்டாகிராமில் மாஸ் ஹிட். இங்கிலாந்தின் அஸ்டா அங்காடியில் அவகாடோ பழம், காதல் சொல்லவே ஸ்பெஷலாக விற்கிறது.

திருடருக்கு காஃபி!


கனடாவைச் சேர்ந்த டெஸ் அபொகேஷே என்ற பெண் அலுவலகம் செல்லும் வழியில் பெண்ணிடம் பர்ஸ் திருடி ஓடியவரை மடக்கிப்பிடித்தார். உடனே மன்னிப்பு கேட்டு பர்ஸை ரிடர்ன் கொடுத்த திருடரின்மேல் இரக்கமான  டெஸ், திருடருடன் இணைந்து காஃபி குடித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஏன் மேடம்? என்றால், அவரும் மனிதன்தானே! என சிபிசி டிவியில் பேட்டி தட்டியுள்ளார்.


2


இன்ஸ்டாகிராமில் இந்தியர்கள்!

கடந்தாண்டிற்கான சினிமாவிலும், விளையாட்டிலும் அதிக ரசிகர்களை கவர்ந்திழுத்ததற்காக தீபிகா படுகோன் மற்றும் விராட் கோலி ஆகியோரை இன்ஸ்டாகிராம் தன் இணையதளத்தில் தேர்ந்தெடுத்து கௌரவித்துள்ளது. தீபிகாவிற்கு 2.2 கோடி ரசிகர்களும், விராட்டிற்கு 1.9 கோடி ரசிகர்களும் இந்த கௌரவத்தை தங்களின் தலைவன் தலைவிக்கு பெற்றுத்தந்துள்ளனர்.

கடமை கண்ணியம் கட்டுப்பாடு!

பெங்களூருவில் கொரமங்கலா ஏரியாவில் இளம்பெண் தன் பர்ஸை மிஸ் செய்துவிட்டார். உடனே ட்ராஃபிக் போலீசில் புகார் செய்தார். தகவல் அடிப்படையில் உடனே பர்ஸை கான்ஸ்டபிள் சாந்தகுமார் எடுத்து வைத்திருந்தார். ரூ. 5 ஆயிரம் பணத்தோடு டெபிட் கார்டுகள், ஐடிகார்டுகளைக் கொண்டிருந்த பர்ஸை மீட்ட கான்ஸ்டபிள் சாந்தகுமாரின் போட்டோவுடன் செய்தி வெளியானவுடன் இணையமெங்கும் பாராட்டுகள் குவிகின்றன.

என் பெயர் இந்தியா!

கேரளாவைச் சேர்ந்த கால்பந்து வீரர் சி.கே.வினீத், அண்மையில் அழகிய குழந்தைக்கு தந்தையானார். அது மேட்டர் அல்ல; குழந்தையின் பிறப்பு சான்றிதழில் மதம் என்ற இடத்தில் NIL என எழுதி பதிந்துள்ளதுதான் வைரல் விஷயம். "என் மகனுக்கு தேவையெனில் பின்னாளில் அவன் விரும்பியபடி மதத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டுமே!" என்று சொல்லி லைக்ஸை குவித்துள்ளார் வினீத்.

டெஸ்லாவுக்கு ஹாய் சொன்ன பசு!

அமெரிக்காவின் கான்சாஸைச்சேர்ந்த டெரக் கிளைகென்பெர்க் என்ற விவசாயி, தன் பசுப்பண்ணையிலிருந்து விண்வெளியிலுள்ள மிதக்கும் டெஸ்லா காருக்கு ஹாய் சொல்லியிருக்கிறார். எப்படி? 300 பசுக்களை ஒன்றாக நிறுத்தி ஹாய் என்ற வார்த்தையை உருவாக்கித்தான். பசுக்களின் மூலம் இப்படி கலைப்படைப்புகளை உருவாக்குவது டெரக்கின் ஹாபி.

3

பிட்ஸ்!

பாரபட்ச சம்பளம்!

அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸிலுள்ள Saartj ரெஸ்டாரெண்ட் ரூல்ஸ் வேற லெவல். கஸ்டமரின்  நிறத்தை பொறுத்து பில் கட்டலாம். 12 டாலர் உணவுக்கு வெள்ளையர்கள் மட்டும் 30 டாலர்கள் தரவேண்டும். ஏன்? "வெள்ளையர் -ஆப்பிரிக்க அமெரிக்க இடையிலுள்ள சம்பள இடைவெளியை சுட்டிக்காட்டவே இந்த முயற்சி" என்கிறார் செஃப் துண்டே வே.

சாய்த்துவிட்ட போதை!

