சிம்பொனி, ஆர்க்கெஸ்ட்ரா என்ன வித்தியாசம்!





Image result for yanni orchestra



சிம்பொனி Vs ஆர்க்கெஸ்ட்ரா!

ஒவ்வொரு சதுரமும் செவ்வகம், ஆனால்  செவ்வகம் அனைத்தும் சதுரமல்ல என்று கணக்கு டீச்சர் சொல்லி தந்திருப்பார்கள். அதே கான்செப்ட்தான் இங்கும். சிம்பொனி ஒவ்வொன்றும் ஆர்க்கெஸ்ட்ரா, ஆனால் ஆர்க்கெஸ்ட்ரா அனைத்தும் சிம்பொனியல்ல.

ஆர்க்கெஸ்ட்ராக்களில் இருவகை உண்டு. ஒன்று சேம்பர் ஆர்க்கெஸ்ட்ராக்களில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கலைஞர்கள் இசை மீட்டுவார்கள். தனியார் ஹால்களில் தேன் கிண்ணம் வகையறா பாடல்களை இசைத்து நிகழ்ச்சியை நடத்துவதால் சேம்பர் ஆர்க்கெஸ்ட்ரா என்று பெயர். ஹெய்டன், மொஸார்ட், விவால்டி ஆகியோர் இந்த இசைக்கு உதாரணம். சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ரா என்பது நூறுக்கும் மேல் கலைஞர்கள் நரம்பிசை, தாளக்கருவிகள் என 25க்கும் மேற்பட்ட கருவிகளை உருட்டி இசை சுனாமியை உருவாக்குவார்கள். .கா: பீத்தோவன், வாக்னர்
 பிட்ஸ்!

பாடகர் டேவிட் போவி இசை சுற்றுலாவுக்கு இத்தாலியிலிருந்து கிளம்பும்போது,  விமானத்தில் குண்டு  என புரளி. டேவிட்டின் ஆட்டோகிராஃப்புக்காக போலீஸ் சீஃப் ஆடிய டிராமா அது என பின்னர் தெரிய வந்தது.

பிரேசில் திராட்சை மரத்தில்(Jabuticaba) திராட்சைகள் கிளைகளில் தொங்குவதில்லை. நேரடியாக தண்டுப்பகுதியிலேயே காய்த்து பழுக்கின்றன.

1967 ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர்கிங் ஜூனியர், ஜப்பான் நாட்டுக்கு, நாம் வேறுபாடுகளை களைந்து சகோதரர்களாக இருப்போம் என கடிதம் எழுதினார். அன்றிலிருந்து ஹிரோஷிமா நகரில் மார்டின் லூதர்கிங் பிறந்ததினம், அகிம்சை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆச்சார அனுஷ்டான டாக்டர் ரெனெ, பெண்களின் மார்பில் காதை வைத்து இதயத்துடிப்பை கேட்பது சங்கடமாயிருக்க, ஸ்டெதாஸ்கோப்பை கண்டுபிடித்தார்.

ஐரிஸ் நில புரோக்கரான சார்லஸ் பாய்காட் என்பவரின் பெயரிலிருந்தே Boycott என்ற சொல் பிறந்தது. அறுவடை இல்லாத விவசாயிகளை அகற்றி நிலங்களை சல்லீசு ரேட்டுக்கு வாங்கிய விவகாரத்தில் ஊரே கூடி எதிர்க்கநகரைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.

 க்யூஆர் கோடில் மருந்து!

மருந்துகளை சிரப் ஆக, மாத்திரையாக இன்னும் எத்தனை நாட்கள் சாப்பிடுவது என்ற கவலையை  மேக்னஸ் எடிங்கரா தலைமையிலான கோபன்ஹேகன் ஆராய்ச்சியாளர்கள் போக்கியுள்ளனர். எப்படி? க்யூஆர் வடிவில் விழுங்கும்படி மருந்துகளை தயாரித்துள்ளனர்.

க்யூஆர் கோடுகளில் மருந்துகளை எளிதாக தெரிந்துகொள்ளும் நிறத்திலும், பல்வேறு வகை மருந்துகளை குறிப்பிட்ட டோஸ் அளவிலும் அச்சடிக்க முடியும். அதோடு இதில் போலி மருந்துகளை தடுக்கும் விதத்தில் ஹோலோகிராம் முத்திரைகளையும் ஒளிரும் இங்க்குகளையும்  பயன்படுத்த முடியும். க்யூஆர் கோட்டில் நோயாளியின் பெயர், நோய் விவரங்கள், மருந்துகளை சாப்பிடும் முறை ஆகியவற்றையும் சேமிக்கமுடியும். தற்போது க்யூஆர் கோடு சேதமாகாமலும், நீரால் பாதிக்கப்படாமல் இருக்கவும் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

தொகுப்பு: பிஸ்வாஸ் சர்மா, ஜோகிந்தர் ராஜ்
நன்றி: முத்தாரம்