வர்ஜின் பூஜைக்கு ரெடியா ப்ரோ?



Image result for hara hara mahadevaki


பாரில் குரங்கு!

சரக்கு அடித்தால் மனிதர்கள் மட்டும்தான் தகராறு செய்வார்களா? நாங்களும் செய்வோம்ல என களமிறங்கிய குரங்கு செய்த ரவுசில் பெங்களூரு நகரமே அலறியிருக்கிறது.

பெங்களூருவிலுள்ள கம்மனஹல்லி பகுதியிலுள்ள மதுமான பார்தான் சம்பவம் நிகழ்ந்த ஸ்பாட். அங்கு ஜாலியாக கான்க்ரீட் கட்டிடங்களைத் தாண்டோடி வந்த  மங்கி ஒன்று, அட்மிஷன் இன்றி உள்ளே வந்தது. கிளாசில் ஊற்றி வைத்திருந்த சரக்குகளை காக்டெயிலாக கலந்து குடித்த குரங்கு, சைட் டிஷ் அயிட்டங்களுக்கும் ஆஃபர் கேட்காமல் அன்லிமிடெட்டாக அள்ளித்தின்றது. சில்மிஷ குரங்கு சும்மாயிருக்குமா? அங்குள்ள ஓவர் ஆல் குடிமகன்களையும் சைட்டிஷ் பற்றாக்குறைக்கு சீறி மிரட்ட, பலருக்கும் மேக்சிமாக ஏறியிருந்த போதை மினிமாகி அலறினர். பின் பழங்கள் ஜூஸ்கள் லஞ்சமாக கொடுத்து குரங்கை பிடித்து காப்பகத்தில் ஒப்படைத்து மூச்சு விட்டிருக்கின்றனர்.

காதலி கிடைக்க கன்னிபூஜை!

டெல்லியிலுள்ள இந்துக் கல்லூரி தனியொருவன்கள் வர்ஜின் மரத்திற்கு பூஜை செய்து பிரேயரே நடத்தியிருக்கிறார்கள். எதற்கு?

யெஸ். காதல் பஜனைக்குத்தான். ஆண்டுதோறும்  வர்ஜின் மரத்தடியில் நடக்கும் கன்னி பூஜையில் ஆண்டுக்கொரு இந்தி நடிகையை தம்தமிமாய் என்ற பெயரில் தெய்வமாய் பூஜித்து காதலி கிடைக்கவும் கன்னி கழியவும் வழிகாட்டு தெய்வமே என இந்துக்கல்லூரி இளசுகள் அப்ளிகேசன் போடுவது ஜெனரேஷன் வழக்கம்.

இம்முறை நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ் மற்றும் நடிகர் ரன்வீர்சிங்குக்கு சான்ஸ் கிடைத்ததோடு முன்னாள் மாணவரும் இயக்குநருமான நளின் ராஜன் வர்ஜின் விழாவுக்கு சீஃப் கெஸ்ட். "எங்கள் கேம்பஸிலேயே பெண்கள் ஹாஸ்டல் இருப்பதால் அவர்கள் எங்கள் கோரிக்கையை பரிசீலிக்கவும் இந்த விழா உதவும்" என்கிறார் மாணவர் யூனியன் தலைவர் சஜீவ். அதேநேரம் பெண்களின் ஜிகிஜிகி படங்கள், காண்டம் பலூன்கள் ஆகியவை தடுக்கப்படவேண்டும் எனவும் எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன

சில்ட்ரன் பேங்க் ஆஃப் இந்தியா!

இந்திய அரசின் கலருக்கு ஒன்று என்றரீதியில் அச்சடித்த கரன்சிகளால் பிரச்னை இன்ஸ்டன்டாக கிளம்பிக்கொண்டே இருக்கிறது.

கான்பூரிலுள்ள கிட்வாய்நகர் நகரிலுள்ள தனியார் ஏடிஎம்மில், ஹிமான்சு பாரதி ஹாயாக சென்று செலவுக்கு சுளையாக பத்தாயிரம் எடுத்தார். வீட்டிற்கு சென்று பார்த்தால் அத்தனையும் மளிகை கடையில் குழந்தைகளுக்கு விற்கும் சில்ட்ரன் பேங்க் ஆப் இந்தியா நோட்டுகள். அச்சு அசலாக ஆர்பிஐ போலவே எழுத்துரு, கலர் என பக்காவாக உழைத்து பிரிண்டிங் செய்த நோட்டில் காந்தியும் ஆஜர். அவர் மட்டுமல்ல, ஏடிஎம்மில் போலி கரன்சி எடுத்த தியாகி ராமேந்திர அவஸ்தி, எடுத்த இருபதாயிரத்தில் ஒரு ஐநூறு மட்டும் குழந்தைகளுக்கான நோட்டு. இருவரும் வங்கியின் கம்ப்ளெயிண்ட் க்யூவில் வெயிட்டிங். மேக் இன் இந்தியா அபாரமாக வேலை செய்யுதே மோடிஜி!