சீனாவைச் சேர்ந்த இளைஞர் தொண்டைக்குழி வரை குடித்தார். சாலைக்கு வந்தவருக்கு போதை குப்பென மேலேற, சாலைத்தடுப்பை இழுத்தபடி ஸ்பாட்டிலேயே  உட்கார்ந்துவிட்டார். அவரை நண்பர் இழுக்க, போதை நண்பர் தடுப்பின் மேலேயே விழுந்து அவரின் மேலேயே தடுப்புகள் மூடும் காமெடி வீடியோ இணையத்தில் கலகல ஹிட்டாகிவருகிறது.

ஹீல்ஸ் மனிதன்!

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பொருளாதார மேலாளரான ஆஷ்லே மேக்ஸ்வெல் லாம் ஆபீசுக்கு தினசரி ஹீல்ஸ் அணிந்து செல்கிறார். தன் தோழியின் சிபாரிசை சீரியசாக எடுத்துக்கொண்டு ஒன்பது செட் ஹீல்ஸ்களை வாங்கி அணிந்து ஆபீஸ் செல்வதோடு ஜாலியாக ஊர் சுற்றப்போனாலும் ஒன்லி ஹீல்ஸ்தான் அணிகிறார் ஆஷ்லே. ஏன்? ஹீல்ஸ், அன்லிமிடெட் உற்சாகத்தை தருகிறதாம்.

உதவிக்கு பரிசு கல்வி!

அமெரிக்காவைச் சேர்ந்த இவோனி வில்லியம்ஸ், கல்லூரியில் படிப்பதற்காக பகுதிநேரமாக ஹோட்டலில் பணியாற்றினார். அங்கு வந்த வயதானவர், உணவை சாப்பிடத் தடுமாற அதற்குதவினார் வில்லியம்ஸ். அவரின் போட்டோவை ஒருவர் புகைப்படமாக்கி இணையத்தில் பதிவு செய்ய, நகரமேய் பாபி கிங் மற்றும் டெக்சாஸ் சதர்ன் பல்கலைக்கழகத்தினர் பத்துலட்ச ரூபாய் கல்வி உதவித்தொகையை வில்லியம்சிற்கு அளித்துள்ளனர்.

4
பிட்ஸ்!

சீஸ் தீர்ந்துபோச்சு!

இங்கிலாந்தில் சீஸ் பொருட்களுக்கான திருவிழா நடந்தது. அதில் டிக்கெட் வாங்கி உள்ளே புகுந்த மக்களின் கைவரிசையில் சீஸ் துண்டுகள் மின்னல் வேகத்தில் காலியாயின. சீஸ் கிடைக்காத பலரும் ஏமாற்றத்துடன் சோஷியல் தளங்களில் விழா டீமை வறுத்தெடுக்க, தவறுக்கு மன்னிப்பு கோரிய குழுவினர்,அடுத்த ஆண்டு டிக்கெட்டில் 50 சதவிகித தள்ளுபடி  கொடுத்துள்ளனர்.

ட்ரோன் பிரெட்!

அயர்லாந்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தன் பக்கத்து வீட்டு நண்பருக்கு, பிரெட் தர பேட்ரிக் மன்கோவன் முடிவுசெய்தார். பனியால் வீட்டின் கதவையே திறக்க முடியாதே? தன் கேமரா ட்ரோனில் பிரெட்டை கட்டி அனுப்பி வைத்ததோடு அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். ஃபேஸ்புக்கில் "3 கி.மீ தூரத்தில் யாருக்கேனும் உணவு தேவை எனில் உதவ ரெடி" என பதிவிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

திருடர்களுக்கு வேலை!

நியூசிலாந்தைச்சேர்ந்த டிம் ஸ்மித், தன் கட்டுமான நிறுவனத்தை கொள்ளையிட்ட திருடர்களுக்கு வேலைவாய்ப்பை அறிவித்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்."நேர்மையாக எங்களுடன் இணைந்து உழைக்க ரெடியா? உடனே வாங்க" என செக்யூரிட்டி கேமராவிலுள்ள திருடர்களை குறிப்பிட்டு ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் டிம் ஸ்மித்.

ஹைட்டான தொப்பி!

அமெரிக்காவின் ப்ளோரிடாவைச் சேர்ந்த அடிலன் அசாரே பதினெட்டு அடி உயரத்தில் தொப்பியை உருவாக்கி அண்ணாந்து பார்க்கும் சாதனை செய்துள்ளார். ஏழு வாரத்தில் அதிஉயர தொப்பியை உருவாக்கிய அடிலன், கின்னஸ் சாதனைக்கு இத்தொப்பி பற்றிய தகவல்களை அனுப்பியுள்ளார்.

தொகுப்பு: கா.சி.வின்சென்ட், ராஜூ கமுலா
நன்றி: குங்குமம்

  

பிரபலமான இடுகைகள்