பஞ்சம் பட்டினிக்கு மரபணுமாற்று பயிர்தான் ஒரே தீர்வா?





பசுமை பேச்சாளர்கள் 38
எரிக் ரே.அன்பரசு 

ஐரோப்பாவில் சூழல் மாறுபாடுகளுக்கு சேலஞ்ச் சொல்லி மரபணுமாற்ற பயிர்களை வளர்க்கும் அர்காடியா நிறுவனத்தலைவர் எரிக் ரே.குறைவான உரங்களை பயன்படுத்தும் பயிர்வகைகளை உருவாக்குபவர், கார்பன் வெளியீட்டை குறைக்க அதிகம் மெனக்கெடுகிறார்.

பயிர்களின் உற்பத்தியைவிட அதனை விற்பனைக்கு கொண்டுசெல்லும் போக்குவரத்தில் 17% கார்பன் வெளியீடு நிகழ்கிறது. இந்நிறுவனத்தின் முதல் பயிர் அரிசு. மரபணுமாற்ற பயிர் மூலம் 50 மில்லியன் டன்கள் கார்பன் டன் வெளியீட்டை குறைக்க முயற்சித்து வருகிறார் எரிக் ரே. ராக்பிரிட்ஜ், கால்ஜீன் ஆகிய நிறுவனங்களில் உயிரியல் தொடர்பான விவகாரங்களை கவனித்து வந்தவர், 2016 ஆம் ஆண்டில் அர்காடியா நிறுவனத்தின் இயக்குநரானார்.

தாவரவியல் பட்டதாரியான எரிக், பிலிடெலிஜென்ஸ், டெக்சாஸ் க்ராப் சயின்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றியவர். "அல்பெர்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த நைட்ரஜனை உள்ளிழுக்கும் தாவரங்களுக்கான உரிமைகளை பெற்றுள்ளோம். சோளம் மற்றும் அரிசியை விளைவிக்கும்போது உரங்களின் தேவை பெருமளவு குறைகிறது. ஏனெனில் இவை காற்றிலுள்ள நைட்ரஜனை தனது வளர்ச்சிக்கு பயன்படுத்திக்கொள்கிறது. தீர்வுக்கான வழிகளில் இதுவும் ஒன்று." என்கிறார் எரிக் ரே.

உயிரி அறிவியல் நிறுவனமான அகார்டியா, விவசாயத்தை அறிவியல் முறையில் பருவச்சூழல் மாறுபாடுகளை எதிர்கொள்ளத் தேவையான உதவிகளை வழங்கும் நிறுவனம். Hi-Bred எனும் சோளவிதை நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களோடும் பணியாற்றி வருகிறது அகார்டியா. " பசி, பட்டினியால் மக்கள் இறக்காதபடி அறிவியல் தொழில்நுட்பம் மூலம் உதவுவதே எங்கள் நோக்கம்" என்கிறார் எரிக் ரே. 20 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 80 ஆராய்ச்சியாளர்களுக்கு மேல் அகார்டியா நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். ஒப்பந்த அடிப்படையில் ஆராய்ச்சிகளை செய்து தருவது அகார்டியாவின் வருமான ஆதாரம்.

எண்ணெய் தயாரிப்பு பற்றியதே இந்நிறுவனத்தின் முதல் ஆராய்ச்சி புராஜெக்ட். NUE எனும் நைட்ரஜன் தொழில்நுட்பத்தை பயன்படுத்த அனுமதி பெற்றுள்ள அகார்டியா, விவசாயத்தில் கார்பன் வெளியீட்டை குறைப்பதற்கான செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவமளித்து பல்வேறு தொழில்துறை நிறுவனங்களுக்கும் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

தொகுப்பு: கா.சி.வின்சென்ட்
நன்றி: முத்தாரம்