இறப்பை சொல்லும் அல்காரிதம்!
இறப்பை கணிக்கும்
அல்காரிதம்!
அமெரிக்க உணவு
மற்றும் மருத்துவத்துறை(FDA),
நோயாளிக்கு மாரடைப்பு மற்றும் உள்ளுறுப்பு பழுது ஆகியவற்றால் நேரும்
இறப்பு ஆகியவற்றை கணிக்கும் அல்காரிதத்தை பயன்படுத்த அனுமதி தந்துள்ளது. எக்செல்மெடிகல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த அல்காரிதத்தின் பெயர் Wave Clinical Platform.
இறப்பு நேரும் நோயாளிகளின் நிலையை கண்காணிக்கும் இந்த புதிய அல்காரிதம், பாதிப்பை
ஆறு மணிநேரத்திற்கு முன்பாகவே அலர்ட் செய்துவிடும்.எ.கா: ஆக்சிஜன் அளவு, உள்ளுறுப்பு
துடிப்பு" நம்மிடம் தேவையான மருத்துவர்கள், தாதிகள் கிடையாது. அதிகரித்து வரும் வயதாகும் மக்களின்
எண்ணிக்கையை சமாளிக்க பல்வேறு புதிய சேவைகள் தேவைப்படுகிறது" என்கிறார் எக்சல்மெடிகல் நிறுவன அதிகாரியான மேரி பாம். செயற்கை அறிவு கொண்ட சாதனங்கள் நோய்களை கண்டறிவதிலும் முன்னேற்றம் கண்டு வருவது
எதிர்காலத்திற்கான நம்பிக்கை தருகிறது.
பழங்குடிகளின்
குடும்ப கட்டுப்பாடு!
எழுபது, எண்பதுகளில்
சிவப்பு முக்கோணம் அரசு விளம்பரம் வரையப்படாத வீடுகளே இல்லை எனும்படி குடும்ப கட்டுப்பாடு
முடுக்கி விடப்பட்டது. ஆண்,பெண் இருவருக்கும்
என்றாலும் பெண்கள்தான் இச்சிகிச்சைக்கு பெரிதும் இணங்கினர். இப்போது
சரி, வேட்டைச்சமூகமாக இருந்தபோது ஆண்களின் குழந்தை கட்டுப்பாடு
முறை என்னவாக இருந்திருக்கும்?
ஆப்பிரிக்க தாவரங்களிலுள்ள Ouabain என்ற வேதிப்பொருளை ஆண்கள் பயன்படுத்தியதாக ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு ஆப்பிரிக்காவில் அம்பின் முனையில்
தடவ பயன்பட்ட நச்சு என கண்டறிந்திருக்கிறார்கள். இதனை போர்ச்சுகீசியர்கள்
மற்றும் ஆங்கிலேயர்கள் மீது பயன்படுத்திய ஆதாரமும் உள்ளது. மாரடைப்பை
ஏற்படுத்தும் இந்த வேதிச்சேர்மம் விந்தணுக்களின் எண்ணிக்கையையும் தற்காலிகமாக குறைக்கிறது.
50 சதவிகித ஆண்கள் இதனை பயன்படுத்தியிருப்பார்கள் என கணித்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
சிந்தஸைசர் பைப்!
மனிதக்குரலை விட
சிறந்த ஒலி என்ன இருக்கிறது? உக்ரைனைச் சேர்ந்த பொறியாளர் லாட் க்ரெய்மர்,
மனித குரலோடு இசைக்கருவிகளையும் ஒன்றுசேருமாறு சிறிய பைப் கருவியை கண்டுபிடித்துள்ளார்.
இதில் புரோசசர் மற்றும் சிந்தஸைசர் விஷயங்கள் பாடகரின் குரலோடு இணைந்து
உங்கள் காதில் கானமாய் பாயும்.
ரஷ்யாவைச் சேர்ந்த
சோமா நிறுவனம் தயாரித்துள்ள இக்கருவியில் எஃபக்ட்ஸ்களை செய்ய செட்டிங்குகள் உள்ளன. இடது/வலது இசைக்கான விஷயங்களோடு மின்சாரத்திற்கும் ஒரே கேபிள்தான் உதவுகிறது.
இதில் Orpheus, Filterra, Reverb, Pulse, BassDrum, Octava,
Generator and Harcho ஆகிய அல்காரிதங்களோடு புதிய கருவியில் கூடுதலாக
நான்கு அல்காரிதங்கள் உண்டு. மையத்தில் மைக் உள்ளது. வலதுபுறமுள்ள அல்காரிதங்களை தேர்வு செய்து ஒலியையும் கன்ட்ரோல் செய்ய முடியும்.
தொகுப்பு: கா.சி.வின்சென்ட்
நன்றி: முத்தாரம்