வாசிக்கவேண்டிய ஆப்பிரிக்க அமெரிக்க நூல்கள்
அலமாரி: ஆப்பிரிக்க
-அமெரிக்க நூல்கள்
THE FIRE NEXT TIME // JAMES BALDWIN
இருபதாம் நூற்றாண்டின்
முக்கிய எழுத்தாளரான ஜேம்ஸ் பேல்ட்வின், இலக்கியம்,சினிமா ஆகியவற்றை தீவிரமாக விமர்சித்து எழுதிவரும் ஆளுமை. 1963 ஆம் ஆண்டு வெளியான இவரின் The Fire Next Time நூல் முக்கியமானது.
இதில் பதினான்கு வயதான சிறுவனுக்கு எழுதும் கடிதமும், இரண்டாவது பகுதியில் தன் இளமைக்கால போராட்டங்களையும் தந்தையுடனான உறவுச்சிக்கலையும்
எழுதியுள்ளார்.
BETWEEN THE WORLD AND ME // TA-NEHISI COATES
ஜேம்ஸ் பேல்ட்வின்
எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளரான கோட்ஸ் எழுதிய நூல் இது. தனது மகனுக்கு
அமெரிக்காவின் வெள்ளை இனவாதம் பற்றி கூறுவதாக எழுதப்பட்ட நூல் இது. கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தில் நிகழ்ந்த நிகழப்போகும் கறுப்பர்கள் மீதான
வன்முறைகளை கேள்விக்குள்ளாக்குகிறார் கோட்ஸ்.
THE WARMTH OF OTHER SUNS: THE EPIC STORY OF
AMERICA'S GREAT MIGRATION // ISABEL WILKERSON
அமெரிக்காவின்
ஜிம் க்ரோ சட்டத்திலிருந்து தப்பிக்க ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், வடக்கு
மற்றும் மேற்கு பகுதி நகரங்களுக்கு தப்பிச்செல்வதை விவரிக்கும் நூல் இது. புலிட்சர் வென்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்க பெண் இவரே. புளோரிடா, மிசிசிபி, லூசியானா பகுதிகளைச்சேர்ந்த
மூவரின் வாழ்க்கையைப் பேசும் நூல் 15 ஆண்டுகால ஆராய்ச்சியில் உருவானது.
தொகுப்பு: கிரிஷ் போசன், மஞ்சுள்நாத்
நன்றி: முத்தாரம்