ஆண்களை இப்படிச்சொல்லி அவமானப்படுத்தலாம்!


Image result for No Balls




காட்டன் ஜெல்!

சிங்கப்பூரின் நேஷனல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், கழிவுப்பருத்தியில் ஏரோஜெல் தயாரித்திருக்கிறார்கள். என்ன பிரயோஜனம்? குடிநீரை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், காயங்களில் ஏற்படும் ரத்தப்போக்கை குறைக்கவும் இவை உதவுகின்றன.

பேராசிரியர் நான் பாங் தின், மின்ங் துவாங் ஆகியோர் தலைமையில் ஆராய்ச்சிக்குழுவினர் தொழிற்சாலைகளிலிருந்து கழிவு பருத்திகளைப் பெற்று அதன் இழைகளிலிருந்து ஏரோஜெல்லைத் தயாரித்துள்ளனர். இதற்கு முன்பு இவர்கள் காகிதங்களிலிருந்து ஏரோஜெல் தயாரித்திருந்தனர். எடையற்ற, உறிஞ்சும் தன்மை கொண்ட ஏரோஜெல்லை தயாரிக்கும் செலவும் பிற ஜெல்களை விட குறைவு.

"காயங்களுக்கு அருகில் தோலில் செலுத்தப்படும் பருத்தி இழை ஜெல் பதினாறு மடங்கு பெரிதாகி ரத்த இழப்பைக் கட்டுப்படுத்தும். இது செல்லுலோஸ் ஸ்பான்ச்சுகளை விட வேகமானவை." என்கிறார் ஆராய்ச்சியாளர் துவாங். கமர்சியல் மார்க்கெட்டில் ஜெல்லை சந்தைப்படுத்த ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.   

2
பிட்ஸ்!

Scnapsidee என்ற ஜெர்மன் சொல்லுக்கு, குடிபோதையில் சூப்பர் ஐடியாஜி என தோன்றும் மோசமான யோசனை என்று அர்த்தம்.

1995-2003 ஆம் ஆண்டில் கொலம்பிய மேயர் மைம் கலைஞர்களை வைத்து ட்ராஃபிக் விதிமீறல்களை பிரசாரம் செய்ய, 50 சதவிகித விபத்துகளை சர்ரென குறைந்தன.

முயல்குட்டிகளில் கூட்டத்திற்கு Fluffle என்று பெயர்.

இத்தாலியில் ஓர் ஆணைத் திட்டி அவமானப்படுத்த No Balls என்ற வார்த்தையைப் பயன்படுத்தினால், அது அந்நாட்டுச் சட்டப்படி குற்றம்.

கி.மு 620-570 காலத்தில் வாழ்ந்த கவிஞர் Sappho of Lesbos தன்பால் உணர்வுகளை தீவிரமான உணர்ச்சி கொந்தளிப்புடன் 10 ஆயிரம் வரி கவிதையாக்கினார். லெஸ்பியன் வார்த்தையை அன்றே புழக்கமாக்கிய அக்கவிஞரின் கவிதையில் 650 வரிகளே இன்று மிச்சமுள்ளன.   

 3

தடுப்பூசிகள் தயாரிப்பு!

தடுப்பூசிகள் மருத்துவ வரலாற்றில் சாதனை என்றே கூறலாம். போலியோ, அம்மை ஆகிய நோய்களை ஒழித்ததில் தடுப்பூசியின் பங்கு அதிகம். விஞ்ஞானி எட்வர்டு ஜென்னர், பசுஅம்மைக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பில் மூழ்கியிருந்தார். அம்மை கிருமிகள் பிற நுண்ணுயிரிகளுடன் கலந்திருந்தன. செல் கல்ச்சர் முறையில் புரதம், அமினோ அமிலம், கார்போஹைட்ரேட் உள்ள  குடுவையில் வளர்க்கப்படுகிறது.

வைரஸின் வாழ்க்கை சுழற்சி முடிவுற்றபின் வாழும் செல்லிலிருந்து பிரித்தெடுத்து பில்டர் செய்யப்படுகின்றன. இவை உடலுக்குள் செலுத்தப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. 2000 ஆம் ஆண்டில் போலியோ வைரஸ் செலுத்தப்பட்ட பலருக்கும் உடலில் பிரச்னை தந்ததால் உயிருடன் வைரஸ்களை செலுத்தும் முறை அமெரிக்காவில் கைவிடப்பட்டது. அங்கு ஹெபடைடிஸ், ஃப்ளூ ஆகியவற்றுக்கு இறந்த வைரஸ் செல்களை(புரதம், நியூக்ளிக் அமிலம் நீக்கப்பட்டது) உடலில் தடுப்பூசியாக செலுத்துகிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தியின் ஒரு பகுதியை மட்டுமே எழுப்புகிறது. 1960 ஆம் ஆண்டில் வைரஸ்களை உயிரோடு கையாள்வது பெருமளவு குறைந்துவிட்டது. தற்போது மருந்துகளை இயங்க வைக்க அலுமினிய உப்புகள், மோனோ சோடியம் குளூட்டமேட் திமெரோசால் உள்ளிட்ட சமநிலையாக்கிகள் பயன்படுகின்றன.

4


புத்தகம் புதுசு!

The Truth as Told by Mason Buttle
by Leslie Connor
pp336, Katherine Tegen Books

தனக்காக படிப்பதற்கே பினாமி தேடும் நிலையிலுள்ள மேஷன் படில் என்ற கற்றல் குறைபாட்டுச் சிறுவனின் கதை இது. கதையினூடே தன்னம்பிக்கை, சுய அடையாளத்தை மீட்பது என சிறுவர்களுக்கான அற்புத நூலாக படைத்திருக்கிறார் லெஸ்லி கானர். நண்பன் பென்னியின் இறப்பு, கால்வின் தொலைந்து போவது என மேஷனுக்கு வரும் பிரச்னைகளிலிருந்து அவன் மீள்வதே சுவாரசிய மையம்.

Shadow Weaver
by MarcyKate Connolly
308 pages
Sourcebooks Jabberwocky

எம்மிலைனுக்கு நிழல்களை கட்டுப்படுத்தும் சக்தி உண்டு. அவளின் நிழலான தார் தோழியாகவும் மாறுகிறது. தோழி வில்லியாகும் போது என்னாகும்? அதேதான் எம்மிலைனுக்கும் நேர்கிறது. நிழல்,பயம், திகில் என உணர்வுகளை கலந்து சுவாரசியமாக இந்நூலை மார்சிகேட் கனோலி எழுதியுள்ளார்.

தொகுப்பு: கா.சி.வின்சென்ட்
நன்றி: முத்தாரம்