கேட்க கூடாத கேள்விகள்!




Image result for interview




பிளஸ் பாய்ண்ட்

 ஜெ.திருமால்முத்து

கேட்க கூடாத கேள்விகள்!

இன்டர்வியூவில் நீங்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்கிற டிப்ஸ் தேவைதான். ஆனால் இன்டர்வியூவில் சில தவறுகள் செய்துவிடுகிறீர்கள். வேலை அங்கு கிடைக்காது எனினும், அத்தவறுகளை செய்யக்கூடாது என்ற விஷயம் புத்திக்கு சுருக்கென புரிவது லாபம்தானே! இந்த வாரம் அத்தகைய கேள்விகளின் லிஸ்ட் இதோ!

உங்களைப் பற்றி அந்த நிறுவனத்தில் விசாரித்தோம். ஆனால் அவர்கள் உங்களை தெரியாது என்று கூறுகிறார்களே?

இதன் அர்த்தம் ஒன்றுதான். ரெஸ்யூமில் நீங்கள் பொய் சொல்லிவிட்டீர்கள் என்பதே மெய். இதற்கு நீங்கள் சாரி கேட்டாலும் வேலை கிடைக்காது. வேலையில் சேரும் முன்பே நீங்கள் டுபாக்கூர் வேலைகள் பார்த்தால் எப்படி?

உங்களுடைய ஃபேஸ்புக், ட்விட்டர் அக்கவுண்டுகளை பார்த்தோம் அதில்..?

சமூக வலைதளத்தில் நீங்கள் தற்போது வேலைக்கு வந்துள்ள நிறுவனம் குறித்த சர்சை கருத்துகள், உங்கள் தோழர்களோடு மதுபானம் உள்ளிட்டவற்றைப் பற்றி இக்கேள்வி எழுப்பப்படலாம். இன்று உங்களைப்பற்றி ஆன்லைனில் டைப் செய்தாலே தெரிந்துவிடும். எனவே சோஷியல் தளங்களில் கவனமாக கருத்துகளைப் பதிவிடுங்கள்.

எங்கள் நிறுவனத்தில் மிகச்சரியான திறமையானவர்களை மட்டுமே தேர்ந்தெடுப்போம்.

இந்தக்கேள்வி உங்களை ஆச்சரியப்படுத்தலாம். இன்டர்வியூவில் ஆர்வமில்லையென்றால் நீங்கள் ஒதுங்கிக்கொள்ளலாம் என்பதற்கான நாகரீக சிக்னல் இது. எனவே துல்லியமான நிதான பதில்களில் ஆர்வமுடன் பதில் கூறினால் வேலை கிடைக்க சான்ஸ் உண்டு.

உங்களின் ஷர்ட்டில் என்ன? பற்களில் ஏதோ ஒட்டிக்கொண்டிருக்கிறதே?

இது ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன் சார்ந்த கேள்வி. எனவே முடிந்தளவு நீட்டான டிரெஸில் ஒருமுறைக்கு இருமுறை கண்ணாடியில் உங்கள் தோற்றத்தை செக் செய்துவிட்டு இன்டர்வியூவுக்கு செல்லுங்கள். இந்த கேள்வி கேட்கப்படுவதை தவிர்ப்பது சிறப்பு.

நீங்கள் இந்த வேலைக்கு பொருத்தமானவர் என்று நினைக்கிறீர்களா?

இந்த கேள்வியை ஹெச் ஆர் கேட்கும் நொடியிலேயே நீங்கள் வேலைக்கு ஆகமாட்டீர்கள் என்பதே பிராக்டிகல் நிஜம். எனவே முடிந்தவரை உண்மையைச் சொல்லி வேலைக்கான தகுதிகளை ஷார்ட்டாக முன்வைக்கலாம். சின்ன முயற்சிதானே ப்ரோ?
நன்றி: முத்தாரம்





பிரபலமான இடுகைகள்