ஸ்வீட் நவம்பர்!- காதல் கவிதைகள்!





Image result for love






குமுதம் பல புதிய பகுதிகளை திடீரென ஆரம்பித்து ஆச்சர்யமூட்டுவது போல விகடனும் அடிக்கடி சில இணைப்பிதழ்களை கொடுத்து பரவசப்படுத்துவார்கள். அப்படி வெளியான காதல் விகடனிலிருந்து சில கவிதைகள் இங்கே!







எனது காதலை ஒரு குழந்தையாகவோ பொம்மையாகவோ மாற்றத்தெரிந்திருந்தால்  எவ்வளவு நன்றாகயிருந்திருக்கும்
பார்த்ததும் அள்ளிக் கொஞ்சுவாய்!


முட்டை கேக் ஆன்மா!

எனது ஆன்மாவை முட்டை கேக்காக சாக்லெட்டாக மாற்றத்தெரிந்திருந்தால் எவ்வளவு நன்றாகயிருந்திருக்கும்.
உனக்கு பிடித்திருந்தால் சாப்பிடுவாய் இல்லையெனில் குப்பைத்தொட்டியில் எறிந்துவிடலாம்!

-ஜானகிராமன்

இன்னும் கொஞ்சம் அடியேன்டி!

இன்னும் அதிகம் ரசிப்பதுண்டு
என்னை அடித்துவிட்டு
நீ அழுத நிமிடங்களை!

- சண்பகீ. ஆனந்த்


காதல் என்பது..

அதிகாலை அலாரம் வைத்து
விழித்திருந்து நிறுத்துவது
மதில்சுவர் நண்பர்களை
மறைந்திருந்து கழட்டுவது

குதிரினிலே நெல்லைப்போல்
வார்த்தைகளை நிரப்புவது
எதிரினிலே பார்த்துவிட்டால்
வழக்கம்போல் சொதப்புவது

-நா.முத்துக்குமார்


தனி எறும்பு!

சென்ற மார்கழியை
இனிப்பு பலகாரம்போல
சுவைத்தோம் இருவரும்.
இந்த மார்கழியில்
தனி எறும்பாக
அலைந்து கொண்டிருக்கிறேன்!

- முகுந்த் நாகராஜன்.


நீயும் நானும் நாமாக!

வானளாவிய உன் உயரம்
அதன் கிளையைப் பற்றிக்கொள்ள,
எனக்கோ வேர்தான் வாய்த்தது!

-தாமரை




நன்றி: காதல்விகடன் 17.2.2010



பிரபலமான இடுகைகள்