ஆமைகளை காப்பாற்றும் கடல்கன்னி!
கடல் உயிரிகளுக்கும் நேசம் தேவை!
உயிரியல் பட்டதாரியான கிறிஸ்டைன்
ஃபிக்கனர், 2015 ஆம் ஆண்டு கோஸ்டா ரிகா கடல் பகுதியில் ஆமை ஒன்றை பார்த்தார். மூக்கில்
குளிர்பான ஸ்ட்ரா குத்தி உயிருக்கு போராடியதைப் பார்த்து அதனைக் காப்பாற்றினார். அம்முயற்சியை
பதிவு செய்த 8 நிமிட வீடியோ, சூழலியல் உலகையே புரட்டிப்போட்டது.
தினசரி அமெரிக்கர்கள் மட்டும்
390 மில்லியன் ஸ்ட்ராக்களை பயன்படுத்துகின்றனர். 8 மில்லியன் மெட்ரிக் டன்கள் பிளாஸ்டிக்
கழிவுகள் கடலில் கொட்டப்பட்டு வருகின்றன. ஜெர்மனியில் பிறந்து டெக்சாஸில் ஆய்வுப்பட்டம்
பெற்ற கிறிஸ்டைன் பள்ளி, கல்லூரிகளில் சூழலியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
“ஒரு சிறிய பிளாஸ்டிக் ஸ்ட்ரா, என்ன செய்யும் என்பதை அந்த வீடியோ மக்களுக்கு உணர்த்திய
வேகம் அபாரமானது” என்கிறார் கிறிஸ்டைன். “அமெரிக்கர்கள் பலருக்கும் அறிவியலாளர் என்றால்
வெள்ளையர்களே நினைவுக்கு வருகிறார்கள். அவர்கள் நிறம், வர்க்கம் எதுவாக இருந்தாலும்
அறிவியல் ஆய்வுகளில் இறங்கவேண்டும் ஊக்கம் கொடுத்து உதவுவதே எனது லட்சியம்” என புன்னகைக்கிறார்
கிறிஸ்டைன் ஃபிக்கனர்.