முத்தாரம் மினி: "இந்தியாவின் ஜாதிரீதியான அழுத்தம் எங்குமில்லை"


Image result for writer sujatha gilda




முத்தாரம் Mini

அமெரிக்காவில் ட்ரெயினில் நடத்துநராக  பணியாற்றும் இந்தியரான சுஜாதா கில்டா, ஆந்திராவைப் பூர்விகமாக கொண்டவர். தான் எழுதியுள்ள நூலில் நவீன இந்தியா, சாதி குறித்து உரையாடுகிறார்.

அமெரிக்காவில் வாழத்தொடங்கியது சாதி பற்றிய சிக்கல்களால் என்று கூறுகிறீர்கள். அமெரிக்காவில் இப்பிரச்னைகள் இல்லையா?

புதிய வாழ்க்கைக்காக அமெரிக்காவுக்கு வந்தேன். பெண்ணாக இந்தியாவை விட பெட்டரான நாடு இது. அமெரிக்காவில் நிறம் மற்றும் நாடு சார்ந்த வேறுபாடு உண்டு. இந்தியாவின் ஜாதிரீதியான புறக்கணிப்பு போல அழுத்தம் இங்கில்லை. தாழ்ந்த ஜாதிக்காரர்களுக்கு எதிரான வன்முறைகள் அங்கு நிற்பதாயில்லை.

உங்கள் குடும்பத்தின் சாதி அனுபவங்களை கூறவேண்டும் என்று எப்படி தோன்றியது?

எனது குடும்பக் கதைகளில் அவமானங்களைத் தவிர வேறேதுமில்லை. இராக்கை தாக்க அமெரிக்க முயன்றபோது ஏராளமான மக்கள் அதற்கு எதிராக திரண்டார்கள். அப்போதுதான் நான் என் தலித் அடையாளத்தைப் பற்றி வெளிப்படையாக பேசத்தொடங்கினேன். மக்களும் சாதி அமைப்பு குறித்த வெறுப்பை என்னுடன் பகிர்ந்தார்கள். இதுவே என்னை நூல் எழுத ஊக்கம் தந்தது.

தலித்துகளின் நிலை இன்றைய இந்தியாவில் மாறுபட்டிருக்கிறதா?

நிச்சயமாக. ஆந்திராவில் தலித் கிறிஸ்தவர்கள் சமூக விவகாரங்களிலிருந்து ஒதுங்கி வாழ்கிறார்கள். தலித் புறக்கணிப்பிலிருந்து மதமாற்றம் தங்களைக் காப்பாற்றியதாக இவர்கள் நினைக்கிறார்கள். சில தலித் குழுக்கள் பிஎஸ்பி கட்சிக்கு ஓட்டுப்போடவும் முதலாளித்துவ முறையிலும் தலித்துகளை பயன்படுத்துகிறார்கள்.  


தொகுப்பு: கெவின் ஸ்மித், ஸ்மிதா
நன்றி: முத்தாரம்