கணினிக்கு ஆயிரம் கண்கள்!




Related image




கணினிக்கு ஆயிரம் கண்கள்!

எம்ஐடி மற்றும் ஸ்டான்ஃபோர்டு பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மூன்று கணினி புரோகிராம்களை(முக அடையாளத்தை அறியும்) ஆராய்ந்து அதிலுள்ள தவறுகளை கண்டறிந்துள்ளனர். பெரும்பாலும் வெள்ளையின ஆண்களை மட்டுமே கண்டறிந்த இந்த புரோகிராம்கள், பெண்களையோ பிற கருப்பின ஆண்களை கண்டறிவதில் தடுமாற்றம் கொண்டவையாக இருந்தன.

சில ஆண்டுகளுக்கு முன்பு எம்ஐடி மீடியா லேபைச்சேர்ந்த ஜாய் புவோலாம்வினி என்ற மாணவர் செய்த ஆய்வில் ஃபேஸ் அனாலிசிஸ் புரோகிராம்கள் கறுப்பு நிறம் கொண்டவர்களை கண்டறிய தடுமாறியது. இதில் மொத்தம் 1200 க்கும் மேற்பட்ட முகங்கள் பல்வேறு நிறங்களில் ஆண், பெண் என புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டனகருப்பு நிற பெண்களை கண்டறிவதில் கணினியின் தவறு 20-35 சதவிகிதமாகவும், வெள்ளையர்களை கண்டறிவதில் தவறு 1 சதவிகிதமாக இருந்தது. அதிலும் பாலினத்தைக் கண்டறிவதில் 46% தடுமாற்றம் இருந்தது. "தவறுகளின் சதவிகிதம் இவ்வளவு அதிகம் இருக்கும்போது எப்படி இந்த கணினி புரோகிராம்கள் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்தன என்பது ஆச்சரியமாக இருக்கிறது" என்கிறார் ஜாய். இதனை ஏன் இங்கு பேசுகிறோம் என்றால் இவை மருத்துவத்துறையிலும், சட்ட ஒழுங்குத்துறையிலும் பயன்பாட்டில் உள்ளது என்பதால்தான்போனை அன்லாக் செய்வது வரையில் முகத்தை ஆராயும் புரோகிராமின் ஆதிக்கம் நீளும் நிலையில் அதில் ஏற்படும் தவறுகளுக்கு யார் பொறுப்பு?


2


தனியார்மயமாகும் விண்வெளி மையம்!

அமெரிக்காவின் நாசா, சர்வதேச விண்வெளி மையத்தை 2025 ஆம் ஆண்டோடு தனியார்மயமாக்க முடிவு செய்துள்ளதை நாசா வெளியிட்டுள்ள அறிக்கை சூசகமாக தெரிவிக்கிறது. இதன் அர்த்தம், அரசு அதனை கைவிடுவதல்ல; அதன் நிர்வாகம் தனியார் நிறுவனத்துக்கு செல்கிறது.

 வணிகரீதியான நிறுவனங்களை தனது பணிகளுக்கு பயன்படுத்துவதை அதிகரிக்க அரசு கோருகிறது. நாசாவின் நிதிகுறைத்தல் கோரிக்கையை அதிகாரிகள் கடுமையான விமர்சிப்பதற்கு காரணம், வானியல் குறித்த மக்களின் அக்கறையை இவை பாதிக்கும் என்பதே. இதனை தனியாரிடம் ஒப்படைத்தால் செவ்வாய் மற்றும் நிலவு செல்லும் விஷயங்களை சுறுசுறுப்பாக செய்யலாம் என்பது நாசாவின் எண்ணம். ஏடிகே, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களை நாசா ஊக்குவிக்கும் காரணம் புரிகிறதா? 2028 வரை நாசா நிதியளிக்க துறை வல்லுநர்கள் பலரும் வற்புறுத்துகிறார்கள். ஒபாமா நிர்வாகம், 2024 ஆம் ஆண்டுவரை மட்டுமே பராமரிப்புக்கு ஒப்புக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.  

3

கடலுக்குள் உணவகம்!

நார்வேயின் ஸ்னோஹெட்டா கட்டுமான நிறுவனம், ஆர்க்டிக் பகுதியில் Svart என்ற இயற்கை சூழலுக்கு இசைவான ஹோட்டலைக் கட்டியுள்ளது.

வட்டவடிவஇல் பனோரமா வடிவில் நீரில் உருவாகியுள்ளது. இங்குள்ள மலையில் கதிர்வீச்சு பட்டு எதிரொலிப்பதை ஆய்வு செய்து ஸ்னோஹெட்டா நிறுவனம் ஹோட்டலை கட்டியுள்ளது. 15% ஆற்றலை மட்டுமே வெளியிலிருந்து பெறும் இந்த ஹோட்டல், சூரிய ஒளி மூலம் பெரும்பாலான மின்சாரத்தையும் ஒளியையும் பெறுகிறது. ஏறத்தாழ 85% ஆற்றலை சேமிக்கும் விதமான இதன் டிசைன் அமைந்துள்ளது. அரிய தாவரங்கள், கிறிஸ்டல் கிளியரான நீர் என டூருக்கு செல்பவர்களுக்கு அட்டகாச அனுபவம் காத்திருக்கிறது.

4

பால்வினை நோயால் தவிக்கும் நாடு!

உலகெங்கும் ஆண்டுக்கு 78 மில்லியன் பேரை பாதிக்கும் பால்வினை தொற்றுநோய் கொனொரியா(மேகவெட்டை நோய்). இதனை தடுக்க azithromycin and ceftriaxone ஆகிய இரு ஆன்டிபயாடிக்குகள் பயன்படுகின்றன. ஆனால் சீனாவில் 19 சதவிகித கொனொரியா நோயாளிகளுக்கு இம்மருந்து பயனளிப்பதில்லை பிளாஸ் மெடிசின் இதழ் கட்டுரை தகவல் தெரிவிக்கிறது. "கொனொரியா நோயை குணப்படுத்த நம்மிடமிருந்தது செஃப்ட்ரியாசோன் மருந்து மட்டுமே" என திகிலாகிறார் ஒன்டாரியோ நுண்ணுயிரிலாளர் வனீசா ஆலன்.

கொனொரியாவுக்கு சிகிச்சை எடுக்கவில்லையெனில் பெண்களுக்கு வயிற்றுவலி,மலட்டுத்தன்மை ஏற்படும். கர்ப்பிணிகளுக்கு ஏற்பட்டால் குழந்தைகளுக்கும் பரவும். 2013-2016 வரை எடுக்கப்பட்ட மூவாயிரம் சாம்பிள்களில் 3.3% ஆன்டிபயாடிக் மருந்தின் திறன் குறைந்திருந்தது. "நோய்க்கிருமிகள் தொடர்ந்து வலுப்பெற்று வருவதால் இன்னும் வலிமையா மருந்துகளை நாம் உருவாக்கும் தேவை உள்ளது." என்கிறார் ஆலன். இந்நோய் சீனாவுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கும் தலைவலிதான். அங்கு 4 லட்சத்து 69 ஆயிரம் நோயாளிகள்(2016) சிகிச்சை பெற்று வருகின்றனர்


தொகுப்பு: கா.சி.வின்சென்ட், கமீலா
நன்றி: முத்தாரம்

பிரபலமான இடுகைகள்