அத்தனையும் அறிவியல்!
சீனாவின் லேசர் ஐடியா!
நீர்,நிலம்,காற்று ஆகியவை பூமிக்கு கெடுதல் என்றாலும் விண்வெளியிலும் மாசுபாடுகள் இல்லாமலில்லை.
செயலிழந்த செயற்கைக்கோள் குப்பைகளை எப்படி அகற்றுவது என உலக வல்லரசுகள்
திருதிருவென விழித்துவருகின்றன.
சீனா ஆராய்ச்சியாளர்கள்
இதற்கு கண்டுபிடித்த வழிதான், லேசர் கதிர்களின் மூலம் செயற்கைக்கோள் குப்பைகளை
அழிப்பது. இதற்கு முன்பே வலைபோட்டு குப்பைகளை பிடிப்பது,
வட்டப்பாதையிலிருந்து வெளியேற்றுவது, பூமியின்
வளிமண்டலத்தின் மூலம் எரிப்பது ஆகிய ஆப்ஷன்களை ஆய்வாளர்கள் முன் வைத்திருந்தனர்.
லேசர் கதிர்கள் மூலம் விண்வெளி குப்பைகளை பத்து செ.மீ கொண்டதாக இரண்டு நிமிடங்களில் மாற்றும் ஐடியா கொஞ்சம் புதிதானதுதான்.
லேசர் ஸ்டேஷன்களை விண்வெளியில் அமைக்கும் செலவு, தூள்களாகி மிதக்கும் குப்பைகளுக்கான தீர்வுகள் என கேள்விகளும் இதில் ஏராளம்
உள்ளன.
2
செவ்வாயில் ஐஸ்!
செவ்வாயில் படிந்துள்ள
நீரை பனித்துகள்கள் மூலம் அறிந்தாலும், அவை எந்த இடத்தில், எப்படி, என்ன அளவில் இருக்கின்றன என்பதை தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
ஹைரைஸ் எனும் கேமரா
மூலம் நீர் இருக்கும் இடத்தை நாசா குழு கண்டறிந்துள்ளது. புவியியலாளரான
கோலின் தண்டாஸ் செவ்வாயிலுள்ள எட்டு பகுதிகள் பனியால் நிறைந்துள்ளதை கண்டறிந்து டீட்டெய்ல்
அறிக்கை விடுத்துள்ளார். எட்டு இடங்களிலும் நூறு மீட்டர் ஆழத்தில்
பனிக்கட்டிகள் உள்ளன. இதனை பாறை மற்றும் தூசு ஆகியவை
1.9 மீட்டர் ஆழத்தில் நீராதாரத்தை மறைத்துள்ளன. நிலத்தை தோண்டாமல் இதனை கண்டுபிடித்தாலும், நீர் எப்படி
உருவாகியிருக்கும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்க முயன்று வருகின்றனர்.
ஆராய்ச்சியாளர்கள் இந்நீரை சுத்திகரித்து பயன்படுத்துவதோடு, ராக்கெட்ட்டிற்கான எரிபொருளாக ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை இதிலிருந்து பிரித்தெடுக்க
முடியும் என்பதே இச்சோதனை பரபரக்க காரணம்.
3
சால்ட் டயட்!
உணவில் அதிக உப்பு
சேர்த்து சாப்பிடுவது மூளையில் ஏற்படும் டிமென்ஷியா பிரச்னையை தீர்க்கிறது என வெய்ல்
கார்னெல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சாதாரண உணவில்
பயன்படுத்துவதை விட பதினாறு மடங்கு அதிகம் கொண்ட டயட்டை எலிகளிடம் சோதித்தபோது, கார்டெக்ஸ்
பகுதியில் 28%, ஹிப்போ பகுதியில் 25% என
ரத்தவோட்டம் குறைந்தது. எலிகளின் நடத்தை தொடர்பான சிக்கல்கள்
தோன்றின.அதேவேளையில் endothelial செல்களி்ல
உருவாகும் நைட்ரிக் ஆக்ஸைடின் அளவை குறைக்கிறது. எப்படி?
வெள்ளையணுக்கள் உடலில் அதிகரிக்கும் உப்பினால் இன்டர்லூக்கின்(IL-17) என்ற புரதத்தை பெருமளவு தயாரிக்கிறது. இதுவே நைட்ரிக்
ஆக்ஸைடை தடுக்கிறது. இச்செயல்பாட்டை கட்டுப்படுத்த
ROCK Y27632 என்ற மருந்து பயன்படுகிறது. "குடல் அழற்சிநோய், மல்டிபிள் ஸ்கிளிரோசிஸ், முடக்குவாதம் ஆகிய நோய்களுக்கு ஹைசால்ட் டயட் உதவுகிறது" என்கிறார் ஆராய்ச்சியாளரான கியோஸ்யெப்பெ ஃபராகோ.
4
கலோரி அளவீடு!
உணவுப்பொருட்களிலுள்ள
ஆற்றலை அறிவியல் முறையில் கணக்கிட உதவுவதே கலோரி அளவீடு. பத்தொன்பதாம்
நூற்றாண்டில் ஆய்வகத்தில் உணவுப்பொருளை மூடப்பட்ட பாத்திரத்தில் எரித்து, உருவான வெப்பத்தை அளவிட்டனர். கொழுப்பு ஏழு கலோரி(ஒரு கிராமுக்கு) என்ற அளவில் கொழுப்பு, கார்ப்போ ஹைட்ரேட்டுக்கு இருமடங்கு என கணக்கிடலாம். இம்முறைக்கு
Atwater system என்று பெயர். மேற்சொன்ன மூன்று
ஐட்டங்களையும் இரண்டால் பெருக்கினால், லேப் டெஸ்ட் இல்லாமல் கலோரி
அட்டவணை ரெடி. ஒவ்வொருவரின்
உடல் கலோரியை எரிக்கும் வேகத்திற்கும்,
பொருட்களின் கலோரி அட்டவணைக்கும் வேறுபாடுகள் உண்டு.
தொகுப்பு: கார்லோஸ் லார்சன், தியோவா
நன்றி: முத்தாரம்