இயற்கையை பாதிக்காமல் வணிகம் செய்வதை ஊக்கப்படுத்தியவர் - ஹோஸங் லீ
போப் பிரான்சிஸ் - தமிழ்வெப்துனியா |
போப் பிரான்சிஸ்
2019ஆம் ஆண்டு போப்புக்கு,
கத்தோலிக்க தேவாலயங்களில் பூதாகரமாக கிளம்பிய பாலியல் புகார்களை ஆராய்ந்து அதனை தீர்ப்பதற்கே
நேரம் சரியாக இருந்தது. இப்புகாரில் குழந்தைகள் சிக்கியது பெரிய சிக்கலாக மாறியது.
இதனால் தேவாலயம் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து உண்மையைக் கண்டறிய சந்திப்புகளை நடத்தினார்.
இனிமேல் குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது பற்றிய விதிகளை வகுக்கத்
தொடங்கியுள்ளார்.
இந்த விவகாரத்தில் போப்
பிரான்சிஸ் காட்டிய தீவிரம் அனைவரையும் வியக்க வைத்தது. பாதிப்பை ஏற்படுத்தியவர்களை
விட பாதிக்கப்பட்டவர்களை இயேசுவாகவே கருதி நடத்தினார். இந்த சமூகத்தீமையான செயல்பாட்டிற்கான
காரணத்தை இவர் விரைவில் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது. தனது புத்தியைக் கடந்து இதயம்
சொல்லுவதைக் கேட்டு செயல்படுபவராக போப் மக்களின் கண்களுக்கு காட்சிதருகிறார். இம்முறையில்
பாதிக்கப்பட்டவர்களுக்கு மக்கள் மன்றத்தில் நீதிபெற்று தருவார் என நம்பலாம்.
ஜார்ஜ் சிசிகுலனா
ஹோஸங் லீ - கார்பன் ப்ரீப் |
ஹோஸங் லீ
பருவச்சூழல் மாறுபாடு பற்றிய
ஐபிசிசி அமைப்பின் தலைவராக உள்ளார் ஹோஸங். இந்த அமைப்பு உலகளவில் சக்தி வாய்ந்த சூழல்
முடிவுகளை எடுக்கும் அமைப்பாகும். கொரியாவில் பருவச்சூழல் மாறுபாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான
செயல்பாடு பாராட்டத்தகுந்தது. பொதுவாக இந்தவகை அமைப்புகளின் செயல்பாட்டு அறிக்கை துறைசார்ந்தவர்களுக்கு
மட்டுமே புரியும். ஆனால் ஹோஸங் தயாரித்து அளிக்கும் அறிக்கை சாதாரண மக்களுக்கும் கூட
புரிந்துகொள்ளும்படி இருக்கும். இவர் தயாரித்த 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வு
பற்றிய அறிக்கை முக்கிய கவனம் பெற்றது. இதில் 2050ஆம் ஆண்டுக்குள் மனிதர்கள் கார்பன்
டை ஆக்சைடை கட்டுப்படுத்த வேண்டியது பற்றி தீர்க்கமாக குறிப்பிட்டிருந்தார் ஹோஸங்.
சூழல் திட்டங்களை பாதிக்காமல்
வணிகம் செய்வதற்கான முயற்சிகளிலும் இவர் தீவிரமாக ஈடுபட்டார். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான
மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தன. இதன்காரணமாகவும் இவரது பணி மீது நாம் அக்கறை கொண்டு
புகழ்ந்து பேசுகிறோம்.
பான்கி மூன்
கருத்துகள்
கருத்துரையிடுக