ரேஷனில் தண்ணீர்!
ரேஷனில் தண்ணீர்!
தென் ஆப்பிரிக்காவின்
கேப்டவுன் நகரில் தண்ணீர் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. ஏப்ரல்
12 க்குள் நீர் சிக்கனத்தை கடைபிடித்து நீரை சேமிக்காவிடில்,
எனவே விரைவில் அரசு சார்பில் 200 பைப்புகள் அமைக்கப்பட்டு
ரேஷனில் 25 லிட்டர் நீர் வழங்கும் நிலை ஏற்படும் என அரசு அறிவித்துள்ளது.
சுற்றுலாப்பயணிகளை
ஈர்க்கும் கேப்டவுனில்
87 லிட்டர் நீர் என்பது தினசரி லிமிட். ஆனால் இப்போது
டே ஜீரோ யுக்தியை கடைபிடிக்க அதிகாரிகள் அலர்ட்
செய்துள்ளனர். "அணையிலுள்ள நீரின் அளவு 1.4%. எனவே குடிநீர் தேவையை சமாளிக்க சிக்கனம் தேவை" என்கிறார்
கேப்டவுன் துணைமேயர் இயான் நீல்சன். பிப்.1 முதல் தனிநபர் பயன்பாட்டுக்கு 50 லிட்டர் நீர்தான் லிமிட்.
கார் கழுவ,துணி துவைக்க, சுற்றுலாப்பயணிகளின் பயன்பாடு என அனைத்து தரப்பினர்க்கும் நீர் கட்டுப்பாடு
அமுலாகிறது. "நீர்கட்டுப்பாடு என்பது மக்களில் ஒருபகுதியினரை
மட்டுமே கட்டுப்படுத்தும். அப்போது பிறரின் நீர் பயன்பாடு இத்திட்டத்திற்கு
எப்படி வெற்றி தரும்?" என லாஜிக் கேள்வி கேட்கிறார் உலக
கானுயிர் நிதியத்தின் நன்னீர் வல்லுநர் கிரிஸ்டைன் கால்வின்.
சமூகதளங்களை கண்காணிக்கும்
கனடா!
அமெரிக்காவில்
நிகழும் பத்து மரணங்களில் ஒன்று தற்கொலை. அதிலும் கனடாவில் 10-19
வயதுகளில் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணிக்கையில் உலகளவில் இரண்டாமிடம்.
இதில் தற்கொலை சதவிகிதம் அதிகமுள்ள 60 நாடுகளில்
28 நாடுகள் தற்கொலையை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளன.
அண்மையில் கனடா
சோஷியல் தளங்களை ஏஐ மூலம் கண்காணிக்க ஒட்டாவா நகரைச்சேர்ந்த டெக் நிறுவனத்தை நியமித்துள்ளது. தற்கொலையை
தூண்டும் செய்திகள், தன்மையை ஆய்வு செய்து கூறுவதே இந்நிறுவனத்தின்
பணி." ஆய்வில் பொதுவாக வைரலாகும் ட்ரெண்ட்ஸ் விஷயங்களின்
தாக்கம் பற்றிய ஆய்வே சரியானது. குறிப்பிட்ட ஒருவரின் தகவல்களை
எடுப்பது பிரைவசி சிக்கலை ஏற்படுத்தும்" என்கிறார் டெக்
நிறுவனத்தைச் சேர்ந்த எரின் கெல்லி. பொது சுகாதார ஏஜன்சி
PHAC இதற்கான திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.
சொல்வது நிஜம்!
ஒட்டகச்சிவிங்கிகள்
தினசரி அரைமணிநேரம் மட்டுமே தூங்கும்.
தினசரி 4 மணிநேரம்
தூங்கும் ஒட்டகச்சிவிங்கியைப் பார்த்து இப்படியொரு கேள்வி! வயதுவந்த
மற்றும் இளம் ஒட்டகச்சிவிங்கிகளை 152 நாட்கள் ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள்
மாலையில் குட்டித்தூக்கம், இரவில் குறட்டைவிட்டு தூக்கம் என ஒட்டச்சிவிங்கியின்
தூக்கத்தை வரையறுத்துள்ளனர்.
சிம்பன்சியிலிருந்து
உருவாகி வந்ததே மனித இனம்.
மனிதர்களுக்கும்
சிம்பன்சிக்குமான டிஎன்ஏ ஒற்றுமை 98.8%. மனிதர்களுக்கும் சிம்பன்சிகளுக்கும் ஒரே
முன்னோர்கள்(8 மில்லியன் ஆண்டுகள்) இருந்திருக்கலாம்.
ஆனால் மனிதர்கள் பெற்ற மாற்றங்கள் பல தலைமுறைகளுக்கு பிறகு ஏற்பட்டது.
விண்வெளியிலுள்ள
நிலவு பூமியின் கடல்நீரை இழுக்கிறது.
உண்மை. ஆனால்
பூமியின் ஈர்ப்புவிசையில் நிலவின் பங்கு பத்து மில்லியன் பங்கு பலவீனமானது.
சூரியன்,பூமி,நிலவு என மூன்றும்
இழுப்பதை விட விசைகள் ஒன்றையொன்று உந்தி தள்ளுவதே அதிகம். கடல்
அலைகளின் வேகம் உயர்வதும் தாழ்வதும் இதன் விளைவாக ஏற்படுகிறது.
தகவல் செயற்கைக்கோள்
மிசியஸ்!
சீனாவின் செயற்கைக்கோளான
மிசியஸ் ஆஸ்திரியா மற்றும் சீனாவுக்கு இடையே(7,600 கி.மீ) க்வாண்டம் முறையில் தகவல்களை பாதுகாப்பாக அனுப்பி சாதனை புரிந்துள்ளது.
இம்முறையில் இணையமும் எதிர்காலத்தில் உருவாகலாம்.
ஆகஸ்ட் 26 அன்று
க்வாண்டம் தகவல்தொடர்புக்கென சோதனை முறையில் மிசியஸ் செயற்கைக்கோள் நிறுவப்பட்டது.
சாதாரண செயற்கைக்கோள்கள் ரேடியோ வழி மற்றும் நுண்ணலை உள்ளிட்டவற்றை தகவல்
தொடர்புக்காக பயன்படுத்துகின்றன. ஆனால் மிசியஸ் க்வாண்டம் முறையில்
போட்டான்களை பயன்படுத்துகிறது. இதில் இரு போட்டான்களும் தகவல்களை
பிறர் அறியாதபடி இணைப்பதால் இவை எவ்வளவு தூரத்தில் இருந்த வருகின்றன என்பது போன்ற விவரங்கள்
பயனரே அறியமுடியாது. கடந்த ஆண்டு, மிசியஸ்
செயற்கைக்கோள், சீக்ரெட் தகவலை 1,200 கி.மீ தூரத்திற்கு அனுப்பி சாதனை செய்தது. ஐந்தாம் நூற்றாண்டில்
சீனாவில் வாழ்ந்த விஞ்ஞானி மிசியஸை கௌரவிக்க, செயற்கைக்கோளுக்கு
மிசியஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
தொகுப்பு: கா.சி.வின்சென்ட்
நன்றி: முத்தாரம்