"இந்தியாவை தனியாருக்கு தாரை வார்ப்பதே அரசின் திட்டம்"




Image result for tapan sen citu



முத்தாரம் Mini

பட்ஜெட் பற்றிய உங்கள் கருத்தென்ன?

விவசாயத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ. 9,793 கோடி ரூபாய் எனக் கூறப்பட்டது. விவசாயத்தில் அரசு முதலீடு செய்யும் என நிதியமைச்சர் கூறினாலும் அதில் உண்மையில்லை. காரிஃப், ரபி பருவத்திற்கு குறைந்தபட்ச விலையை அளித்துவிட்டதாக கூறியுள்ளது. ஆனால் மகாராஷ்டிரா அரசு இதுபற்றி ஆராய கமிட்டி தேவை என கூறியுள்ளது. ஏன் இந்த குழப்பம்?

பிரதமர் மோடி அறிவித்த தேசிய மருத்து பாதுகாப்புத்திட்டம் உலகிலேயே மிகப்பெரிய திட்டம் அல்லவா?

குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் என ஐம்பது கோடி மக்களுக்கு அறிவித்த திட்டம் செயல்படுத்தப்படுவதிலேயே வெற்றி உள்ளது. பத்து லட்சம் குடும்பங்களுக்கு செலவிடவே இத்தொகை போதுமா என்று தெரியவில்லை. அரசின் பயிர்க்காப்பீட்டிலே பெறப்பட்ட பிரீமியத்தொகையில் ஒரு சதவிகிதம் கூட விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. காப்பீடு தனியாரிடம் செல்லும்போது, மக்களின் பயன்கள் குறையும்.

மேக் இன் இந்தியா பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பாதுகாப்புத்துறையில் அரசின் முதலீடு மிக குறைவு. 50 சதவிகித ஆயுதங்கள் வெளிநாட்டுவரவு. லோக்கீத், ரஃபேல், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்தவர்கள் சுயசார்பு பற்றி பேசுகிறார்கள். வங்கி டெபாசிட் காப்பீடு மசோதாவை விரைவில் கொண்டுவரவிருக்கிறார்கள். பொதுபணத்தை எடுத்து தனியாருக்கு தாரை வார்ப்பதே அரசின் திட்டம் என்பதை இதிலிருந்தே அறியலாம்.

-தபன்சென், சிஐடியூ

தொகுப்பு: ரஜத் பிரகாஷ், வித்யூமேகா
நன்றி: முத்தாரம்





பிரபலமான இடுகைகள்