பேக் டூ பேக் அறிவியல்!!
CES 2018
சிறந்த டிவி
கண்காட்சியில்
இடம்பெற்ற சூப்பரான மாடுலர் டிவி. தயாரிப்பு, சாம்சங்.
ஸ்பெஷல், உங்களுக்கு சுவருக்கு ஏற்ப இதன் சைஸை
மாற்றிக்கொள்ளும் வசதி கொண்ட மாடுலர் டிவி சாம்சங்கின் தி வால். மைக்ரோ எல்இடி டெக்னாலஜியில் பிற போட்டி நிறுவனங்களை வாயை பிளக்க வைக்கும்
பிரைட்டான படங்கள் மிரட்டும் துல்லியம்.
வண்டி புதுசு!
போர்டு நிறுவனத்தின்
ஓஜோ ஸ்கூட்டர்.
அசத்தும் அலுமினிய உடலில் ஒட்டகச்சிவிங்கி டிசைனில் இயங்கும் மின்சார
வாகனம். ஒரு மணிநேரத்திற்கு 32 கி.மீ செல்லும் ஸ்கூட்டர் பர்ஃபாமன்ஸில் பின்னுகிறது. டிஜிட்டல்
தொடுதிரை டேஷ்போர்ட், ப்ளூடூத் வசதியில் ஸ்பீக்கர்களில் பாடலும்
கேட்க முடியும் உள்ளிட்ட வசதிகள் பிளஸ்.
சிறந்த மானிட்டர்
எல்ஜியின் 34WK95U லேப்டாப், மேசைக்கணினியின் திறனையும் மிஞ்சுகிறது.
மல்டிடாஸ்க்கிங் மன்னவர்களுக்கான தேர்ந்த லேப்டாப் இதுவே. லைட் வெயிட்டில் வார்ம் கலரில் வசீகரமாக சுண்டியிழுக்கும் லேப்டாப்.
சிறந்த ரோபோ
சோனியின் ஐபோ. பலரும்
எல்இடி முகம், அனிமேஷன் கண்கள் என முக்கிக்கொண்டிருக்க,
சோனி சார்மிங்காக ஐபோவை உருவாக்கியுள்ளது. அன்பு
செய்யும் இந்த ஐபோ நாய் உலகில் அனைவரையும் கவர்ந்திழுத்து வருவதால் டெக்னிக் டேட்டா
அவசியமில்லை.
2
பூமிக்கு 2 சூரியன்கள்!
இமாலய மலைத்தொடரை
ஒட்டியுள்ள காஷ்மீர் பகுதியில் சூரிய மண்டலத்தை குறிக்கும் தொன்மையான வரைபடங்களை இந்திய
ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Indian Journal of History of Science இதழில்
ஆய்வுத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
கி.மு.
4300 காலகட்டத்தில் இந்த ஓவியங்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம் என ஆராய்ச்சித்தகவல்
கூறுகிறது. இதில் இரண்டு வேட்டைக்காரர்கள், ஒரு காளை, இரண்டு சூரியன்கள் உள்ளன. "அவை இரண்டு சூரியன்கள் அல்ல என்பதே எங்களது முதல் வாதம். இவை ஓவியர்களால் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்க செய்த முயற்சியாக இருக்கலாம்"
என்கிறார் ஆய்வாளர் மாயங்க் வாஹியா. நட்சத்திரங்கள்
அழியும்போது ஏற்படும் வெளிச்ச சிக்னல்களை அடையாளம் கண்டு இதுபோல பாறை ஓவியங்களாக மாற்றியிருக்கலாம்
என்கிறார்கள் ஆய்வுக்குழுவினர். 2013 ஆம் ஆண்டு சீனாவில் நிகழ்ந்த
நட்சத்திர வெடிப்பு கி.மு.800 என கண்டறியப்பட்டுள்ளது.
"காஷ்மீர் ஓவியங்களோடு ஒப்பிடப்படும்போது தொன்மையான ஓவியம் எதுவென
அறியலாம்" என்கிறார் ஆய்வாளர் வாஹியா.
3
குடிநீரில் கதிர்வீச்சு!
உங்கள் குடிநீரில்
கதிர்வீச்சு விஷயங்கள் நிறைந்திருக்கிறது என்றால் என்ன செய்வீர்கள்? அமெரிக்காவில்
170 மில்லியன் மக்கள் கதிர்வீச்சினால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வாஷிங்டனிலுள்ள Environmental Working Group (EWG) எனும் தன்னார்வ அமைப்பு செய்த ஆய்வு முடிவில் இந்த ஷாக் தகவல் வெளியாகியுள்ளது.
