நேர்காணல்: மாய ஒலிகள் பிரச்னைக்குரியவை!



Image result for Exploding head syndrome(EHS)



முத்தாரம் நேர்காணல்


"தூக்கமின்மை ஏற்படுத்தும் மாய ஒலிகள் பிரச்னைக்குரியவை"


பேராசிரியர் அலைஸ் கிரிகோரி, கோல்ட்ஸ்மித்ஸ் யுனிவர்சிட்டி


தமிழில்
: .அன்பரசு




கற்பனை ஒலிகள் கேட்கும் EHS குறைபாட்டை பற்றி விளக்குங்கள்.

Exploding head syndrome(EHS)  என்பது தூக்கத்திலிருக்கும்போது, தூக்கமில்லாத போது அல்லது தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் காதில் கேட்கும் கற்பனை ஒலிகள் எனலாம். .கா: வெடிகுண்டு () பட்டாசு வெடிப்பது. இதனை மூளையின் உணர்வதிர்ச்சி பிரச்னை என வரையறுக்கிறார் மரு. பிரையன் ஷார்ப்லஸ். இது பலருக்கும் பொதுவான குறைபாடுதான். சர்வேயில் கல்லூரி மாணவர்கள் 19% சதவிகித மாணவர்கள் மேற்சொன்ன அறிகுறிகளை ஒப்புக்கொண்டனர்.

இது குறித்து நாம் அறியவேண்டியது என்ன?

EHS பற்றி எக்கச்சக்க வரையறைகள் வந்துகொண்டே இருக்கின்றன. நான் இதற்குள் செல்ல விரும்பவில்லை. மக்கள், இக்குறைபாட்டின் அனுபவத்தில் உணர்ந்த விஷயங்களைப் பற்றி அறியவே விரும்புகிறேன். வல்லுநர்களின் யூகங்களை விட இவை பயனுள்ளதாக இருக்கும்.

இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?
இஹெச்எஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மாய ஒலிகளால் வலி ஏதும் ஏற்படாது. கவனத்தை இந்த ஒலிகள் சீர்குலைப்பதாக தோன்றினால் மருத்துவரின் உதவியை நாடி ஆலோசனைகளைப் பெறலாம். இக்குறைபாட்டிற்கு மருந்து கிடையாது. இது குறித்த ஆய்வுகள் மிக குறைவு. எனவே ஒருவரின் தூங்கும் பழக்கம் பற்றிய துல்லிய ஆய்வுகள் தேவை.

தூக்க முடக்கம் பற்றி கூறுங்கள்.

தூக்க முடக்கம் என்பது தூங்கும்போது அல்லது எழும் நிலையில் உடலை அசைக்கமுடியாத நிலை. ஆய்வில் பங்கேற்றோரில் மூன்று பங்கினர், இப்பிரச்னையால் ஒருமுறையேனும் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர்.

இந்த ஆய்வில் நீங்கள் கண்டறிந்தது என்ன?

உடலில் தோன்றிய அறிகுறிகளை எப்படி உணர்கிறார்கள்?, அதை தடுக்க என்ன முயற்சி செய்கிறார்கள் என்பதை பேராசிரியர் கிறிஸ் ஃப்ரென்ச், தகவல்தொகுப்பாக உருவாக்கி வருகிறார். நான் மனநலம் மற்றும் தூக்கம் குறித்து பல்லாண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறேன். பேராசிரியர் கிறிஸ் மூலம் வர்ஜீனியாவிலுள்ள அர்கோஸி பல்கலையின் ஆராய்ச்சியாளர் பிரையன், மரு. டேன் டெனிஸ் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது.

நன்றி: sciencefocus.com

நன்றி: முத்தாரம்