உலக வல்லரசுகளை பிரமிக்க வைக்கும் ஹூவெய் நிறுவனம்! - ரென் ஜெங்ஃபெய்








Ren Zhengfei's Interview with the Financial Times - Huawei





ரென் ஜெங்ஃபெய்

அமெரிக்கா, இங்கிலாந்து என பல வல்லரசு நாடுகள் அடித்துவிரட்டும் பன்னாட்டு நிறுவனத்தை தொடங்கியவர் இவர்தான். இவரின் ஹூவெய் நிறுவனம், ஸ்மார்ட்போன்களை மட்டும் தயாரிக்கவில்லை. தொலைத்தொடர்பு தொடர்பான சாதனங்களை தயாரித்து வருகிறது. பிஎஸ்என்எல் 4ஜி லைசென்ஸ் வாங்கவே முக்கிக்கொண்டிருக்கிறது. ஆனால் ஹூவெய் நிறுவனம், 5 ஜி சேவையை வழங்குவதற்கு தயாராகிவிட்டது.

ரென், கேட்ஸ் போல டெக் விஷயங்களில் கெத்தான ஆள் கிடையாது. ஆனால் 1987ஆம் ஆண்டு 5, 600 டாலர்கள் முதலீட்டில் ஹூவெய் நிறுவனத்தை தொடங்கினார். தி ஹூவெய் ஸ்டோரி என்ற நூலை படித்தால் நிறுவனத்தை எப்படி வளர்த்தார் என்பதை உணர முடியும். 2018ஆம் ஆண்டு 170 நாடுகளில் கிளைபரப்பி 107 பில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டியது.

ரென், சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியோடு தொடர்பில் இருக்கிறார் என்று ஆஸ்திரேலியா, ஜப்பான், ஆகிய நாடுகள் ஹூவெய் நிறுவனத்தின் ஒப்பந்தங்களை ரத்து செய்து அதன் தொழில்நுட்பத்தை தடை செய்துள்ளனர். மேலும் இந்த நிறுவனத்தின் தொழில்நுட்பங்கள், பிற நாடுகளை சீனா உளவு பார்க்க பயன்படுத்தும் என்றும் வதந்திகள் பரவின. இதற்கெல்லாம் மேலாக நிறுவனத்தின் இயக்குநரான ரென்னின் மகள் மெங் வாங்சூ மீது ஊழல், பணம் கையாடல், நீதிச்சட்டங்களை அவமதித்த குற்றச்சாட்டுகள் என அடுக்கடுக்காக பதிவு செய்யப்பட்டது. கனடாவில் இருந்தபோது அவருக்கு இந்த அவமானங்கள் நேர்ந்தன. ஆசியாவில் மிகப்பெரிய டெக் நிறுவனமான ஹூவெய் வளர்ந்து வந்தது உண்மைதான். அரசியல் காரணங்களுக்காக, காழ்ப்புணர்வுக்காக இந்த நிறுவனத்தை இன்றுவரை பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கி வருகிறார்கள். ரென் வல்லரசு நாடுகள் முன்வைக்கும் சீன அரசுடன் நெருக்கம், அதிகாரத்தை பயன்படுத்துதல் ஆகிய புகார்களை முன்னமே மறுத்து வந்திருக்கிறார்.

ஹூவெய் மேற்கு நாடுகளின் ஏடி&டி, வெரிசோன் போன்ற நிறுவனங்களைப் போலவே தொலைத்தொடர்பு வணிகத்தில் முன்னேறிவருகிறது. வித்தியாசம், இவர்கள் தரும் சேவையை விட சிறப்பான சேவையை மலிவான விலையில் தரமாக வழங்கி வென்றார் என்பதுதான். இனி வரும் காலத்திலும் ரென்னின் ஹூவெய் நிறுவனத்தை அதிக காலத்திற்கு தடைகளை கூறி தடுத்து நிறுத்தமுடியாது என்பதே உண்மை.

டைம்

சார்லி கேம்ப்பெல்


கருத்துகள்