2010-2015 ஆம் ஆண்டு வரை செய்த ஆய்வில் அமெரிக்காவிலுள்ள 50 மாநிலங்களில்
பெற்ற சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டன. மண் மற்றும் பாறைகளில்
கிடைக்கும் ரேடியம்,குடிநீரில் புற்றுநோய் உண்டாக்கும் அளவு இருந்தது.
ரேடியம்-226, 228 ஆகியவை குடிநீரில் ஒரு லிட்டருக்கு
5 pCi/L மட்டுமே இருக்கவேண்டும். தற்போது
ஒரு லட்சம் புற்றுநோய் நோயாளிகளில் ஏழுபேர் குடிநீரிலுள்ள ரேடியத்தால் பாதிப்புக்குள்ளானவர்கள்.
இதில் அரசு விநியோகிக்கும் நீரில் இப்பாதிப்பு இருந்தது ஆராய்ச்சியில்
கண்டறியப்பட்டுள்ளது.
4
விண்வெளிப்பயணம்!
Daedalus
1970 ஆம்
ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த விண்வெளிச்சங்கம் உருவாக்கிய புராஜெக்ட் இது. ஆறு ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள பர்னார்ட் நட்சத்திரத்தை அடைவதே லட்சியம்.
டாடலஸ் விண்கலம் ஐந்து ஆண்டு திட்டம். பூமியிலிருந்து
ஏவ முடியாதபடி விண்கலத்தின் வெயிட் இருந்தது. வட்டப்பாதையிலிருந்து
செலுத்தும் யோசனை நன்றாக இருந்தாலும், அப்போது அவ்வளவு அட்வான்ஸாக
டெக்னாலஜி வளரவில்லை. ஒளியின் வேகத்தில் 12 சதவிகித வேகத்துடன் ஐம்பது ஆண்டுகளில் நட்சத்திரம் செல்லும் இந்த திட்டம் கைவிடப்பட்டது.
Icarus
இகாரஸ் திட்டத்தின் இன்ஸ்பிரேசன் மேலேயுள்ள திட்டம்தான்.விண்வெளியில்
பறக்கும்படி விண்கலத்தை 2100க்குள் உருவாக்குவதே பிளான்.
இதில், ராக்கெட் எஞ்சினுக்கான எரிபொருளை லேசர்கள்
உதவியுடன் எரிக்கும் டெக்னாலஜி புதுசு. டாடலஸ் விண்கலத்தை விட
எடை குறைவாகவும், எகனாமியாகவும் கோளை அடையும் திறன் கொண்டது.
Bussard Ramjet
1960 ஆம்
ஆண்டு இயற்பியலாளர் ராபர்ட் பஸ்ஸார்ட் மூளையில் தோன்றிய ஐடியா. விண்வெளியிலுள்ள காற்று, தூசிகளைக் கொண்டே எரிபொருளை
ரெடி செய்யும் விண்கலம் இது.
5
சிகரெட் சீக்ரெட்ஸ்!
சிகரெட் புகைப்பதை
நிறுத்துகிறீர்களா?
கங்கிராட்ஸ்! இந்தியாவிலுள்ள நூறு மில்லியன் புகைபிடிப்பவர்களிலிருந்து
விலகுகிறீர்கள். ஆண்டுக்கு புகைபிடிப்பதால் ஏற்படும் இறப்பு
1 மில்லியன்.
சிகரெட் புகைக்காத
இருபது நிமிடத்தில்,
இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் மெதுவாகும்.
ரத்தத்திலுள்ள கார்பன் மோனாக்சைடு அளவு குறையும். 40 வயதுக்குள் புகையை நிறுத்தினால் சிகரெட் தொடர்பான நோய்களிலிருந்து
90 சதவிகிதம் எஸ்கேப்பாகலாம்.
செயின் ஸ்மோக்கர்களின்
அடிமை பிரச்னையை நீக்க,
cognitive behavioral therapy (CBT) மற்றும் நிகோடின் மாற்று சிகிச்சை
தேவைப்படும்.
இந்தியாவில் சிகரெட்
புகைக்கும் பெண்களின் அளவு
55 சதவிகிதம். தினசரி தோராயமாக, 20 சிகரெட்டுகள்.
சிகரெட்டுக்கு
மாற்றான இ-சிகரெட்டுகளிலுள்ள diacetyl, நுரையீரலிலுள்ள காற்றுப்பைகளை
முழுவதுமாக சிதைக்கிறது.
தொகுப்பு: கிசபி பொன்சேகா, லோக்கல் ப்ரூஸ்லீ
நன்றி: முத்தாரம்