கல்யாணம் செய்ய 3 லட்சம் போதும்! - இளைஞரின் சூப்பர் பிளான்
கல்யாணத்தில் செலவுகளை கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமே கிடையாது. புடைவைகள், நகைகள், போக்குவரத்து, கல்யாண சாப்பாடு என செலவுகள் எங்கு பார்த்தாலும் காட்டாறாக உடைத்து ஓடும். ஆனால் ஹரிகிருஷ்ணன் கல்யாணத்தை மூன்று லட்சத்தில் முடித்து தருகிறோம் என ஆச்சரியப்படுத்துகிறார்.
3 லட்சத்து 33 ஆயிரத்து 333 என ராசி எண்கள் போல தன் திட்டத்தை விளம்பரப்படுத்தியுள்ளார் ஹரி. இதே காசில் ஆறு கல்யாணங்களையும் முடித்து வைத்து சாதித்துவிட்டார் ஹரி. அடுத்த நான்கு லட்சரூபாய்க்கான பேக்கேஜையும் தன் குழுவினருடன் விவாதித்து வருகிறார். மூன்று லட்ச ரூபாயில் என்ன விஷயங்கள் வரும்?
மாப்பிள்ளை, மணமகள் மேக்கப், மணமேடை அலங்காரம், திருமணம், ரிசப்ஷன், வீடியோ, போட்டோ, ஐநூறு பேருக்கு சாப்பாடு(இரவு), நூற்று ஐம்பது பேருக்கு காலை உணவு, புரோகிதர் ஏற்பாடு, மங்கள வாத்தியம் என அத்தனையையும் அடித்து பிடித்து பேக்கேஜ் ஆக்கியுள்ளார் இந்த இளைஞர். "2017 ஆம் ஆண்டு ஹாசு என்ற ஆலோசனை நிறுவனத்தை தொடங்கினேன். இது முதலில் போட்டோகிராபர்கள் மற்றும் அலங்காரம் செய்பவர்களை ஏற்பாடு செய்து தரும் நிறுவனம்தான். குறைந்த விலையில் இதனை செய்து பிசினஸில் ஜெயித்தோம். முதலில் வேறு நிறுவனங்களோடு இணைந்து மூன்று லட்சரூபாய் கல்யாணங்களை செய்ய நினைத்தாலும் பலரும் ஐடியா அளவில் மட்டுமே ஏற்றனர். வண்ணாரப்பேட்டையில் முதல் கல்யாணத்தை 3 லட்சத்து 39 ஆயிரத்துக்கு செய்தோம். பின்னர் 3,33,333 பிளானை ரெடி செய்தோம். " என்று புன்னகைக்கிறார் ஹரிகிருஷ்ணன்.
நன்றி: கே.வி.நவ்யா, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்