அசாமின் சாலைகளை செப்பனிடும் தன்னார்வலர்! - கௌதம்
1 |
2 |
மாவட்ட கமிஷனர் சாலையை பார்வையிடும் காட்சி |
சுகாதார விழிப்புணர்வு ஓவியங்கள் |
அசாமின் சாலை மனிதர்
கௌதம் பர்டோலய்
அசாமில் பிரம்மபுத்ரா ஆற்றில்
கரையோரத்தில் அமைந்துள்ள திப்ருகார், ஆண்டுதோறும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் ஊர்.
இவற்றை ஊர் நிர்வாகம் சரிசெய்தாலும் அவற்றை முழுமையாக சரி செய்யமுடியவில்லை. கௌதம்
இப்பொறுப்பை தன் முதுகில் ஏற்று சுமக்கிறார். ஆம். ஏறத்தாழ ஏழு ஆண்டுகளாக இங்குள்ள
சாலைகளை, கழிவுநீர் பாதைகளை சரியாக அமைத்து சீர்செய்துவருகிறார். இதனை வெள்ளப்பாதிப்பு
ஏற்பட்டபோதும் இடைவிடாது தொடர்ச்சியாக செய்துவருகிறார்
என்பதை நீங்கள் அறிவது முக்கியம்.
இவர் தனது பணிகளை ஹெரம்பா
பர்டோலய் என்ற சாலையை செப்பனிடுவதிலிருந்து தொடங்கினார். இவரது தந்தையின் பெயர்தான்
அந்த சாலைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவரது தந்தை ஆசிரியர், சமூக சேவகர், பத்திரிகையாளர்
என பன்முகம் கொண்டவர். சாலைகள் மட்டுமன்றி, தொன்மையான கலாசார கட்டடங்களையும் பாதுகாக்க
நிதியுதவி அளித்து வருகிறார்.
”ஹெரம்பா பர்டோலஸ் சாலை
நீங்கள் இப்போது பார்ப்பதை விட இரண்டு அடி தூரம் குறைவாகவே இருந்தது. சாலைகள் உடைந்துபோய்
கழிவுநீர் பாதைகள் அடைபட்டும் கிடந்தன. அவற்றை நாங்கள் சரிசெய்தோம்.” என்கிறார் 48
வயதான கௌதம் பர்டோலய். இவரது தந்தை ஆசிரியராக பணிபுரிந்தார். கிடைக்கும் வருமானம் குறைவு
என்றாலும், சாலையை அடிக்கடி செப்பனிட்டுக்கொண்டே இருப்பாராம். இதனால் 2008ஆம் ஆண்டு
அவர் இறந்தபிறகு, அப்பாவின் பணியை கௌதம் ஏற்று செய்துவருகிறார். சீனாவில் தொழில்நிறுவனம்
நடத்திய கௌதம் அதில் கிடைத்த பணத்தைக்கொண்டுதான், தனது மாநிலமான அசாமில் பணிகளைச் செய்யத்
தொடங்கியிருக்கிறார். சீனாவின் அடிப்படை வசதிகளைப் பார்த்தவர், தனது மாநிலத்திலுள்ள
சாலைகளின் தரத்தைப் பார்த்து மனம் நொந்திருக்கிறார். தனது சொந்தப்பணத்தைப் போட்டு சாலைகளை
செப்பனிடத் தொடங்கியிருக்கிறார். அரசு நிர்வாகம் இவருக்கு பெரியளவில் உதவிகளைச் செய்ய
முன்வரவில்லை. இவர் ஏதோ செய்கிறார் என்று நெருங்கியவர்களும் பணம் கேட்பாரோ என்ற தள்ளியே
நின்றிருக்கின்றனர். சோலார் தெருவிளக்கு, பிவிசி வேகத்தடைகள், சிசிடிவி கேமராக்கள்
அமைத்துவிட்டார். அடுத்து செய்ததுதான் முக்கியமான விஷயம். சாலையை திறந்து வைக்க மாவட்ட
கமிஷனரை அழைத்திருக்கிறார். அவர் எப்போதும் புகார்களைக் கொடுக்க அழைப்பவர்கள், சாலையை
திறந்து வைக்க அழைக்கிறார்களே என்று கேள்வியுடன் வந்தவருக்கு, கௌதம் அமைத்த சாலைகள்
இன்ப அதிர்ச்சியாக இருந்தன. இவற்றை அமைக்க 13 லட்சத்தை செலவழித்திருந்தார்.
ஒற்றை சாலையோடு நிறுத்தாமல்,
பிற சாலைகளையும் செப்பனிட மூன்று பணியாளர்களை நியமித்தார். அந்த தெருக்களில் வசிக்கும்
முக்கியமானவர்களின் பெயர்களை அவற்றுக்கு சூட்டினார். இவை பலரையும் ஈர்க்கும் என்று
நினைத்திருக்கிறார் கௌதம். தான் படித்த பள்ளி, மேலும் பல்வேறு தொன்மையான கட்டடங்களையும்
புதுப்பிக்கும் பணிகளைத் தொடங்கி செய்திருக்கிறார். இந்த ஆண்டில் மதுர்ஜோயா சாலையை
செப்பனிடத் தொடங்கியிருக்கிறார். இவரின் பணியில் சால்ட் ப்ரூக் அகாடமி இணைந்து ஓவியர்களை
வைத்து தெருவிலுள்ள சுவர்களை அழகிய முரல் ஓவியங்களால் அழகுபடுத்தியிருக்கிறது. அவை
அனைத்தும் சுகாதாரம் பற்றி மக்களுக்கு வலியுறுத்துகின்றன.
“’தில்ப்ரூகா பகுதி இன்று
புத்துயிர் பெற்று எழுந்துள்ளது. சுகாதாரமாக இருப்பது பற்றி மக்கள் இன்று யோசிக்கத்
தொடங்கியுள்ளனர். இப்பகுதி அழகுற இருப்பது மக்களின் கையில்தான் உள்ளது’
என்கிறார் சாலை மனிதர் கௌதம் பர்டோலய்.
கருத்துகள்
கருத்துரையிடுக