காதலுக்கு ஹாலிடே!

காதலர் தினம் வந்தாலே மேற்கத்திய கலாசாரம் என விறைப்பாகி யூனிஃபார்ம் போடாத காவலர்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு அட்டூழியம் செய்வார்கள். இந்தியாவிலுள்ள யுனிவர்சிட்டியும் அப்படி கறார் காட்டி செய்த ஆக்‌ஷன்தான் டாக் ஆப் தி கேம்பஸ்.

உத்தரப்பிரதேசத்திலுள்ள லக்னோ பல்கலைக்கழகம் காதலர் தினத்தன்று கேம்பஸில் யாராவது காதல் சொல்லி ரோஜா கொடுத்தால் நம் மானம் போய்விடுமே என யோசித்தது. மிகச்சரியாக சிவராத்திரி வர, ஆஹா சிக்கிருச்சு என அதை முன்னிட்டு என பிப்.14 அன்று விடுமுறை அளித்து ஆசுவாசமாகியுள்ளது. அதோடு காதலர் தினத்தன்று கேம்பசிற்குள் ரோஜா அல்லது கார்டு கொடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை என சர்க்குலரே அனுப்பியுள்ளது என்றால் பாருங்களேன். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்கள் காதலர் தினத்தில் என்ன செய்யலாம், எது கூடாது என லிஸ்ட் போட்டு சர்க்குலர் அனுப்பி பரபரப்பான பெருமையும் கொண்டது இப்பல்கலைக்கழகம்.  


திருநங்கைகளுக்கு கூட்டுறவு சொசைட்டி!-ரோனி

இந்தியாவில் முதல்முறையாக கேரளாவில் திருநங்கைகளுக்கென ஸ்பெஷலாக கூட்டுறவு சங்கங்களை தொடங்கவிருக்கின்றனர்.

"மாநிலத்திலுள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட மாற்றுப்பாலினத்தவர்கள் இந்த புதிய கூட்டுறவு சங்கங்களின் மூலம் பயன்பெறுவார்கள்" என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கடகாம்பள்ளி சுரேந்திரன் கூறினார். கூட்டுறவுச்சட்டப்படி அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்படும் சங்கத்தில் 50 சதவிகிதத்திற்கு மேல் பெண்களே நிர்வாகியாக இருப்பார்கள். இச்சங்கங்களின் மூலம் சிறியளவிலான  தங்கநகைக்கடன்கள் வழங்கப்படவிருக்கின்றன. மேலும் இந்த கூட்டுறவு சங்கத்திற்கு மத்திய அரசிடம் வருமான வரிவிலக்கு பெறவும் கேரள அரசு முடிவு செய்துள்ளது.


நெகிழ்ச்சி திருமணம்!

பெற்ற குழந்தைமேல் எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை ஏற்றிவைத்து கல்யாணத்தில் அதனை பைசல் செய்வது பேரன்ட்ஸின் பேராசை. தத்தெடுத்த மகனை அவன் விருப்பம் மணம் செய்து கொடுத்த குடும்பம் பலருக்கும் மிராக்கிள்.

டேராடூனைச் சேர்ந்த ஆதரவற்ற பனிரெண்டு வயது சிறுவனான ராகேஷ் ரஸ்தோகியை மொய்னுதீன் என்ற முஸ்லீம் குடும்பம் தத்தெடுத்து வளர்த்தது. அதாவது, இந்துவாகவே. அண்மையில் ராகேஷூக்கு இந்துப்பெண்ணான சோனியுடன் இந்து சடங்குகளோடு மணம் செய்து கொடுத்த மொய்னுதீனை ஊரே ஆச்சரியமாக பார்க்கிறது. "தீபாவளி, ஹோலி என அனைத்து விழாக்களையும் நானும் என் குடும்பமும் கொண்டாடுவோம். திருமணமும் அப்படி குடும்பத்தின் ஆதரவிலும் அன்பிலும் நடந்தது" என்கிறார் ராகேஷ். எங்க வீட்டு மாப்பிள்ளை!

தொகுப்பு: ரோனி ப்ரௌன்
நன்றி: குங்குமம்



பிரபலமான இடுகைகள்