புத்தக வாசிப்பு: சொர்க்கத்தில் அருகிலிருந்து வந்தவன்


Image result for சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன்



சொர்க்கத்தின் அருகிலிருந்து வந்தவன் - லத்தீன் அமெரிக்க சிறுகதைகள்
தொகுப்பும் மொழியாக்கமும் : அமரந்த்தா
யாழ், காலக்குறி பதிப்பகம்
விலை ரூ. 400


அமரந்த்தாவின் மொழியாக்கம் மற்றும் தொகுப்பில் இந்த சிறுகதை நூலில் 33 சிறுகதைகள் உள்ளன. அனைத்தும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் வல்லரசு நாடுகளால் ஏற்படும் போர், சர்வாதிகாரம், வறுமை, பஞ்சம் ஆகியவற்றை இக்கதைகள் உணர்வும் வலியுமாக பேசுகிறது.

தொகுப்பிலுள்ள மார்க்கேஸின்  ஆகஸ்டு மாத ஆவிகள், தூங்கும் அழகியோடு ஒரு பயணம் ஆகிய சிறுகதைகள் ரசிக்கும் வண்ணம் உள்ளன.  கார்மென் நாரன்ஹோவின் நாங்கள் மழையை விற்றுவிட்டோம் சிறுகதை வல்லரசு நாடுகள் சிறிய நாடுகளை அடிமைப்படுத்த எப்படி கடன் வழங்குகின்றன என்பதை தீவிரப்பகடியாக பேசுகிறது.

அன்று செவ்வாய்க்கிழமை அதை எப்படி மறக்கமுடியும் - ராவுல் தோர்ரெஸ் எழுதிய சிறுகதை. வேலை நிறுத்த தொழிலாளர்கள் சர்வாதிகார அரசு எப்படி கையாள்கிறது என்பதை கண்ணீரும் நம்பிக்கையுமாக பேசுகிற கதை. கலங்கடிக்கும் வரிகள், வார்த்தைகள் என நெஞ்சே ஒருகணம் நினைவுகளின் படுகுழியில் தடுமாறி நின்றுபோகிறது.

ரூல்போவின் என்னை கொல்லவேண்டாமென்று அவர்களிடம் சொல், மானுவேலின் ஒரு குவளைப்பால், இசபெல் அய்யந்தேவின் நீதிபதியின் மனைவி ஆகியவை படிக்கிற வாசகர்களை உணர்வெழுச்சிகளை கடுமையாக தூண்டக்கூடியவை என உறுதியாக கூறலாம்.

இதழில் பெரும்பாலான கதைகளை அமரந்த்தாவும் இன்ன பிற கதைகளை கலைச்செல்வன் உள்ளிட்டோர் மொழிபெயர்த்துள்ளனர். நேர்த்தியான மொழி பிறழாத மொழிபெயர்ப்பு கதைகளை வாசிக்க இனிமை சேர்க்கிறது.


பல்வேறு கதைகளை எழுதிய எழுத்தாளர்களுக்கு திரும்பத்திரும்ப அறிமுகப்பக்கங்கள் தேவையில்லை. பொருளடகத்திலும் அதனை ஒரே பெயரின் கீழ் குறிப்பிட்டிருக்கலாம்.

லத்தீன் அமெரிக்க வாழ்வை வெயிலும் மழையும் சேறும் வெள்ளமும் ரத்தமும், வீச்சமுமாக அறிய தைரியமாக வாங்கிப்படிக்கலாம்.


-கோமாளிமேடை டீம்



பிரபலமான இடுகைகள்